/> அன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 25 August 2011

அன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி

அன்னா ஹசாரே இன்னொரு காந்தியாக சித்தரிக்கப்படுகிறார்.ஊழலுக்கு எதிரான போராட்டம் என துவங்கிய இவரது உண்ணாவிரத போர்,70 வயது முதியவர் நாட்டின் சூழல் கண்டு சகிக்காமல் போராடுகிறாரே என்ற பரிதாப உனர்வை தூண்டி,இளைஞர்களை அவர் பின்னால் அணிவகுக்க வைத்தது.அதன் பிறகுதான் ஊழல் எதிர்ப்பு உணர்வே வருகிறது..முதல் பார்வை முக்கியம் என்பார்கள்.அதில் அன்னா காந்தியவாதி என்பதும்,முதியவர் என்பதும்,குல்லா அணிந்து தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டதும்,அவர் தூய்மையானவர் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிந்துவிட்டது..எதிர்கட்சியான பி.ஜே.பி திரட்ட முடியாத ஒரு மக்கள் சக்தியை தனியாளாக இந்த பெரியவர் சாதித்து இருக்கிறார்.இதற்கு காரணம் இந்த firstlook personality தான்...


ஆக,ஒரு மனிதன் வெற்றிகரமான மனிதனாக திகழ,பிறர் பார்வையில் அவன் எப்படி விழுகிறான் என்பதே முக்கியம்...ப்ராடு பண்றவன் தான் டிப்டாப்ப இருப்பான் என்பார்கள் கிராமத்தில்.ஏன்னா அவனுக்கு தெரியும்.மற்றவர்கள் மதித்து நம் பேச்சை கேட்கணும்னா தூய்மையா இருக்கணும்.நீட்டா தெரியணும்னு அவனை அவன் சரி பண்ணிக்குவான்.

சாமியார் தன்னை சாமியாராக காட்டிகொள்ள முதலில் காவி உடை உடுக்க வேண்டும்.கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிய வேண்டும்.அப்பனே உனக்கு என்ன வேண்டும் என உபதேசம் செய்ய வேண்டும்.அதுபோல காந்தியவாதியாக தன்னை காட்டிக்கொள்ள குல்லா அணியவேண்டும்.வெள்ளை குர்தா அணியவேண்டும்..ஊழல் பொறுக்க முடியவில்லை..காந்திய வழியில் உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவிக்க வேண்டும்..காந்தி படத்தை வைத்துக்கொள்ள வேண்டும்..இது ஒரு டிரெண்ட் செட்டாக அன்னா உருவாக்கிவிட்டார்.

இது இன்னும் பல பரிணாம வளர்ச்சியாக உருவெடுக்கும்.அன்னா கட்சி தொடங்கலாம்.இதுவும் நடக்கும்.அன்னா மக்கள் வறுமையை ஒழிப்பேன் என இந்தியா முழுக்க ஊர்வலம் போகலாம்...அன்னாவை வைத்து பிழைக்க இந்திய எம்.பி.க்கள் அவர் பின்னால் அணிவகுக்கலாம்..எப்ப கட்சி ஆரம்பிச்சாலும் ஜெயிச்சிருவாரே..இதனால் ஆட்சி கவிழ வாய்ப்புண்டு..இது மட்டுமின்றி அன்னா சர்று கோபப்பட்டால் இந்தியாவில் புரட்சி வெடிக்கவோ,கலவரம் நடக்கவோ அதிக வாய்ப்பிருக்கிறது..நூல் இழை பயணத்தில் தேசத்தின் அமைதி இருக்கிறது...

காங்கிரஸ் அரசுக்கு அன்னாவை சமாளிக்கும் வழியோ,லோக்பாலை நிறைவேற்றும் தரியமோ கிடையாது..சமாளிக்க மட்டும்தான் தெரியும்.ஒரு பிரச்சனையை பல வருசத்துக்கு ஆற போடணுமா விசாரணை கமிசனை போடு என்றார் ராஜாஜி..அதைதான் தெலுங்கானா பிரச்சனை முதல் ஊழல் விசயம் வரை செயல்படுத்தி சமாளிக்கிறது காங்கிரஸ்.

ஆளுங்கட்சி என்றால் மந்திரிகள் செய்யும் தவறுகளை நாட்டு மக்களிடம் இருந்தும்,மீடியாக்களிடம் இருந்தும் சமாளிப்பது மட்டுமே என ஆகிவிட்டது...இது அளவுக்கு மிஞ்சி போனதால் ஒரு அன்னா உருவானார்...இதையும் சொதப்பினால் மக்கள் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து திசை மாறி புரட்சி,கலவரம் நோக்கி பயணிக்கலாம்...அன்னா போராட்டத்தை வெற்றியாக்கினால்,இன்னும் பல பிரச்சனைகளுக்கு அவர் பிள்ளையார் சுழி போடுவார் என்றுதான் காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது..ஆளு அசந்தா தூக்கிட்டு போய் ஆஸ்பிடல்ல வெச்சி க்ளுக்கோஸ் போட்டா பிரச்சனை முடிஞ்சிரும் என்றுதான் இந்த நிமிடம் வரை எதிர்பார்த்து காத்திருக்கிறது...

நம் நாட்டில் எதிர்கட்சியான பி.ஜே.பிக்கு வலுவான தலைவரோ,போராட்ட குணமோ இல்லாததால்தான் அன்னா வின் எழுச்சிக்கு காரணம்..இது மக்கள் போராட்டமாக உருவானதற்கும் எதிர்கட்சிகளின் ஸ்திர தன்மை இன்மையே காரணம்...காங்கிரஸ் கவிழ்ந்தாலும் மீண்டும் அதுவே ஜெயிக்கும் அளவுக்குதான் எதிர்கட்சி களின் நிலை இருக்கிறது...அன்னா கட்சி ஆரம்பித்தால்,அந்த வேலையும் முடிந்தது..
Related Article:

Post Comment

2 comments:

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அதுக்கெல்லாம் அவருக்கு தில் இல்ல தலைவரே..

எங்கே அசிங்கப்படுத்தி விட்டுடுவாங்களோன்னு பயப்படுறாரு..

அரசியல்வாதிகளை நான் சொல்லலை மக்களைச் சொன்னேன்..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

தமிழ்மணத்தில இணைச்சுட்டேன் அப்பிடியே ஓட்டும் போட்டுட்டேன்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner