/> புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3) | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 21 September 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)

புலிப்பாணி ஜோதிடம் 300

சித்தர் புலிப்பாணி எழுதிய ஜோதிட பாடல்கள் மிக பழமையானவை...பல ஜோதிடர்களுக்கு இதுதான் பால பாடம்..இந்த புத்தகத்தைதான் ஜோதிடர்கள் மனனம் செய்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்...எல்லா சிக்கலான கிரக நிலைக்கும் இதில் தீர்வு உண்டு.திருமண பொருத்தம்,குழந்தை பிறப்பு யோக பலன்,விதவையை திருமணம் செய்பவரின் ஜாதக மைப்பு,திருமணமே ஆகாதவரின் ஜாதக அமைப்பு,களத்திர தோசம்,புதையல் போல பணம் சம்பாதிக்கும் யோகம்,சோரம் போகும் மனைவி,கீழ்த்தரமான பெண்களை நாடும் ஆண் ஜாதகம்,கிழவனுக்கு மனைவியாகும் பெண்ணின் ஜாதகம்,பணம் இருந்தும் கஞ்சன்,மந்திரவாதி,வேடிக்கை காட்டுபவன்,கொலைக்கும் அஞ்சாதவன்  ஜாதகம் என வரிசை படுத்தி பாடியிருக்கிறார் சித்தர் புலிப்பாணி.

இவர் எழுதிய நூல்கள்;
புலிப்பாணி வைத்தியம் – 500 
புலிப்பாணி சோதிடம் – 300 
புலிப்பாணி ஜாலம் – 325 
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 
புலிப்பாணி பூஜாவிதி – 50 
புலிப்பாணி சண்முக பூசை – 30 
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை. புலிப்பாணி ஜோதிடம் 300 ல் இருந்து ஒரு ஜோதிட பாடல்;

புகழுடன் விளங்கும் ஜாதகன்;

பாரப்பா குரு புத்தி சேர்ந்து நிற்கப்
பாக்கியங்கள் கிட்டுமடா புனிதன் சேயோன்
ஆரப்பா அரசகுரு புந்தி சேர 
அப்பனே பாடகனாம் பெரியோர் நேசம்
கூறப்பா கொடுஞ்சனியும் புந்தி மேவ
கொற்றவனே கணதடா சத்துரு யில்லை
வீரப்பா விசயமும் இல்லை ,யில்லை
வெகு தனங்களுள்ளவனாம் விளம்ப கேளே.

விளக்கம்;
புகழும் விளங்கும் மற்றொரு ஜாதக கணிப்பை கூறுகிறேன் கவனத்துடன் கேட்பாயாக..குரு பகவானுடன் புதன் சேர்ந்திருந்தால் இந்த ஜாதகன் நல்ல பாக்யங்கள் பெற்று புனிதமானவன் என போற்றப்படுவான்.இது போன்று சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பானாகில்,ஜாதகன் பெரிய பாடகனாகவும் ,மேதைகளின் நட்பும் பெற்று இருப்பான்.மேலும் புதன் பகவானால் சனி பகவான் சேர்ந்திருப்பானாகில்,இவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.விஷ பயமும் இல்லை.இவன் பெரும் பணக்காரனாக வாழ்வான் என்று கூறலாம்.

குறிப்பு;ரஜினி ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் இணைந்து துலாத்தில் உள்ளது.


Related Article:

Post Comment

7 comments:

sas said...

சுக்கிரன்,புதன்,சனியும் சேர்ந்து கன்னியில் இருந்தால் என்ன பலன்?

• » мσнαη « • said...

பாமரனுக்கும் புரியும் வகையில் உங்கள் ஜோதிட பதிவுகள் உள்ளது!!!!

வாழ்த்துக்கள் அண்ணே !!!

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

கன்னியில் சுக்கிரன் நீசம்..புதன் உச்சம்...இருப்பினும் சுக்கிரன்,புதன் சேர்க்கை நல்ல பலனே தரும்..

அமிர் said...

புதன், சுக்கிரன்,குரு மூவரும் இணைந்து ரிஷபத்தில் (11-ஆமிடம்) இருந்தால்?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

புலிப் பாணி ஜோதிடம் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.

மிக்க நன்றி,

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எனக்கு கூடஅ இந்த ஜோதிடம் புரியுதே..

சே.குமார் said...

நல்ல பதிவு...
சிம்மத்துக்கு சனி பெயர்ச்சி எப்படிண்ணே இருக்கும்? கஷ்டம் போகுமா?

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner