/> புலிப்பாணி ஜோதிடம் 300 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 19 September 2011

புலிப்பாணி ஜோதிடம் 300

ஜோதிட நூல்கள் பெரும்பாலும் வட மொழியில் அதிகம் இருப்பினும் அத்ற்கு இணையாக நம் நாட்டு சித்தர்களும் ஜோதிட நுல்கள் இயற்றியுள்ளனர்.அதில் பழமையானதும்,உன்னதமானதுமான நூல் புலிப்பாணி 300 ஜோதிட நூல் ஆகும்.இன்றும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும்போது,இந்த நூலில் உள்ள பாடல்களை உதாரணத்துக்கு சொல்லி விளக்கிதான் ஜாதகம் பார்ப்பர்.அண்ணாமலை பல்கலைகழகம் நடத்தும் ஜோதிட பாட பேராசிரியர்களும் இந்த பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்..காரணம் ஜோதிடத்தில் எளிமைமையான பல கணக்குகளை புரிய வைப்பது புலிப்பாணி 300 ஆகும்.

ஒருவரது ஜாதகத்தை வான்மண்டலத்தில் கிரகங்களின் நிலையும் நட்ய்சத்திரத்தின் அமைப்பையும் வைத்துதான் கணக்கிட்டுதான் கணக்கிடப்படுகிறது.வான் மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருப்பினும் முக்கியமாக அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்கள்தான் கணக்கிடப்படுகிறது.
இந்த 27 நட்சத்திரங்கள் உள்ள ஓட்ட பாதையை 12 ராசிகளாக பிரித்துள்ளனர்.ஒவ்வொரு ராசியும் 120 அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளன...
சந்திரன் இரண்டேகால் நாழிகை ஒரு ராசியில் சஞ்சரிப்பார்.இந்த ஓட்டத்தை கணக்கிட்டே ஒருவரது ஜாதகம் கணக்கிடப்படுகிறது.
சூரியனை வைத்து லக்கினத்தையும் சந்திரனை வைத்து ராசியையும் கணக்கிடப்படுகின்றன..


நவகிரகங்களின் தன்மையை பற்றி கூறும்,புலிப்பாணி 300 ;ஒரு ஜோதிட பாடல்;

தானென்ற சூரியனுக் காட்சி சிங்கத்
தன்மையுள்ள மேஷமது உச்சமாகும்
தானென்ற துலாமதுவும் நீசமாகும்
தனியான தனுவுடனே மீனம் நட்பாம்
மானென்ற மற்றேழு ராசிநாதனும் 
வரும் பகியா மென்றுனுக்கு சாற்றினோம் யாம்
கோனென்ற போகருடை கடாட்சத்தாலே
குணமான புலிப்பாணி குறித்திட்டேனே.

விளக்கம்;நவகிரகங்களான சூரியனுக்கு சிம்ம ராசி ஆட்சி வீடாகவும் ,மேஷம் உச்ச வீடாகவும் ,துலாம் நீச வீடாகவும் அமைந்துள்ளது.அத்துடன் தனித்துவம் பெற்ற தனுசுடன் மீனம் நட்பு வீடாகவும் விளங்குகிறது.இவைகள் நீங்கலாக மற்ற 7 வீடுகளும் அதாவது ரிசபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,கும்பம்,ஆகிய வீடுகள் பகையாகும் என்று எனது குருநாதராகிய போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் கூறுகிறேன்.

(தொடரும்)


Related Article:

Post Comment

2 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தெரியாத நூல் பற்றி அருமையான தொடர்..

தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தொடர்..

தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner