/> 2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 10 April 2011

2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்


2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்சனிப்பெயர்ச்சி யில் என்ன அதிசயம் இருக்கிறது..?இது வழக்கமாக இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடப்பதுதானே என்கிறீர்களா.துலாம் வீடு சனியின் உச்ச வீடு.இந்த வீட்டை ஒரு முறை சனிபகவான் வந்தடைய 30 வருடம் ஆகும்.30 வருடத்திற்கு பின் சனி பகவான் இந்த வீட்டிற்கு வந்தடைகிறார்.சனி சக்தி வாய்ந்த கிரகம்.ஒருவர்ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருப்பின் ஆரம்ப வாழ்க்கை துன்பத்திலும்,பிற்கால வாழ்க்கை புகழ் பெற்றதாகவும் அமையலாம்.

சனிதான் கடும் உழைப்பிற்கு அதிபதி.சனி ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லாவிடில் அவன் சோம்பேறி.வேலையாள் கூட மிரட்டுவான்.அதே சமயம் சனி ஓவராக வலுத்துவிட்டால் புதனும் பார்த்துவிட்டால் அவர் மாதிரி சிறந்த தந்திரக்கார திருடனை பார்க்க முடியாது...தாவூத் ஜாதகத்தில் சனி அப்படித்தான் அமர்ந்திருக்கிறாரோ..என்னவோ..சந்தன கடத்தல் வீரப்பன் ஜாதகத்தில் சனி ,புதன் பலம் மிக்கதாய் இருந்திருப்பார்கள்.


சனி தன் உச்ச வீடாகிய துலாம் வரும்போது,உலகில் சனி காரகத்துவம் எல்லாம் மதிப்பு வாய்ந்ததாகவும்,பேசப்படுவதாகவும் அமையலாம்...30 வருடத்திற்கு முன்பு சனி துலாம் வரும்போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சி செய்..என என் ஜோதிட நண்பர் ஒருவர் சொன்னார்.சனி இரும்பு தொழிலுக்கு அதிபதி.பெரிய பெரிய மாஃபியா கும்பல்களுக்கு அதிபதி...இரும்பு சார்ந்த ஷேர்கள் மார்க்கெட்டில் திடீர்னு தாறுமாறா எகிரலாம்.குறிச்சி வெச்சுக்குங்க.

குருப்பெயர்ச்சியின் போது குரு மகரத்தில் நீசமாச்சே...அப்போதான் குரு காரகத்துவமான பணம் (டாலர்) அதள பாதாளத்தில் விழுந்தது.இன்னொரு காரகத்துவம் தங்கம் கடுமையாக ஏறுக்குமாறாக உயர்ந்தது..ஏழைகளுக்கு எட்டாக்கணி ஆனது..குருவின் இன்னொரு காரகத்துவம் மஞ்சள் திடீர்னு தங்கத்துக்கு நிகரா உயர்ந்து நின்றது...இதற்கு காரணம் என்ன..?மஞ்சள் மற்றும் தங்கம் தட்டுப்பாடுதான் விலை உயர்வுக்குகாரணம்.குரு கெட்டதால் இது ஏற்பட்டது...குரு கடகம் வந்து உச்சம் ஆகும்போது தங்கம் பதுக்கி வைக்கப்பட்டது,மூழ்கிபோனது,புதையல் தங்கம் எல்லாம் வெளியே வரும் அதாவது,கடலுக்குள் மறைந்திருக்கும் தங்கம் வெளியே வரும்.

சனி துலாத்தில் உச்சம் ஆகும்போது சனி காரகத்துவ பொருட்களும் அதிக உற்பத்தி ஆகும்....அதிக புழக்கம் உண்டாகும். ...இரும்பு,நீசதொழில்,அழுகும்பொருள் வியாபரம்(முட்டை,காய்கறி,கசாப்புகடை)இவையெல்லாம் இந்த காலகட்டத்தில் செய்திகளில் அதிகமாக அடிபடும்....டாலர் வீழ்ச்சி பற்றி ஒரு வருடத்திற்கும் மேல் பேசினோமே அதுபோல..
துலாத்தில் சனி இருக்கும்போது பிறந்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்.அது எப்படி..?ஒரு கெட்ட கிரகம் ஒரு ஜாதகர் பிறக்கும்போது இருந்த கோட்சாரத்தில் மீண்டும் அதே இடத்திற்கு வரும்போது பாதிப்பை தருவார்.
பிரபலமானவர்களில் யார் துலாத்தில் சனி இருக்க பிறந்தவர்...?கலைஞர் கருணாநிதி..!.

Related Article:

Post Comment

1 comment:

டி.கே.தீரன்சாமி. said...

என்ன தலைவா! எனக்கு பேர்வச்சு

ஊர்வச்ச உங்களுக்கு ஒரு பிரச்சனையா?உங்க பிளாக்க முடக்கி அடக்க நினைக்கிற!உங்க வளர்சியை பிடிக்காத கும்பல! நம்ம கொங்கு நாட்டு பாணியில கட்டுக்குள் கொண்டு வந்தா!சொல்லுங்கா ....டி.கே.தீரன்சாமி,theeranchinnamalai.blogspot.com

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner