/> ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Thursday, 27 August 2015

குபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா..? யோகமா?

குபேரர் படங்கள்,சிலைகள் இப்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன...பூஜை அறையிலும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்..இதில் ஒரு சிக்கல் இருக்கிறது 30 வருடத்துக்கு முன்பு இல்லாத வாஸ்து பகவான் போலத்தான் குபேரனும்.50 வருடங்களுக்கு முன்பு கூட லட்சுமி படம் வைத்து வழிபட்டனர் ,,,ஆனால் குபேரன் இல்லை..குபேரனுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்..? புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா..?இதுவெல்லாம் யோசிக்க வேண்டும்

ராவணன் தம்பி குபேரன் என விக்கிபீடியா சொல்கிறது..அரக்கர் குலத்தை சேர்ந்த கடவுள்....குபேரனை விட சிறப்பு மகாலட்சுமிதான்...காரணம் அதில் இருக்கும் மங்கள சின்னங்கள்.மகாலட்சுமியின் சிரிப்பும், அழகும் ,கனிவான,கலையான , தோற்றமும் நம்பிக்கையை தருகிறது...குபேரன் தொந்தியும் ,தொப்பையுமாக இப்போதுள்ள தமிழனை போல சோமபலாக இருப்பதும் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.. இப்படியும் யோசிச்சு பார்த்துட்டேன் :-)

எனக்கென்னவோ  மகாலட்சுமி உருவத்தில்தான் அதிக பாசிட்டிவ் சக்திகள் கிடைக்கின்றன.....என்றுதான் நினைக்கிறேன்.குபேரரை வழிபட நினைப்போர் திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ராசிக்கும் குபேரர் மீன் வாகனத்தில் அருள்கிறார். அங்கு சென்று வழிபட்டு வரலாம்..வீடு,அலுவலகம் முழுக்க குபேரர் படங்களாக மாட்டி வைக்காதீர்!!
மேலும் வாசிக்க"குபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா..? யோகமா?"

Post Comment

Tuesday, 25 August 2015

ஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ்

ஜோதிட சூட்சுமங்கள் 2 ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும் முறை

ஜாதகம் பார்க்கும்போது ஜோதிடர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என என் குரு சொல்வார்..அதை கீழே கொடுத்துள்ளேன்.


1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம்
2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை
3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம்
4.நாளும் ஓரையும்
5.ஓரையும் கெள்ரியும்
6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )
7.யோகத்தின் 27 விபரம் 
8.அயன விபரங்கள் 
9.கரணத்தின் பலாபலன்
10.லக்னத்தில் இருப்பவர்
11.லக்னத்தை பார்த்தவர்
12.லக்னாதிபதி நின்ற ஸ்தானம் 
13.லக்னாதிபதி பார்த்த ஸ்தானம் 
14.லக்னாதிபதியுடன் சேர்ந்தவர்
15.லக்னாதிபதியை பார்த்தவர்கள் 
16.லக்கின சாரம் 
17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
18.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
19.லக்கின சுபர் -பாபர் -யோகர்-மாரகர்
20.ராசிக்கு சுபர் -பாபர்-யோகர்-மாரகர்கள்
21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..?
22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்
23.திசாநாதனுக்கு புத்திநாதன் எங்கே..?
24.திசாநாதனை பார்த்தவர்கள்
25.திசாநாதனை சேர்ந்தவர்கள்
26.திசாநாதன் நின்ற இடம்
27.திசாநாதன் பார்த்த இடம்
28.புத்தி நாதன் நின்ற இடம்
29.புத்தி நாதன் பார்த்த இடம்
30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..? என்ன பலன்..?

31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..?


32.திசாநாதனை கிரகங்கள் சேராதபோது..?
33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..?
34.ராகுபகவானின் நிலைபாடுகள்
35.கேதுவின் நிலை
36.பருவகால விபரங்கள்
37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்
38.பஞ்சவித ஸ்தானம்
திரிகோணம் -1,5,9
கேந்திரம் -1,4,7,10
உபஜெயம் -3,6,10,11
அபோலிகம் -3,6,9,12
பணபரம் -2,5,8,11

39.வருஷாதிபன்
40.மாதாதிபன்
41.வாராதிபதின் 
42.ஹோராதிபன்
43.அந்த்ராதிபன்
44.தினகால திரிபாகாதிபன்
45.ஆகுல தோஷம்
46.கிரகண தோசம்-சூரிய கிரகணம்
47.கிரகண தோசம்-சந்திர கிரகணம் 
48.லக்ன தியாஷ்யம் 
49.வார தியாஷ்யம்
50.திதி தியாஷ்யம்
51.நட்சத்திர தியாஷ்யம்

மேலும் வாசிக்க"ஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ்"

Post Comment

Monday, 24 August 2015

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்

மேசம்  -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி

ரிசபம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மிதுனம் -சிதம்பரம் நட்சராஜர் தட்சிணாமூர்த்தி

கடகம் -திருசெந்தூர் முருகன் கோயில் தட்சிணாமூர்த்தி

சிம்மம்-கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி 

கன்னி -சங்கரன்கோயில் தட்சிணாமூர்த்தி

துலாம் -மதுரை மீனாட்சி கோயில் தட்சிணாமூர்த்தி 

விருச்சிகம் -திருப்புடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்)

தனுசு -ஆலங்குடி கோயில் தட்சிணாமூர்த்தி

மகரம் -திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி 

கும்பம் -திருக்கடையூரமுதகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மீனம் -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி
மேலும் வாசிக்க"12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்"

Post Comment

கோட்சார சனியின் பலன்கள்

கோட்சாரத்தில் சனி பகவான் 3,6,11ஆம் ஸ்தானங்களில் அமரும்போது நல்ல பலன்களை தருகிறார்.5,9,10 ஸ்தாங்களில் ஓரளவு நல்ல பலன்களையும் தருகிறார்..

12ல் அமரும்போது விரய சனியாகவும் (தற்சமயம் தனுசு  ராசிக்கு )
1ல் அமரும்போது ஜென்மசனியாகவும்(தற்சமயம் விருச்சிகம் ராசிக்கு)
2ல் அமரும்போது பாத சனியகவும் (தற்சமயம் துலாம் ராசிக்கு) அமர்ந்து பலவித துன்பங்களை தருகிறார்

ஜோதிட பாடல்;
கண்டங்கள் நான்கில் எட்டில் கருதிய சனி வரின்
தெண்டங்கள் மிகவும் உண்டாம் திரவியங்கள் சேதமாகும்

என வீமகவி ஜோதிட நூல் சொல்கிறது.

விளக்கம் ;ஜாதகத்திலும்,கோட்சாரத்திலும் 4,7,8 ஸ்தானங்களில் சனி அமரும்போது தெண்டச்செலவுகளையும், பொருள் விரயங்களையும் ஏற்படுத்தி விடுகிறார் .அதில் அஷ்டம சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

 4ல் சனி தற்சமயம் -சிம்மம்
7ல் சனி தற்சமயம் -ரிசபம் 
8ல் சனி தற்சமயம் -மேசம்

30 வயதை கடந்தவர்களுக்கு ஏழரை சனி கடுமையான பாதிப்பை தருவதில்லை...திசாபுத்தி யில் சனி சம்பந்தம் வந்தால் அதிகம் பாதிக்கும்...
மேலும் வாசிக்க"கோட்சார சனியின் பலன்கள் "

Post Comment

Saturday, 22 August 2015

2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்

 2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..

கடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்..? புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.


கும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம்  ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...

 2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.

 லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.

 வாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..
மேலும் வாசிக்க"2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்"

Post Comment

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner