/> செவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 24 September 2011

செவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012

செவ்வாய் தோசம்-திருமண பொருத்தம் 2012;

செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோசம் என பொத்தாம் பொதுவாக சொல்வார்கள்.ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் இருக்கின்றன..

                               வள்ளி,தெய்வானையுடன் முருகன் ,லண்டன்

செவ்வாய் ஆட்சியிலோ ,உச்சமாகவோ ,நீசமாகவோ இருந்தால் தோசமில்லை.குருவோ,சனியோ,ராகுவோ,கேதுவோ பார்த்தாலோ,சேர்ந்து இருந்தாலோ தோஷமில்லை.கடக லக்கினம் அல்லது சிம்ம லக்கினத்தில் இருந்தாலும் தோஷமில்லை.இதையெல்லாம் பார்த்தால் செவ்வாய் தோசங்களில் பாதி அடிபட்டுவிடும்.

செவ்வாய் தோசமுள்ள ஜாதகனுக்கு செவ்வாய் தோசமுள்ள பெண்ணை கட்டி வைத்தால் இருவரும் உலகத்துக்கே வழிகாட்டும் அளவுக்கு ஒற்றுமையாக இருப்பார்கள்.நான்..நீ என பிரித்து பேச மாட்டார்கள்.நாங்கள் என்றுதான் பேசுவார்கள்.அவ்வளவு பாசம்.

செவ்வாய்க்கு மங்களன் என்றும் ஒரு பெயர்.வேண்டுவோர்க்கு மங்களம் தருவதால் இப்படி ஒரு பெயர்.

செவ்வாய் பெண்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

செவ்+ராகு,செவ்+சனி,செவ்+சந்திரன் கூட்டு கிரக அமைப்பு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அமைப்பு.செவ்வாய் ரத்தக்காரகன் அல்லவா.

செவ்வாய் ததோசம் இல்லாதவரை செவ்வாய் தோசம் உள்ளவர் திருமணம் செய்தால் ,பிறக்கும் குழந்தை உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்..இருவரில் ஒருவருக்கு செவ்வாய் திசை வந்தால் ஆயுளுக்கே பாதிப்பு வரலாம் என்பது ஜோதிட விதி.

செவ்வாய் திசை நடக்கும்போதும்,செவ்வாயால் திருமண தாமதம் ஏற்பட்டாலும் செவ்வாய் தோசம் இருந்தாலும் செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கி ,சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது உத்தமம்.

ஆன் ஜாதகம் பார்த்து,மேற்க்கண்ட விதிப்படி,செவ்வாய் தோசமில்லை..இது பரிகார செவ்வாய்தான்...திருமணம் செய்யலாம்..என சொன்னாலும் ,பெண் வீட்டார் போய் ஒரு ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து அது எப்படி..பையனுக்கு, இது செவ்வாய் தோசம்தான்...கட்டக்கூடாது என கட்டையை போட்டுவிடுகிறார்கள்...இதனால் பல திருமணங்கள் தாமதம் ஆகின்றன...
Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner