/> ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 2 September 2011

ஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக


கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக

ஜாதகத்தில் 7ம் இடம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்களாகிய சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய், ராகு 10 சந்திரன், ராகு 10 சூரியன், செவ்வாய் 10 சூரியன், சனி 10 சந்திரன், சூரியன்10சனி அமையப்பெற்றவர்களும், களத்திரஸ்தானாதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் குடும்பவாழ்வில் போராட்டமாக இருக்கும். பிரிவு ஏற்படலாம். தினசரி சண்டை, சச்சரவுகளாக காணப்படலர். இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். சாப்பாடு விஷயம் முதல், எதற்கெடுத்தாலும் குற்றம், குறை காணுகிற வாழ்க்கை துணை அமைந்து கஷ்டப்படுகிறீர்களா...

 கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக முத்து அல்லது சந்திரகாந்தகல் பதித்த வெள்ளி மோதிரம் அணியலாம்.  இவை சந்திரனின் ஆகாஷண சக்தியை தன்னகத்தே கொண்டவை. காதலுக்கு காரகத்துவம் வாய்ந்த கிரகமாகிய சந்திரன் சக்தி பூரணமாக கொண்ட ரத்னங்கள் முத்து, சந்திரகாந்த கற்கள் ஆகும். முத்து ஒரிஜினல் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது. ஹைதராபாத் முத்து எனப்படும் செயற்கையாக தயாரிக்கப்படும் முத்துகளே அதிகளவில் இப்போது கிடைக்கின்றன. இதைவிட, சந்திரகாந்தகல் அணிவது மிக உத்தமம். இந்தகல் மிகவும் குளிர்ச்சியானது. சந்திரன் சக்தியை உறிஞ்சி வழங்கக்கூடிய காந்தக்கல் போன்றது என்பதால் சந்திரகாந்தக்கல் எனப்படுகிறது.

இது மனதில் அமைதியும், அன்பையும் ஏற்படுத்தச் செய்யும். மனதில் நம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் கவலை சுமப்பவர்கள், சின்ன விஷயத்திற்கும் பயப்படுபவர்கள் தைரியமாக இதனை அணியலாம். அம்பாள் சக்தி நிரம்ப கிடைக்கும். தாய் கிரகமானாக சந்திரன் இருப்பதால், ஒரு தாயை போல அணிந்தவர்களை காப்பாற்றக்கூடியவை இந்த கற்கள். ஜாதகத்தில் சந்திரன் 6,8,12ல் மறைந்தவர்களுக்கும், கேது, ராகு, செவ்வாய், சனியுடன் இணைந்து காணப்படும் ஜாதகத்தை உடையவர்களும் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களும் இதனை அணியலாம். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த கல் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த தேதிக்காரர்களே அதிக கற்பனை, வீண்பயம், மனக்குழப்பத்தை அதிகம் உடையவர்களாகவும், குடும்ப பிரச்சினைகளை சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். 8,17,26,9,18,27 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து மனவருத்தத்துடன் வாழ்கிறார்கள். 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் நல்லது. 8,9 வரும் எண்களை பிறந்த தேதியாக கொண்டவர்களை தவிர மற்ற எண்காரர்களை இவர்கள் மணக்கலாம்.
Related Article:

Post Comment

1 comment:

Anonymous said...

அருமையான விளக்கங்கள்.!
மிக்க நன்றி !

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner