திருமணம் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக பத்து வருடங்களுக்கு முன்பு சொல்வதுண்டு.முதிர்கன்னிகள் என கவிதையெல்லாம் எழுதுவார்கள்.ஆனால் இன்றோ முதிர்கன்னிகள் நிலை மாறி முதிர் கண்ணன்கள் அதிகமாகி விட்டார்கள்.ஒவ்வொரு சாதியிலும் படித்த நல்ல வசதியான ஒழுக்கமான பையன்கள் திருமணம் ஆகாமல் எதனால் இந்த தாமதம் என்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.
ஒவ்வொரு திருமண தகவல் மையத்திலும் இது போன்ற இளைஞர்கள் ஜாதகங்கள் குவிகின்றன.ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் வைத்திருக்கும் திருமண தகவல் மைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது,திருமணம் பொறுத்தவரை பசங்க ஜாதகம் தான் அதிகம் வருகிறது.
பெண்கள் இப்போ ரொம்ப டிமாண்ட் செய்றாங்க.1500 ரூபா கொடுத்து கரஸ்ல படிச்சி,ஒரு டிகிரி வாங்கிட்டு,இந்த பொண்ணுங்க செய்ற அலும்பு தாங்க முடியலை.இப்ப ரெகுலர் காலேஜ் போகாத பொண்ணுங்களும் இல்லைன்னு ஆகிடுச்சி.அதனால சொந்த தொழில் செய்ற பசங்க,பத்தாவது மட்டும் படிச்சி,அதே சமயம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பசங்க..
ஜாதகமெல்லாம்கொடுத்தாமுகத்தைசுளிக்கிறாங்க.வங்கி,ஆசிரியர்,அரசுபணி,ஐடிதுறை,பெங்களூர்,சென்னை,ஹைதராபாத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும் பசங்க என்றால் உடனே ஓகே ஆகுது.
இப்ப இருக்கிற பொண்ணுங்க ரொம்ப விவரம்.காடு,தோட்டம் நிறைய வெச்சிருக்கிற பசங்களை ஏறெடுத்தும் பார்க்கிறதில்லை.அங்க கல்யாணம் செஞ்சி போனா வயல் வேலைதான் செய்யணும்.நகரத்துக்கு போனா ஜாலியா இருக்கலாம்.என்றே நினைக்கிறார்கள்.
இதனால கொங்கு வேளாளர் சமூக இளைஞர்கள் கிராமத்தில் இருப்பவர்களுக்கு 35 வயது ஆகியும் திருமணம் ஆவதில்லை.இதனால் நாமக்கல் பகுதி கவுண்டர் சமூக இளைஞர்கள் கேரள பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.கவுண்டர்கள் தான் சாதி பற்று அதிகம் உடையவர்கள் என்பார்கள்.அவர்களே இப்படி மாறுகிறார்கள் என்றால் அதன் கொடுமை பாருங்கள்.
பொண்ணுங்க வயசுக்கு வந்தவுடன் சொந்தத்திலேயே அட்வான்ஸ் புக்கிங் செய்து விடுவதால் கிராமபகுதிகளில் பெண்களுக்கு கடும் கிராக்கிதான்.இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் தன் எதிர்கால மனைவிக்காக ஏங்கி தவிக்கும் இளைஞர்கள் அதிகம்.
தன் தந்தை,தாய் பிடிவாதத்திற்காக தன் இளமையை இழந்து வரும் இளைஞர்கள்,தன் வம்ச பெருமைக்காக காதலியை மறந்த இளைஞர்கள்,அநேகம்.,
என்னை கேட்டால் காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் தான் அதிர்ஷ்ட சாலிகள் .அழகான பொண்ணும் கிடைக்கும்.மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையும் ஆச்சு.தன் சாதி,மதம்,ஜாதகப்படி பொருத்தம் அமையணும் என ஏகப்பட்ட சிக்கல்களை தாண்டியே ஒரு திருமணம் அமைகிறது. என முடித்தார் அந்த திருமண அமைப்பாளர்.
காதல் திருமணம் செய்ய ஜோதிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.சொல்லப்போனால் இருவர் மனம் விரும்பி செய்யும் திருமணம் பொருத்தம் பார்க்க தேவையில்லை என்றே சொல்கிறது.ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாக இருக்க வேண்டும்
Related Article:
4 comments:
காதல் நல்ல யோசனை பகிர்வுக்கு நன்றி
நிதர்சனப் பகிர்வுக்குப் பராட்டுக்கள்.
இன்றய அரசியல்வாதியில் எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)
ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்
//பொண்ணுங்க வயசுக்கு வந்தவுடன் சொந்தத்திலேயே அட்வான்ஸ் புக்கிங் செய்து விடுவதால்//
அட்வான்ஸ் புக்கிங்!! ஹா ஹா
Post a Comment