/> பங்குசந்தை ஜோதிடம் share market astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 26 August 2011

பங்குசந்தை ஜோதிடம் share market astrology


பெரும் லாபம் சம்பாதிக்க ஜோதிடம் வழி காட்டுமா..?


பங்கு சந்தையில் எல்லோரும் பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகி விடுவதில்லை.100 க்கு 90 சதவீதம் பேர் நஷ்டப்பட்டு பலர் அந்த பக்கமே தலை வைத்து படுக்காமல் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விடுவதும் உண்டு.சிலர் ஜஸ்ட் லைக் தட்டாக சில மணி நேரங்களில் பல ஆயிரங்கள் சம்பாதித்து விடுவதும் உண்டு.பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும்.அதாவது கணிப்பு முறை இருக்கும்.

ஷேர் மார்க்கெட் நிலவரம் பத்தி எனக்கு அக்குவேறு ஆணி வேறயா தெரியும்.எது படுக்கும் எது எந்திரிக்கும்னு ஃபிங்கர் டிப்ஸ் வெச்சிருக்கேன் என கொக்கரித்தவர்கள் கூட பல சமயம் மண்ணை கவ்வி விடுவதுண்டு.புதுசா கத்துக்க ஆரம்பிச்சு மள மளன்னு சம்பாதிச்ச ஆளுங்களும் உண்டு.

பங்கு சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டம்,தினசரி வர்த்தகம், என சில வகைகள் உண்டு.ஜாதகப்படி பங்கு வர்த்தக ஆலோசகர் ஆக வேண்டுமெனில் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் குரு,புதன் சம்பந்தம் பெற வேண்டும்.ஆலோசனை என்றாலும் தனம் என்றாலும் குருதான் அதிபதி குரு கெட்டவர் கூறு கெட்டவர் என்பதால் குரு கெடாமல் இருப்பவர்தான் சிறந்த ஆலோசக்லராக இருக்க முடியும்.
ஷேர் மார்க்கெட் என்பது ஜோதிடத்தில் புதையல்,திடீர் பண வரவு,போன்ற கேட்டகிரியில் வருகிறது.

எட்டாமிடம் திடீர் பண வரவை சொல்லும் இடம்.இந்த இடத்தை குரு,புதன் போன்ற சுபர் பார்த்தாலும் இருந்தாலும் ,6க்குடையவன் இரண்டில் இருந்தாலும்,ஜாதகத்தில் குரு திசை ,புதன் திசை ,ராகு திசைநடந்தாலும் பங்கு சந்தையில் செல்வத்தை அள்ளுவார்கள்.மற்றவர் எல்லாம் பணத்தை இவர்களிடத்தில் விடுவதற்கு வந்தவர்கள்.

நல்ல பேச்சு திறமை,நன்கு கவனிக்கும் தன்மை,நுண்ணறிவு,சமயோசித புத்தி,சரியான முடிவு சரியான நேரத்தில் எடுத்தல் இவையெல்லாம் பங்கு வர்த்தகத்தில் மிக முக்கியம்.இவை எல்லாவற்றுக்கும் குருவே அதிபதி.காரகன்.பங்கு வர்த்தகம் மூலம்,கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது மட்டுமில்லாமல் இந்தியாவின் முதுகெலும்பாய் தொழிலை வளர்த்த அம்பானிக்கும் குரு திசையில்தான் அவ்வளவு செல்வம் சேர்ந்தது.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner