/> நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 22 October 2010

நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி?

ஒருவரது பிறந்த தேதி மற்றும் தேதி,மாதம் வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் ஆகியவற்றை கணித்து பார்த்து பெயர் எண் அமைப்பது நியூமராலஜி ஜோதிடம் ஆகும்.


உதாரணமாக
ஒருவர் 15.1.1968 ல் பிறக்கிறார் என்றால் பிறந்ததேதி எண் 15 ஆகும். இவர் உயிர் எண் 6.   4 இவரது விதி எண் 4 ஆகும்.


இதற்கு பெயரை அதிர்ஸ்டமான எண்ணில் அமைக்க வேண்டுமெனில் பிறந்த தேதி 6-ம் எண்ணில் அமைக்கலாம்.  இதில் 15 ,24 ,33, 6 ,60 எண்கள் சிறப்பானவை ஆகும்.  அப்படியானால் பிறந்த தேதி எண் எதுவோ அந்த எண்ணில் பெயர் வரும்படி வைத்துக் கொண்டால் அதிர்ஸ்டம் வருமா என்று கேட்டால் வராது. 2 ,11 ,20, 29 ,  3 ,12 ,21,   4 ,13, 22, 31,  7 ,16, 25 ,8 ,17, 26 ,18 தேதிகளில் பிறந்தோர்க்கு அதே எண்ணில் வைக்க இயலாது. 3, 12, 21 ,30 தேதிகளில் பிறந்தோர்க்கு 6ம் எண் 8ம் எண் கடும் பகை ஆகும். வாழ்வில் கடும் போராட்டங்களையும் சோதனைகளையும் ஏற்படு;த்தும் நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்களை தரும்.  திருமண தடை உண்டாக்கும் குழந்தைப் பாக்கியம் தடை உண்டாக்கும். தொழில் அமையாது. சரி இவர்களுக்கு பிறந்த தேதி கூட்டு எண் 6 வந்தால் 6-ம் எண் வைக்கலாமா என்று கேட்டால் வைக்கலாம் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.


8,1726-ல் பிறந்தோர்க்கு பொதுவாக 5-ம் எண் பெயர் வைத்தால் நல்லது நடக்கும். 211, 20,29 தேதிகளில் பிறந்தோர்க்கு1,10,19 ,15, 24 ,33 , 5, 14, 23,41 50, 59 – ல் பெயர் வைக்கலாம் நன்மையே செய்யும்.


4, 13, 22, 31-ல் பிறந்தோர் முன்கோபம் பிடிவாதம், டென்சன் அதிகம் உடையவர்கள்.  பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்குவதில்லைää கடன் வாங்கினால் திரும்ப செலுத்த முடிவதில்லை கடன் கொடுத்தால் திரும்ப வாங்க முடியாது. பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டால் இவர்கள் தான் கட்ட வேண்டும். எனவே இவர்கள் பெயர் எண்ணை சரியாக அமைத்துக் கொண்டால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் தான் சொல்வது தான் சரிமற்றவர்கள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்ற போக்கை இவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் நல்ல பேச்சுத் திறமை உடையவர்கள்.  எப்போதும் பேசிக் கொண்டே இருப்பர். சில நேரம் இவர்கள் பேச்சு மற்றோர்க்கு எரிச்சலை தரும் பேச்சில் நிதானம் தேவை.


2 11 20 29 தேதியில் பிறந்தோர் எப்போதும் ஏதேனும் ஒரு கவலையிலேயே இருப்பர்.  வீண் பயம் அதிகம் உண்டு. மனக்குழப்பத்தால் எந்த காரியத்தையும் முழுமையாகää சரிவர முடிக்க மாட்டார்கள். தன்னம்பிக்கை குறைவாக உடையவர்கள் பொறுமை என்றால் மகாத்மா காந்தி போலää கோபம் வந்தால் ஹிட்லர் போல ஏன் இவர்களை சொல்கிறேன் என்றால் இரண்டு பிரபலங்களும் 2-ந் தேதி பிறந்தவர்களே. இவர்களும் அதிக செலவாளிகள். கடனில் சிக்கித் தவிப்பவர்கள் பெயரை சரியாக அமைத்துக் கொண்டால் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பார்.


8 17 26 தேதிகளில் பிறந்தோர் வாழ்வில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க கூடியவர்கள். எதை தொட்டாலும் நஷ்டம், வீண் அலைச்சல் ஏற்படுகிறது சின்ன விஷயத்திற்கு கூட அதிகம் மெனக் கெடுபவர்கள் இவர்கள் தான் பெயரை சரியானபடி அமைத்துக் கொண்டால் முன்னேறுவர்.


3, 12 ,21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் நண்பர்களால் கெட்ட பெயர் உண்டாகும்ää பண இழப்பு உண்டாகும்.  பிறரை எளிதில் நம்பி விடுவார்கள். இவரிடம் யாரேனும் உதவி கேட்டால் ராத்திரி பகல் பாராது உதவி செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். ஜாமீன் கையெழுத்து இவர்கள் போடவே கூடாது கடன் தொல்லையை இவர்களும் அனுபவிக்கின்றனர்.


Related Article:

Post Comment

3 comments:

வல்லிசிம்ஹன் said...

எனக்கு எண்களில் மிக மிக நம்பிக்கை. என்னவோ சில எண்களிடம் பயமும் உண்டு.:(

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

vidivelli said...

supper pakirvu..

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner