மங்காத்தா- சினிமா விமர்சனம்
மும்பையில் ரகசியமாக ஒரு தாதாவுக்கு வந்து சேரும் கிரிக்கெட் சூதாட்ட பணம் 500 கோடி ரூபாயை நான்கு இளைஞர்களும்,40 வயது சஸ்பெண்டில் இருக்கும் போலிஸ் இன்ஸ் பெக்டர் வினாயக் (அஜீத்)ம் சேர்ந்து அப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.அந்த பணத்தை பல சேஸிங் மத்தியில் கொள்ளையடித்த பின் அதை அந்த நால்வரில் இருவர் கொள்ளையடித்து விடுகின்றனர்.மீண்டும் துரத்தல்.க்ளைமாக்ஸில் ஒரு திருப்பம்.அஜீத்துக்கு அந்த பணம் கிடைத்ததா இல்லையா..அந்த நால்வர் என்ன ஆனார்கள் என்பது கதை.தாதா ஒரு பக்கம் துரத்த,சி.பி.ஐ அர்ஜூன் ஒரு பக்கம் துரத்த,அஜீத் தாதாவின் மகளை (திரிஷா) காதலிப்பது போல நடித்து பணம் வரும் ரூட்டை தெரிந்துகொண்டு திரிஷாவை அம்போவென விட்டுவிட்டு பணத்துடன் எஸ்கேப்.அவரிடம் இருந்து நால்வரில் இருவர் பணத்துடன் எஸ்கேப்பாக அஜீத் செம டென்சனில் சுத்தும் காட்சி நமக்கு டென்சனை உண்டாக்குகிறது.
பாடல்கள்,அஜித் டான்ஸ்,அஜித்தின் பஞ்ச்,4 அழகான ஹீரோயின்ஸ்,ஜெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதை என வெங்கட் பிரபு செமையாக வூடு கட்டி அடித்திருக்கிறார்.
அஜீத்தின் 50 வது படம் என்பதால் படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் என்பதற்காக இவ்வளவு எதிர்பார்ப்பா..அல்லது வழக்கமான அஜீத் படத்துக்கான எதிர்பார்ப்பா என பார்த்தால் மூன்றும்தான்.பெரிய ஓபனிங்..பெரிய மாஸ் படம்.
அஜீத் படம் முழுக்க வில்லனாக நடித்த படம்...அர்ஜூன் ஹீரோவா என க்கேட்டால் அதுவும் இல்லை.அஜீத்தான் ஹீரோ.என்னய்யா குழப்புறீங்க..?தமிழ் படத்துல இப்படியெல்லாம் வராதே..?
அதுதான் இப்படத்தின் வெற்றி.நோ ரூல்ஸ் என போட்டுவிட்டதால் எதையும் கேட்ககூடாது.படம் பரபரப்பாக போகிறது.ரசனையாக இருக்கிறது..3 அழகான பெண்கள்.கலக்கல் பாட்டு.அஜீத் வில்லன் என்பதால் தான் காதலிக்கும் பெண் எதிரில் அவர் தந்தையை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடுகிறார்.நேரம் காலம் இல்லாமல் கண்டபடி குடிக்கிறார்.தம்மடிக்கிறார்.ஒரு விலை மாதுவை கூட்டிவந்து கூத்தடிக்கிறார்.அவர் வில்லன் என்பதால் பணம் இருந்தால் 1000 பொண்டாட்டிங்க கிடைப்பாங்க என்கிறார்.இதுவே அவர் ஹீரோவாக இருந்திருந்தா இதெல்லாம் வந்திருக்காது.அப்ப இந்த படத்துல அவர் ஹீரோ இல்லையா.சார் அவர்தான் ஹீரோ அவர்தான் வில்லன்.
யோவ்..ஹீரோன்னா நல்லவந்தானே..?அப்புறம் எப்படி குடிப்பார்..
பொண்ணுங்களோட கூத்தடிப்பார்..?
ம்ம்..நீ ஒரு எம்.ஜி.ஆர் காலத்து ஆளு.இப்ப எல்லாம் இதுதான் தமிழ் சினிமா ஹீரோயிசம்.அதாவது ரியல் வாழ்வை படம் பிடிக்கிறாங்களாம்.செல்வராகவன்,வெங்கட் பிரபு..கோவா படத்துல ஆணும் ஆணும் உறவு வைத்துக்கொள்ளும் காட்சிகளை எடுத்து புரட்சி உண்டாக்கினாரே அவர் படம் இது, சும்மாவா.
இப்ப இருக்குற யூத்துங்க பத்தி அப்படியே படம் எடுக்குறவர் இவரு.இவரும் இவங்க அப்பாவும் பாண்டிச்சேரி அன்னையையும்,அரவிந்தரையும் உருகி உருகி கும்பிடுவாங்க..ஆனா அவங்க எடுக்குற படத்துல குடி,பொம்பளை மேட்டர்,காட்சிக்கு காட்சி கெட்ட வார்த்தை பேசுற தல னு வித்தியாசமா எடுப்பாங்க..அஜீத்தின் பக்குவப்பட்ட பரிணாம வளர்ச்சிதான் இந்த 50 வது படம்.நானும் எனக்கும் அஜீத் புடிக்கும்தான்.ஆனா அஜீத் க்கு இந்த படம் பெரும் வசூலை கொடுத்தாலும் பெண்கள் மத்தியில் தல மரியாதை டேமேஜ்தான்.நான் சொல்றது தாய்க்குலங்களை..காலேஜை கட்டடிச்சிட்டு மார்னிங் சோவுக்கே வந்து உட்கார்த்திருக்குற 18 வயசு ராட்சஷிங்களை இல்லை.
ஆபாசம்,வக்கிரம்,எல்லை கோட்டை டச் செய்து, படம் வெற்றி பெற ஒரு டிரெண்ட் செட் செய்திருக்கிறார் வெங்கட்.இனி வரும் 100 படங்களில் 70 இப்படித்தான் இருக்கப்போகிறது.கொடுமை.
அஜீத் வெங்கட் பிரபுவை நம்பி தனது 50 வது படத்தை ஒப்படைத்தார்.அதனால் அவர் பெயரில் தவறு இல்லை.சுத்த சைவமாக வந்து வெற்றி பெற்ற படங்கள் வரிசையில் அஜீத்தின் பில்லாவே இருக்கிறது.(நயன் தாரா பிகினி தவிர)ஆக்சனில் ,கதையில் ஓகே..ஆனா திரைக்கதை ,காட்சி அமைப்புகள் செக்ஸ் , கெட்ட வார்த்தை,மது,மாது இல்லாமல் அமைக்க முடியாதா இயக்குனரே?
ஆக்சன் கிங் அர்ஜூன்,அஞ்சலி,ஆண்ட்ரியா எல்லோருக்கும் தலா 5 சீன்கள்.படத்தின் விறுவிறுப்புக்கும்,கலர்ஃபுல்லுக்கும் பயன்பட்டிருக்கிறது.
அஜீத்தை பில்லாவை விட செம ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறார்கள்.படத்தின் மெயின் தீம் சூதாட்ட பணத்தை கொள்ளையடித்தல்.கொள்ளையடித்த பணம் திருடு போதல்..அதை துரத்துதல்,க்ளைமாக்ஸில் ஒரு திருப்பம்.அப்புறம் சுபம்.திரிஷா இதில் அஜீத்துடன் உரச,ஒரு டூயட் பாட பயன்பட்டிருக்கிறார்.
மங்காத்தா இதுவரை இல்லாத அஜீத்தின் ஓபனிங் வசூல் படம்.ரஜினியின் எந்திரன் வசூலை மிஞ்சலாம்.2 நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களாம்.
Related Article:


2 comments:
மங்காத்தா இதுவரை இல்லாத அஜீத்தின் ஓபனிங் வசூல் படம்.ரஜினியின் எந்திரன் வசூலை மிஞ்சலாம்.2 நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களாம்.//
இது கொஞ்சம் ஓவரா இருக்கே ஹி ஹி...
தமிழ்மணம் இன்ட்லி எல்லாம் எங்கேய்யா போச்சு ஒன்னையும் காணோம்???
Post a Comment