/> நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 30 May 2011

நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்


நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்-துக்ளக் சோ

ஜோதிட சாஸ்திரத்தின் கூர்மையை காட்ட ஒரு சில உதாரணங்களை கூறுகிறேன்...இவை நான் அறிந்தவை...கேள்விபட்டவை அல்ல...

சஞ்சய்காந்தி ,விமான விபத்தில் மரணம் அடைந்த போது துக்ளக் ஆஃபீஸில் ஓவியராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு ஸாரதி திகைத்துப்போனார் ஒரு பெரிய அதிசயம் ,எல்லோரும் கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்று பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகையின் பழைய இதழ் ஒன்றை கொண்டு வந்தார் 
பாபுராவ் படேல் அதில் ஜோதிடமும் எழுதிக்கொண்டிருந்தார் அந்த பழைய இதழில் சஞ்சய்காந்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு விமான விபத்தில் உயிர் இழக்ககூடும்...என்று தன்னுடைய ஜோதிட குறிப்புகளில் பாபுராவ் பட்டேல் கூறியிருந்தார் 

எப்படி, இந்த மாதிரி அவரால் சொல்ல முடிந்தது..?ஜாதகத்தை கணித்து அவர் சொன்ன முடிவு அப்படியே பலித்து விட்டது எப்படி..?
குருட்டாம்போக்கு என்று சொல்லி விடலாம்..அப்படி சொல்வது சுலபம்...ஆனால் இந்த மாதிரி ஒரு விசயத்தில் இப்படி முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் வலிமையைத்தான் காட்டுகிறது...

இன்னொரு நிகழ்ச்சி...சி.என்.அண்ணாத்துரையின் மரணம்...,தி.மு.க பிரிவினை (எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டது )இரண்டையுமே 1967 லேயே ஒரு ஜோதிட நிபுணர் கூறியிருந்தார் அவர் பெயர் சுந்தர்ராஜன் (என்னுடன் பள்ளியில் படித்தவர்)அவர் தி அஸ்ட்ரலாஜிக்கல் மாகஸின் என்ற பிரபல ஜோதிட பத்திரிக்கையில் ..1967 ல் தி.மு.க பெரிய வெற்றி பெற்ற போதே ,’’இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தி.மு.க பிளவுபடும்..அதன் நிறுவனதலைவர்களில்  முக்கியமானவர் மரணம் அடைவார் ‘’என்று எழுதியிருந்தார்..

இந்த கணிப்பு வெளியான இதழை 1972-ல் அவர் என்னிடம் காட்டியபோது ,எனக்கு ஆச்சர்யமாக இருந்தது தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட நேரத்தை வைத்துக்கொண்டு தான் இதை கணித்ததாக அவர் என்னிடம் விளக்கினார் 

இன்னுமொரு நிகழ்ச்சி,என் நண்பன் ஒருவன் பெரிய கடனில் சிக்கியிருந்தான் எதுவும் அவன் வாங்கிய கடன் இல்லை ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டு அவன் சந்தித்த பிரச்சனை அது.......பித்து பிடித்தவன் போல அவன் மாறிவிட்டான் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றான் அவனுடைய நண்பர்களாகிய நாங்கள் ஏதோ உதவி செய்தோம்...அதுவும் போதவில்லை திண்டாடிக்கொண்டிருந்தான்...

இந்த நிலையில் என்னை ஒரு ஜோதிடர் சந்தித்தார் என் ஜாதகத்தை பற்றி கூறினார் நான் அவரிடம் என்னை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்..அதனால் சரியாக சொல்ல முடிகிறது..என் நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது ஜாதகத்தை பார்த்து சொல்ல முடியுமா..? என்று கேட்டேன்...அவரும் சம்மதித்தார்.

என் நன்பன் ,கடனில் சிக்கியது,அவனுடைய தற்கொலை முயற்சி என்று எல்லா விவரத்தையும் சரியாக சொல்லி கொண்டே வந்தார் ..பிறகுதான் அதிசயமாக அவர் ஒன்று சொன்னார் கவலைவேண்டாம் இவருக்கு நல்ல காலம்தான் இவருடைய கவலை முழுமையாக தீர்ந்து விடும் இரண்டே மாதத்தில் எல்லா கஸ்டங்களும் மறைந்து விடும் என்று அவர் சொன்னார் நாங்கள் இதை நம்ப முடியாமல் இருந்தோம்...ஏன் என்றால் ,அவன் சிக்கியிருந்த குழப்பம் அப்படிப்பட்டது...

ஆனால் இரண்டு மாதத்திற்குள்ளேயே அந்த நண்பரின் மகன்,தனக்கு தெரிந்த ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் கடன் கொடுத்திருந்த சிலரின் உதவியுடன் ,கடன் கொடுத்திருந்த சிலரை சந்தித்து பெரும் வட்டி கொடுத்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு செய்து முழு கடனையும் பைசல் செய்து விட்டான்...எல்லோருக்கும் நிம்மதி......

இப்படி எல்லாம் கணிக்க வழி சொல்கிற ஜோதிடத்தை பொய் என்று கூறுவது சரியாக இருக்காது..
ஆனால் ஒன்று.. மிக நன்றாக கற்றறிந்த ஜோதிடர் கூட எதிர்காலத்தை துல்லியமாக கணித்து விடுவார் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது 

வராஹிமிஇரரே கிரகங்களின் போக்கை வைத்து சூசகமாக பலன் சொல்லலாம் ஆனால் என்ன நடக்கும் என்பது பிரம்மனுக்கு மட்டுமே துல்லியமாக தெரியும் என்று கூறியிருந்தார் ஆகையால் ஜோதிடத்தை நம்பியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வது புத்திசாலித்தனமல்ல...’’

நன்றி-துக்ளக்

Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner