/> குண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 24 September 2011

குண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்

குண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்;

குண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது.இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்க்கொள்வது நல்லது.அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும்.

காயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன்..ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன...எந்த மூலிகையில் மிக மிக அதிகமான இயக்க ஆற்றல் -எலெக்ட்ரான் -பிராண சக்தி உள்ளதோ,
எந்தெந்த மூலிகையில் மிக மிக அதிகமான பாஸ்பரஸ் தனிமம் இருக்கிறதோ,
அதுவே மிக சிறந்த காயகல்ப மூலிகையாக நமது சித்தர்கள் பகுத்து வைத்துள்ளனர்.
அவற்றை உட்க்கொண்டால் வெகு விரைவில் அமானுஸ்ய சக்தி பெறலாம்.

அப்படிப்பட்ட மூலிகைகள் பட்டியல்;

1.பொற்சீந்தில்
2.விழுதி இலைக்கிழங்கு
3.பேய்சுரை
4.சர்க்கரை வேம்பு
5.கஞ்சா
6.கருநெல்லி
7.வெள்ளைப்பூ தூதுவளை
8.அழுக்கண்ணி
9.நத்தைச்சூரி விதை
10.நாகதாளி
11.சாயா விருட்சம்
12.ஜோதி விருட்சம்
13.சுணங்கி விருட்சம்
14.செங்கத்தாழை
15.கிளிமூக்கு பழம்
16.சஞ்சீவி மூலிகை
17.அமுரி உப்பு
18.சக்தி சாரணை
19.ஓமம்
20.வல்லாரை

இந்த மூலிகைகளில் பிராணா சக்தியும் பாஸ்பரஸ் சக்தியும் மிக அதிகம்.இதை உண்பதன் மூலம் நமது குண்டலினி ஆழ்மனம் பாஸ்பரஸ் ஆக்சைடு விழிப்படையும்.இதற்காகவே கொல்லிமலை,சதுரகிரி போன்ற மூலிகை வனங்களில் நம் சித்தர்கள் தேடி அலைந்து இவைகளை சேகரித்தனர்.பல சித்துக்களையும் செய்தனர்.

ஆனால் இவற்றை உண்பதில் நிறைய விதி முறை இருக்கிறது.சாதரண உணவை சாப்பிடுவது போல இதை உண்ண முடியாது.காரணம் இவை அதிக வீரிய சக்தி கொண்டவை.கொஞ்சம் அதிகம் ஆனாலும் உடல் சூடு அதிகமாகி மண்டைக்காய்ச்சல் ஏற்ப்பட்டு புத்தி பேதலித்துவிடும் என சித்தர்கள் எச்சரிக்கின்றனர்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner