/> சன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 3 September 2011

சன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்

அரசு கேபிள் எனும் முகமூடி அணிந்து சண்டிவியை துடைத்து எறிந்துவிட்டார் ஜெயலலிதா.அரசு கேபிள் என்பதே சண்டிவியை ஒழிக்கத்தானோ என தோன்றுகிறது.விஜய் டிவி,ராஜ்டிவி,சன் குழுமம் அனைத்தும் பே சேனல் ஆக்கப்பட்டதில்,இப்போது அவை அனைத்தும் அரசு கேபிளில் மிஸ்ஸிங்.ஒரு நாள் நாதஸ்வரம்,அரசி பார்க்கலைன்னா நம்ம வீட்டு பெண்களுக்கு இடி விழுந்தா மாதிரி சோகமா இருப்பாங்க..இதுல இனிமே அது எதுவும் கிடையாதுன்னா சுத்தம்.நேத்தே ரிசல்ட் தெரிஞ்சிருச்சு.டிஷ் இருக்கும் வீடுகளுக்கு சென்று நாதஸ்வரம் பார்த்துவிட்டு வந்தார்கள்..காலையில் வசூலுக்கு வந்த கேபிள் காரனை எப்போ சன் டிவி வரும் என துளைத்து எடுத்தார்கள்.இதைத்தான் சன் டிவி எதிர்பார்க்கிறது...சன் இல்லாமல் கேபிள் இல்லை...அப்படி வேணும்னா இவ்வளவு கொடுன்னு கேட்பார்கள்.


.சரி சன் டிவிக்கு நஷ்டம் வராதா..இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்துதான் டிஷ் ஆண்டனா சிஸ்டத்துக்கு மாறினார்கள்.ஒரு ஊரில் குறைந்த பட்சம் 500 டிஷ்களாகவாது இருக்கும் ஏற்கனவே கேபிள் குறைந்து,டிஷ் அதிகமாகிவிட்ட காலத்தில் அரசு கேபிள் மூலம் முற்றிலும் கேபிள் தொழிலை சன் வசம் ஒப்படைக்கபோகிறார் ஜெ..எப்படி தெரியுமா.ஒரு வாரம் சன் இல்லாமல் புலம்பும் மக்கள் 2000 போனா போகுது.ஒரு சன் டிஷ் வாங்கலாம் என முடிவெடுத்தால் தீர்ந்தது கதை..ஏழை எளிய மக்கள்,சேமிப்பு இந்த ஜல்லியெல்லாம் சன் சீரியல் முன்னால் எடுபடாது..50 ரூபா மிச்சத்துக்கு வருசம் பூரா ஜெயா டிவியே பார்க்க முடியுமா என கொதிப்பார்கள்..

அரசு கேபிள் மூலம் சன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினால்,முன்பு இருந்ததை கட்டணத்தை இரு மடங்காக்குவார்கள்.பேச்சுவார்த்தைக்கே வர மாட்டார்கள்.இனி ஒயர் மூலம் டிவி பார்க்கும் வழக்கம் குறையும்.டிஷ் வேகமாக பரவுகிறது.அரசு கேபிள் எனும் ஓட்டை பஸ்ஸை செட்டில் போட்டுவிட்டு,அரசு டிஷ் கொண்டு வந்தால் இன்னும் நல்லது.கேபிள் காரர்கள் நலனை பார்த்தால் சன் டிவி கொள்ளையை நிறுத்த முடியாது..இதே அரசு கேபிள் இன்னும் ஒரு மாதம் சன் டிவி இல்லாமல் தொடர்ந்தால் கேபிள் காரர்களே போராட்டம் நடத்துவார்கள்.ஆமாம் வாடிக்கையாளர்கள் எல்லாம் டிஷ்க்கு மாறினால்..அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தாலும் பரவாயில்லை..விளம்பரம் குறைந்தாலும் பரவாயில்லை..டிஷ் வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு கேபிள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் சன் சண்டித்தனம் செய்யும்.சன்..ஜெயா மோதல் சன்னுக்கு லாபமாக போகிறது..


Related Article:

Post Comment

4 comments:

விக்கியுலகம் said...

உங்க கருத்து சரிதான் நண்பரே!

கும்மாச்சி said...

உண்மைதான் விஜய், காலம்காலமாக சன்னில் திளைத்த நம் மக்கள் சன் இல்லாமல் அவதிப்படுவார்கள்.

Senthil said...

It could have otherway impact also.

People would start spending time with family and find iteresting, hence people could stay with that.

financialinstruments said...

இன்னுமா சின்னப்புள்ளத் தனமா யோசிப்பீங்க சார். சன் டிவியை டீல் செய்வது எல்லாம் பச்சா வேலை அம்மாவிற்கு. மேட்டர் எப்போவோ ஓவர் என்று கேள்விப் பட்டேன்.

விரைவில் எல்லா சானல்களும் வரும் என்றுச் சொல்கிறார்கள் சார்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner