/> ராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 9 September 2011

ராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..?

ராசிபலன் பார்ப்பது மிக கடினமான வேலையும் அல்ல.அதே சமயம் அதே வேலையாகவும் இருக்க கூடாது.(எங்களுக்குதான் அதே வேலை)நீங்கள் பிறந்த நட்சத்திரம் எதுவோ அந்த நட்சத்திரத்திற்கு எத்தனையாவது நட்சத்திரம் பகையோ அந்த நாட்களில் முக்கியமான செயலில் ஈடுபடாமல் தவிர்ப்பது உத்தமம்.நோய் உண்டாகும் நாள்,சோர்வு தரும் நாள்,முடக்கம் தரும் நாள்,எதிரிகளால் சோதனை உண்டாகும் நாள் என உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு பகை நட்சத்திரம் வரும் நாட்கள் எல்லாம் கவனமாக நீங்கள் செயல்பட்டால்,நிங்களும் ராசிபலன்,தினபலன்,மாத பலன் பார்க்க அறிந்தவர் ஆகிவிடுவீர்கள்.
நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் நீங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நாளில் காலண்டரில் போட்டிருக்கும் நட்சத்திரம் வரை எண்ணி அன்றைய நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரம் என பாருங்கள்.

11,13 வது நட்சத்திரமாக இருந்தால் அது உங்களுக்கு யோகமான நாள் ஆகும்.அன்று நீங்கள் தொடங்கும் காரியம் நிலைத்த வெற்றியை தரும்.


தாராபலன்;இது நீங்கள் சுப காரியம் செய்யும் நாளை கணக்கிட உதவும்- ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நடப்பு நட்சத்திரம் வரை எண்ணி 9 ஆல் வகுக்க மீதி 1-வந்தால் நல்லது,2 வந்தால்-அதிர்ஷ்டம்,3 வந்தால்-விபத்து,4 வந்தால் ஷேமம்,5 வந்தால் -முடக்கம் 6 வந்தால் சாதகம் 7 வந்தால்;எதிரிக்கு பலம் 8 வந்தால்-சுபம் 9 வந்தால்-நிலைத்த வெற்றி.


Related Article:

Post Comment

5 comments:

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

உங்கள் விளக்கம் அருமை!

நன்றி சார்!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

உங்கள் விளக்கம் அருமை!

நன்றி சார்!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம்.சொம்மதற்கு நன்றி!

ஜீவானந்தம் முகந்தனூா் said...

நட்சத்திரங்களை வரிசைபடுத்தி காட்டியிருக்கலாம்

ஜீவானந்தம் முகந்தனூா் said...

நட்சத்திரங்களை வரிசைபடுத்தி காட்டியிருக்கலாம்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner