/> காஞ்சனா -செம காமெடி..செம திகில் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 24 August 2011

காஞ்சனா -செம காமெடி..செம திகில்காஞ்சனா முனி-2 சினிமா விமர்சனம்

முனி திரைப்படத்தை பார்த்துவிட்டு இதை பார்ப்பவர்களுக்கு ராகவா லாரன்ஸ் அதிலி நிறைய சீன்களை சுட்டுவிட்டாரோ என தோன்றும்.
அந்தளவு முனியில் உள்ள சீன்களை வசனம் மட்டும் மாற்றிபலஇடங்களில் கோர்த்து இருக்கிறார் இயக்குனர் ராகவா.லா.முனியில் ராஜ்கிரன்.காஞ்சனாவில் சரத்குமார்.இருவருமே வில்லன்களால் அநியாயமாக கொல்லப்பட்டவர்கள்.இருவருமே அப்பாவிகள் ப்ளஸ் ழிவாங்க ராகவா வை தேடி வந்து புகுந்துகொண்டு வில்லன்களை பழி வாங்குபவர்கள்.காஞ்சனாவில் சரத்குமார் அரவாணியாக வந்து ,அரவாணிகளுக்காக குரல் கொடுக்கிறார்.அது செம டச்சிங்.சிலஅரவாணிகள் பிச்சையெடுப்பதும்,பாலியல் தொழில் செய்வதும்தான் அரவாணிகளுக்கு சமூகத்தில் மதிப்பில்லை என சொல்லி தன் வளர்ப்பு மகளை டாக்டருக்கு படிக்கவைக்கிறார்.அவரும் அரவாணிதான்.டாக்டருக்கு படிக்கும் தன் மகளுக்காக ஆஸ்பிடல் கட்ட ஒரு இடத்தை வாங்க,அதை வில்லன்ஆட்கள் பறிமுதல் செய்து சரத்குமாரை கொன்று விட,அவர்களை பழி வாங்க ராகவா உடலில் புகுந்து,வில்லன்களை துவம்சம் செய்து விடுகிறார். 


கோவை சரளா முனி படத்தில் இருந்த அதே கேரக்டரை இதிலும் ஏற்றிருக்கிறார்.தமிழில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை சரளாதான்.அந்தளவு காமெடி காட்சிகளில் பின்னுகிறார்.பேயாக லாரன்ஸ் ஆட்டம் போடும்போது பயத்தில்,அவர் ஃபெர்மான்ஸ் சூப்பர்.அதே போல லாரன்ஸை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு,கோவை சரளாவும் அவர் மருமகளும் பேயை விரட்ட மந்திரவாதியை கூட்டிவந்து ,படும் பாடு செம காமெடி.படத்தின் திரைக்கதை பரபரப்பாகவும் ,காமெடியாகவும்,திகிலாவும் போகுமாறு இயக்குனர் லாரன்ஸ் அமைத்திருக்கிறார்.அதில்தான் வெற்றி.

சந்திரமுகி க்ளைமாக்ஸ் போல காஞ்சனா வில் க்ளைமாக்ஸ் பாடலில் ராகவா பெண் வேடத்தில் போடும் பேயாட்டம் கலக்கல்.இதுதான் படத்தின் உயிர்நாடி.தெலுங்கில் படம் செம ஹிட்டாம்.தமிழிலும் படம் பிக்கப் ஆகிவிட்டது என்கிறார்கள்.தமிழில் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது..தமிழில் பேய்+காமெடி+ஃபார்முலா வந்தது இல்லை...பழைய விட்டலாச்சார்யா படங்கள் மட்டுமே அப்படி இருந்தது.

அதன் பிறகு லாரன்ஸ் மட்டுமே அந்த ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.கோவை சரளா இப்படத்தில் முக்கிய பாத்திரமாக காஞ்சனாவிற்கு பின்,படத்தின் முழு பாரத்தையும் சுமக்கிறார்.

சரத் ,லட்சுமி ராய் கவுரவ வேடம்தான்...


காஞ்சனா -சூப்பர் எண்டர்டைனர்


Related Article:

Post Comment

3 comments:

நிரூபன் said...

காஞ்சனா...படம் பற்றிய காத்திரமான அலசலுக்கு நன்றி.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

தள டிசைனிங் மாற்றியிருக்கிறீங்க.

இப்போது முன்பை விட இலகுவாக உங்கள் ப்ளாக் வேகமாக ஓப்பின் ஆகிறது.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லைய..பழைய தளம் காணாமல் போய்விட்டது..இது புதுசு..மொத்த போஸ்டே 15 தான்..ராசா

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner