/> சனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 24 August 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம்


சனி பெயர்ச்சி பலன்கள் 2011;ஜோதிடம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 /sanipeyarchi palankal 2011/ஜோதிடம்/
எண்கணிதம்/வாஸ்து
/tamil astrology


திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,
(15.11.2011) காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி 
ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.

             மங்கள சனீஸ்வரர்-திருநாரையூர்-நாச்சியார் கோயில்

பொதுவாக கோள்களில் மிகப்பெரியதும்,வான மண்டலத்தில் மிக தொலைவில் 

உள்ளதுமாகிய கிரகங்கள் சனியும்,குருவும்தான்.பூமியில் உள்ள உயிர்கள் 
மீதான 
இதன் தாக்கங்கள் அதிகம்.எனவே குருபெயர்ச்சியும்,சனிபெயர்ச்சியும் 
முக்கியமாக 
கவனிக்கப்படுகின்றன...குரு சுபர் என்றால் சனி அசுபர்.குரு நீ செய்றது 
சரியில்லைப்பா..பார்த்து நடந்துக்கப்பா என் அறிவுரை சொல்வதோடு 
சரி.சனி அப்படியில்லை.நீதிமான்.ஒருவன் தவறு செய்திருந்தால் அவனுக்கு 
நிச்சயம்தண்டனைதான்.ஒரு மனிதனின் வாழ்நாளில் 3 முறை சனி வந்து செல்கிறார்.
குழந்தையாக இருக்கும்போது ஒருமுறை..நடுவயதில் ஒருமுறை...வாழ்வின்
 இறுதிபகுதியில் ஒருமுறை.இதற்கிடையில் க்ராஸ் செக் போல அஸ்டம சனியும் 
உண்டு.ஏழரை சனியில் வரும் அத்தனை துன்பங்களும் இந்த இரண்டரை வருட 
அஸ்டம சனி சிலருக்கு கொடுத்துவிடும்.உங்கள் வாழ்வில் நேர்மை,ஒழுக்கம்,
பிறருக்கு உதவுதல்,தான தர்மம் இவையே சனியின் தண்டனையில் இருந்து காப்பாற்ற
 உதவும் ஒரே கருணை மனு ஆகும்.


வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை 
தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று கன்னி,துலாம்,விருச்சிகம் 
ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.

கன்னி;

கன்னி ராசிக்கு ராசிக்கு இரண்டில் சனி பெயர்ச்சியாகிறார்.இதுவரை 
ஜென்மராசியில் இருந்த சனி பாத சனிக்கு மாற இருப்பதால்,ஜென்மசனி விலகுகிறது.
சனியும்,சந்திரனும் ஒன்று கூடினாலே முடக்கம்,ஆரோக்கிய பாதிப்பு,காரிய தடை 
என ஏற்படும்.கடந்த இரண்டரை வருடங்களாக ஜென்மசனியால் சிரமப்பட்ட நீங்கள்,
இனி அப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை ஆகலாம்

.ஜென்மசனி விலகினாலும் ஏழரை சனி விலகவில்லை..எனினும் பாத சனி 
பாதிப்பில்லை.சுபகாரியங்கள் நடக்கும்.கடன்கள் அடைபடும்.அலைச்சல் குறையும்.
தாமதமான காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.கன்னி ராசிக்கு சனி எதுவும் 
செய்யாது என்பார்கள்.காரணம் கன்னிக்கு சனிபூர்வபுண்ணியாதிபதியாகிறார்.
வெற்றியை தரக்கூடியவர் என்பதால் பலருக்கு ஏழரை சனியில்தான் நல்லவை 
நடந்திருக்கின்றன...
கன்னி ராசிக்காரர்களிடம் ரகசியம் தங்காது என்பார்கள்.எனவே மற்றவர்களிடம் 
பேச்சை குறைப்பது நல்லது.இதனால் பல பிரச்சனைகளில் இருந்து தப்ப முடியும்.

ஜென்மராசிக்கு இரண்டில் சனி வரும்போது ஐந்து வருடங்கள் அனுபவித்த 
சோதனைகள் குறைகிறது என்றாலும்,குடும்பத்தில் நிம்மதி குறைவு,எதிர்பாராத 
புதிய செலவுகள்,குடும்பத்தில் பாக பிரிவினை போன்றவை உண்டாகியபடிதான் 
இருக்கும்.எனவே பொறுமையுடன் கவனமாக செயல்படுங்கள்.பேச்சில் நிதானம் 
தேவை.குருவும் அஸ்டமத்தில் இருப்பதால் வரவு செலவுகளில் சிக்கல் காணப்படும்.
மிதமிஞ்சிய செலவுகள் காணப்படும்.செலவுகளை முடிந்தளவு கட்டுப்படுத்தினால் 
எதிர்காலத்துக்கு நல்லது.

மதுரை மீனாட்சியையும்,கள்ளழகரையும் தரிசனம் செய்துவிட்டு 
வாருங்கள்.
நல்லது நடக்கும்.

துலாம்;

துலாம் ராசிக்கு ஏழரை சனி நடந்துவருகிறது.வரும் நவம்பர் முதல் சனி உங்கள்
 ராசிக்கு ஜென்மத்திற்கு வருகிறது.இது அனுகூலமற்ற நிலை ஆகும்.ஏழரை சனி 
ஒருவரை புடம் போட்ட தங்கம் போல மாற்றுகிறது.ஒருவன் ஏழரை சனி 
காலத்தில் எவ்வளவு சோதனைகளை சந்திக்க முடியுமோ அவ்வளவு 
சோதனைகளை சந்திக்கிறான்.சாதரணமாக உறையாடும்போது,
சந்தையில் 
நெருப்பு வீசினாலும் அது சனி பிடித்தவன் தலையில் விழும்’’என்று 
கூறுவார்கள்.
ஒருவருக்கு ஏழரை சனி தொடங்குகின்றபோதே எல்லையில்லாத 
துன்பங்கள் 
உண்டாகின்றன..தொழிலில் வீழ்ச்சி,எடுக்கும் காரியங்களில் தடை,இல்வாழ்வில் 
நிம்மதி குறைவு,பிரயாணத்தில் விபத்து,வருவாய்க்கு மிஞ்சிய செலவு அதனல் 
கடன்கள் போன்ற பலன்கள் உண்டாகும்.கலங்க வேண்டாம்.துலாம் ராசியினர்
 புத்திசாலிக்காரர்கள்.எப்படியும் சமாளிப்பீர்கள்.வரும் முன் காப்போம்
 என்பதுபொல எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் நீங்கள் பிரச்சனைகளை 
சமாளிப்பீர்கள்.இன்னும் இரண்டரை வருடம் ஜென்மசனியை சமாளித்தாக வேண்டும்
.ஜாதகத்தில் சனி 3,6,12 ல் மறைந்திருந்தாலும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் கெடு பலன்கள் குறையும்.திருப்பதி சென்று வாருங்கள்.

விருச்சிகம்;

விருச்சிகம் ராசியினருக்கு நவம்பர் முதல் ஏழரை சனி தொடங்குகிறது.
இருக்கிற சோதனை போதாதா..
இது வேறயா என அலறாதீர்கள்.ஊசி குத்தினாலே தாங்காத நீங்கள் 
கடப்பாரை குத்தையா தாங்கப்போகிறீர்கள்..?இறைவன் காலடியே 
சரண் என நினைப்பவர் நீங்கள்.உங்கள் ராசியில் சந்திரன் நீசம் ஆவதால்
 எப்போதும் டென்சன்,பயம்,குழப்பம் அதிகமிருக்கும்.பிறரிடம் பேசும்போது 
ஆணியடித்தாற்போல தெளிவாக பேசும் நீங்கள் சொந்த விசயங்களில்
 முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.உங்களை காப்பாற்றிக்கொள்ள 
எதையும் செய்வீர்கள்.அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும் உங்களுக்கு,
இந்த ஏழரை சனி காலம் உடல் ஆரோக்கியம்,கணவன்,மனைவி சம்பந்தமான
 பிரச்சனைகளை அதிகப்படுத்தும்படி வருகிறது.வருமானத்தில் தடை,
கொடுத்த பணம் திரும்பாமை என முடக்கம் காணப்படுவதால் கடும் முயற்சியும்,
கடும் உழைப்புமே உங்களை காப்பாற்றும்.

முருகனை வணங்குங்கள்.திருநள்ளாறு சென்று வழிபட்டு வாருங்கள்.
சனிக்கிழமை தோறும் மட்டுமில்லாமல் தினசரி காகத்திற்கு அன்னம் வையுங்கள்.
அனுமன் சலீஸா போன்ற,ஆஞ்சநேயர் ஸ்லோகங்களை படித்து வாருங்கள்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner