/> சனி பெயர்ச்சி பலன்கள் 2012 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 29 September 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012

சனி பெயர்ச்சி 2012

சனி பெயர்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு கன்னியில் இருந்து துலாம் வீட்டுக்கு செல்கிறது...இதனால் இந்திய அரசியலில் என்ன மாற்றம் நடக்கும் என யோசித்தால் துலாம் காற்று ராசி..காற்றுன்னா அலைக்கற்றையையும் குறிக்கும்..(2ஜிதான்)எரிவாயுவையும் குறிக்கும்...இவையெல்லாம் இன்னும் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்படும்..சோனியாகாந்தியோ அல்லது பிரதமரோ....கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்..இதுவரை இல்லாத அளவு ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே என் கணிப்பு.

கால புருஷ லக்கினமாகிய மேசத்திலிருந்து ஏழாம் வீடாகிய துலாத்தில் உச்சம்ஆகும்சனி...அதன்காரகத்துவம்குறிக்கும்இடம்,பொருள்,ஸ்தானங்களையெல்லாம் முன்னிறுத்துவார்..நீதி வழங்குவார்...கன்னி ராசியான பூமி ராசியில் சனி இருந்தபோது நிலம் சம்பந்தமான பரபரப்பு இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்படுத்தியது...நில ஆக்கிரமிப்பு செய்தோருக்கு தக்க தண்டனை கிடைக்க சனியின் கன்னி சஞ்சாரமே காரணம்...அதற்கு முன் கருணாநிதி ஆட்சியில் நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே சென்றதற்கும் எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் பற்றிய பேச்சாகவே இருந்ததற்கும் சனி பூமி ராசியில் இருந்ததுதான்...காரணம்..கன்னி புதன் வீடு என்பதால்...டாட்டா,அம்பானி போன்ற பெரிய பெரிய தொழில் அதிபர்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அசிங்கப்பட்டார்கள்.

துலாத்தில் காற்று ராசியில் சனி யால் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் பாதிப்பை அதிகப்படுத்தலாம்...அல்லது எரிவாயு விலை பல மடங்கு அதிகரிக்கலாம்...பிரதமர் அல்லது சோனியா காந்தி மக்களுக்கு பதில் சொல்ல முடியாத அளவு அசிங்கப்படலாம்...

நீதி தேவன் சனி உச்சம் ஆவதால் உச்ச நீதி மன்றம் பல மடங்கு மக்கள் ஆதரவை பெற்று ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வாசிக்க போகிறது..பல எதிர்பாராத திருப்பங்களை இந்த வழக்கு சந்திக்கும்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner