விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி;
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என வேறு வழியில்லாமல் முடிவு செய்து,கிடைத்த ஆடுகளை ஸாரி..கிடைத்த வேட்பாளர்களை கொண்டு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்தார்..விஜயகாந்த்.
ஜெயலலிதா செய்தது பச்சை துரோகம் என்கிறார்கள்..இது எல்லா அரசியல்வாதியும் பின்பற்றும் ராஜ தந்திரம்தான்...அரசியலில் வேகமாக வளரும் ஒரு கட்சியை நசுக்கினால்தான் தனக்கு எப்போதும் அதிகாரம் இருக்கும்.இதையே கருணாநிதி செய்தால் ராஜதந்திரம்...ஜெ..செய்தால் ஆணவம் என்கிறார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்கள்,மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள்..தன்னை தவிர வேறு யாரும் மக்கள் செல்வாக்கை பெற க்கூடாது..அப்படி பெறுபவர்களை வளர விடக்கூடாது என்பது அரசியல் ராஜ தந்திரமே..இதை விஜயகாந்த் முதல்வராக வந்தாலும் செய்துதான் தீர வேண்டும்.செய்தால்தான் தன் கட்சியை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.ஏன் நல்லது செஞ்சா மக்களே தேர்ந்தெடுத்துட்டு போறாங்க..என..ஜல்லியடிப்பது எல்லாம் உதவாது ...ஏன்னா ஒவ்வொரு நிமிடமும் அரசியலில் காட்சி மாறும்...துரோகிகள் நிறைந்த இந்த ரத்த பூமியில் இளிச்சவாயராக யாரும் இருக்க விரும்புவதில்லை...
எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள்..உண்மையான வாக்கு வங்கி...ராமதாசுக்கு எவ்ளோ...தி.மு.க வுக்கு எவ்ளோன்னு இப்ப தெரிஞ்சிரும்..திருமா,வைகோ, காங்கிரஸ் எல்லாம் நடுங்குவது தனக்கு மக்கள் செல்வாக்கே இல்லைங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சிருமேன்னுதான்...காங்கிரஸ் தனித்து உதை வாங்கி தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சிக்கு செல்வாக்கே இல்லை என இந்த தேர்தலில் தமிழர்கள் சோனியாவுக்கு புரிய வைப்பார்கள்.
100 நாள் அ.தி.மு.க அரசு வெற்றி விழாவுக்கு கேப்டன் வராதது,சட்டசபை நிகழ்ச்சிகளில் சரிவர கலந்துகொள்ளாமல் ..எம்.ஜி.ஆர் அளவுக்கு ஃப்லிம் காட்டியது இதெல்லாம் தான் கேப்டன் மீது ஜெ..கடுப்பானதன் பிண்ணனி...ஜெ..விஜயகாந்தை நம்பி இல்லை..அரசு இயந்திரமே போதும் என ..இலவச பொருட்கள் விநியோகம் கைகொடுக்கும் என நம்புகிறார்...
விஜயகாந்த் இனி ஜெ..வுக்கு எதிராக புலி பாய்ச்சல் காட்டுவார் என்கிறார்கள்..பழிக்கு பழி வாங்குவாராம்...நோ சான்ஸ்...எதையும் செய்வார் ஜெ..என்பது அவருக்கு மட்டும் தெரியாதா என்ன..?
Related Article:
5 comments:
போதை(தூக்கத்தி)லிருந்து இப்போதாவது முழிச்சாரே கேப்டன்.
அம்மா போட்டது நாமம் தமிழக மக்கள் விஜயகாந்த்க்கு போடப்போவதும் நாமம் தான்
//கருணாநிதி செய்தால் ராஜ தந்திரம் அம்மா செய்தால் ஆணவம்// நல்ல வரி
7 ஆண்டுகளாக தனி ஆவர்த்தனம் செய்து கட்சிக்கு அங்கீகாரம் வாங்கித் தர முடியாத தலைவர் இவர். இப்போது எல்லாம் கிடைத்ததும் நன்றி என்ன விலை என்று கேட்கிறார்.
ஜெயலலிதாவுக்கு ஆப்பு வைக்கிறதும் நன்றிகெட்டதனமும் கை வந்த கலை
வைகோ வையே கழட்டி விட்டவங்களுக்கு விஜயகாந்த் எம்மாத்திரம்
எல்லாம் அரசியல்........
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment