/> திருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 25 August 2011

திருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology


திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி..?


ஜோதிடம் திருமண பொருத்தம் விதிகளை கடுமையாக அமைத்திருக்கிறது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது....எவ்வளவு இனிமையான வார்த்தைகள்.பாருங்கள்.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற கண்ணதாசன் வரிகள் இன்னும் திருமண பந்தத்திற்கு பெருமை கூட்டுகிறது.
 
திருமண பொருத்தம் பார்க்க சில விதிமுறைகளை ஜோதிடம் வகுத்துள்ளது.அதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

திருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;

ரோஹிணி,மிருக்சிரீடம்,மகம்,உத்திரம்,ஹஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திரட்டாதி,ரேவதி,திருவோணம்,சதயம்,அசுவினி,புனர்பூசம்,சித்திரை,அவிட்டம்ஆகிய நட்சத்திரங்களில் திருமணம் செய்வது உத்தமம்.

அதுபோல துவிதியை,திருதியை,பஞ்சமி,சப்தமி,தசமி,ஏகாதசி,திரயோதசி,ஆகிய திதிகளில் திருமணம் செய்வது உத்தமமான பலன் தரும்.

ஒருவர் பிறந்த நட்சத்திரம்,பிறந்த மாதம்,பிறந்த லக்னத்தில் திருமணம் செய்யக்கூடாது.

தற்போது இரண்டு கல்யாணம் ஒரே மேடையில் செய்கிறார்கள்.அதில் ஒரு தம்பதி பிரிவினை உண்டாகின்றன..விருத்தி இல்லை.

குருபலம்;

ஒருவர் ராசிக்கு குரு 2,5,7,9 ல் வரும்போது குருபலம் உண்டாகிறது.அச்சமயத்தில் திருமணம் செய்வதுதான் நல்ல மகிழ்ச்சியான திருமன வாழ்க்கை அமையும்.நல்ல குடும்ப சம்பந்தமும் அமையும்.

7 ஆம் இடத்தில் சுக்கிரன் சனி இணைந்து காணப்பட்டால்,இரண்டு தாரம் அமையும்..சரியாக 31 வது வயதில் இரண்டாவது கல்யாணம் நடக்கும்.

7 ல் சுக்கிரன் அமர்ந்தால் மனைவியால் அவமானம் உண்டு.ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்யும் சூழலும் உண்டாகும்.

சனி 7 ல் இருந்தால் கறுப்பு நிறமுள்ள துணையே அமையும்...அதுவும் தாமதமாக.

குரு 7 ல் தனியாக நின்றால் திருமண தாமதத்திற்காக பல பரிகாரங்கள் செய்வர்.தாமதமான திருமணம்.திருமணத்திற்கு பின் அதிர்ஷ்டம் உண்டு.(ஆனால்)


நட்சத்திரப்பொருத்தம் மட்டும் போதுமா..?


பெண்ணின் நட்சத்திரம்,பையன் நட்சத்திரம் மட்டும் பார்த்து 9 பொருத்தம் வருது.கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நினைச்சா ஆப்பு கன்ஃபார்ம்.

வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து செய்யும் திருமணங்கள் பிரிவுக்ளையே உண்டாக்கும்.
]
இருவரது ஜாதகத்திலும் கிரகங்கள் அமைந்த விதத்தை பார்த்தே இதனை முடிவு செய்ய வேண்டும்...

பெண் ராசிக்கு பையன் ராசி அமைந்த விதம்.

இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன் அமைந்த விதம்.

ஒருத்தருக்கு சுக்கிரன் உச்சம்.பெண்ணுக்கு சுக்கிரன் நீசம்னா ...இருவருக்கும் உணவு முறைல இருந்து ,தாம்பத்தியம் சுகம் திருப்தி வரை ஒற்றுமை இருக்காது.ஏட்டிக்கு போட்டிதான்..சுக்கிரன் உச்சம் பெற்றவன் பிரியாணி வேணும்பான்.சுக்கிரன் நீச பெண் பழைய சோறே போதும்பா.

இவன் மெத்தையிலதான் படுப்பேன்னு சொல்வான்.அவ கட்டாந்தரையே போதும்..கிழிஞ்ச கோரை பாய் பத்தாதா என்பாள்.

இது எப்படி..?

சுக்கிரன் அமைந்த விதம்..இது போல ஒவ்வொரு கிரகத்துக்கும் குணாதிசயம் மாறும்.
செவ்வாய் உச்சம் பெற்ற பெண் ..பலசாலி,திரியம், உடையவள். என் பொண்ணு பத்து ஆம்பளைக்கு சமம் என்பாள் அம்மாக்காரி..காரணம் அந்த பெண் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம்.இவளுக்கு பயந்தாங்கொள்ளி கோழையாக இருக்கும்,பயத்தில் மவுனமாகவே இருக்கும் செவ்வாய் கெட்டுப்போன ஜாதகத்தை சேர்த்தால் என்னாகும்..?

இருவருக்கும் சந்தோசம் இல்லை..நான் மலை..நீ மடு கதைதான்.

செவ்வாய் தோசத்தை செவ்வாய் தோசம் உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும்..

Related Article:

Post Comment

1 comment:

FOOD said...

தமிழ்மணம் இணைப்புக் கொடுத்து, முதல் ஓட்டும் போட்டாச்சு.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner