/> கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 5 September 2011

கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி


ஜோதிடம்;கடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள். 

பிறந்ததேதி 4, 13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22, 31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.
ஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.
குடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது. விலை மலிவு, தெரிந்தவர்களிடம் வாங்கினேன் என கோமேதகம் கல்லை வாங்கி நேரம், காலம் பார்க்காமல், கைராசி பார்க்காமல் வாங்கி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ளாதீர்கள். சிறந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி வாங்கி, குறிப்பிட்ட நாட்களில் அணிந்தால் நல்ல பலனை தரும். பணம் தங்கும் கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கோ மேதகம் என்பது பசுவின் சிறுநீர் போல, பாம்பின் விஷத்தை போன்ற நிறத்தில் இருக்கும். ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உடையவர்கள், 7ம் இடத்தில் ராகு அமையப்பெற்றவர்களும் கோமேதகம் அணிந்து தோஷம் நிவர்த்தி பெறலாம்.
எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுகிறான், வாக்குவாதம் செய்து கொண்டே இருக்கிறான். மிகவும் துறுதுறுவென இருக்கிறான் என மகனை பற்றி குறை சொல்பவர்கள் இதை அணிய செய்து நல்ல மாற்றங்களை காணலாம். எங்க பூர்வீக வீடு விற்பனைக்காக ஒருவருடமாக அலைந்து கொண்டே இருக்கிறேன். மிகவும் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். என்ன செய்வது? என ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு கோமேதகம் அணிய வைத்தேன். 48 தினங்களில் அவர் எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்கே அந்த வீடு விற்பனையானது.Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner