/> குரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 21 September 2011

குரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..?

குரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..?

நவகிரகங்களில் தலை சிறந்தவர் குரு பகவான்.அதிக நன்மை தரும் சுப கிரகம் குரு.புகழ்,செல்வம்,ஞானம்,மன மகிழ்ச்சி,திருமண பாக்கியம்,பிள்ளை பேறு,ஆகியவற்றை அருளும் பகவான்.கோபம் இல்லாதவர்.கற்பக விருட்சம் போல் நன்மைகளை அளிப்பவர்.எளியவர்களின் உறவினர்.உலகையும் நீதியையும் காப்பவர்.குருவை வணங்குகிறவர்கள் வேறு எவரையும் வணங்க தேவையில்லை! என்பார்கள்.அதாவது குரு பகவான் தன்னை நம்பும் பக்தர்களை ,எவருக்கும் பணிந்து வேலை செய்ய தேவையில்லாத உயர்பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்ப்பார்.அவர்களைத்தான் மற்றவர்கள் பணிந்து வணங்குவார்கள் என்று அர்த்தம்

குரு என்ற வார்த்தையில் கு ‘ என்றால் இருள் என்றும் ,ரூ’’ என்றால் நீக்குவது என்றும் பொருள்.ஆக குரு ,இருளை நீக்குபவர் அறியாமை,வறுமை,சிறுமை, போன்ற இருள்களை நீக்கி கல்வி,செல்வம்,ஒழுக்கம்,மூன்றையும் தருபவர்.இவர் .இவருக்கு வியாழன்,பிரகஸ்பதி, என பல பெயர்கள் உண்டு.பிரகஸ்பதி என்றால் அறிவில் மிக சிறந்தவர் என்று அர்த்தம்.

மஞ்சள் நிறம் இவருடைய நிறம்.புஷ்பராகம் இவர் ரத்தினம்.இவர் ஜாதகத்தில் ஆளும் ராசிகள் தனுசு,மீனம்.இவருக்கு உச்ச வீடு கடகம்.இவருக்கான தானியம் கொண்டை கடலை.அதாவது சுண்டல்.இவருக்கான மலர் முல்லை.நெய்வேத்தியம் த்யிர் சாதம்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் குரு இருந்தால் முற்பிறப்பு,இப்பிறப்பு அனைத்து தோசங்களும் நீங்குவதாக புலிப்பாணி ஜோதிடம் 300 ஜோதிட புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குரு பலம்,குரு பார்வை வந்தால் தான் திருமணம் தடங்கல் இல்லாமல்,மிக சிறப்பாக நடைபெறும் என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.அதனால்தான் ஜோதிடர்களிடம் என் பெண்ணுக்கு குரு பலம் வந்தாச்சா என கேட்கிறார்கள்.ராசிக்கு 5,7,9,11 ஆம் இடத்தில் குரு கோட்சாரத்தில் வருவதையே குரு பலம் என்கிறோம்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner