/> ஈரோடு உணவகங்கள்;குப்பண்ணா (அசைவம்) | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 15 September 2011

ஈரோடு உணவகங்கள்;குப்பண்ணா (அசைவம்)

ஈரோடு பக்கம் நீங்க வந்தா,அங்க சாப்பிட நல்ல மெஸ் எது னு நீங்க தேடும்போது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னுதான் இந்த கட்டுரை.

ஈரோடு பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ,ரவுண்டானா அருகில் வ.வு.சி பார்க் செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு லாட்ஜ் அருகில் இருக்கிறது குப்பண்ணா ஹோட்டல்.அசைவத்துக்கு புகழ் பெற்ற ஹோட்டல்.மதியம் செம குமபலாக இருக்கும்.ஈரோடு விஐ.பி வீடுகளுக்கு பார்சல் போய்க்கொண்டு இருக்கும்.காரில் வருபவர்கள்,வெளியூர்காரர்கள் என வந்துகொண்டே இருப்பதால் மதியம் சாப்பிட இடம் கிடைப்பதே அபூர்வம்.பெண்கள் பரிமாறுகிறார்கள்.சுத்தம்னா அப்படியொரு சுத்தம்.மினரல் வாட்டர்..ஃபேமிலி ரூம்.ஸ்டார் ஹோட்டல் போல மேஜை,நாற்காலி அலங்காரம்.சாப்பாடு,முட்டை,சிக்கன் குழம்பு,மீன் குழம்பு,மட்டன் குழம்பு என வைக்கிறார்கள்.குழம்பு எல்லாமே வீட்டு சமயல் போல அவ்வளவு ருசி.இதற்கு சைட் டிஷ் ஷாக நாட்டுக்கோழி வறுவல் ரொம்ப சூப்பரா இருக்கும்.

மதியம் மட்டன் பிரியாணி செம டேஸ்டாக மணமாக இருக்கும்.சில ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்டா தக்காளி சாதம் மாதிரி இருக்கும்.இங்கு பிரியாணி பிரியாணி மாதிரி இருக்கும்.மட்டன் சுக்கா,மீன்,எல்லாமே இருந்தாலும் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி விலையும் கொஞ்சம் கூடத்தான் இருக்கும்.

ஒருமுறை சாலமன் பாப்பையா சிக்கன் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர் ஈரோடு எப்போது வந்தாலும் இங்குதான் சாப்பிடுவாராம்.

இப்போது தி.மு.க வில் இருக்கும் முத்துசாமிக்கு சொந்தமான ஹோட்டல் என நினைக்கிறேன்.

சைவ ஹோட்டல் ஒண்ணு சொல்லிட்டு போங்கன்னு சொல்றவ்பங்களுக்கு என்னோட சாய்ஸ்...அதே ரவுண்டானா அருகில்...பால்பண்ணை உணவகம் இருக்கும்.அந்த மெஸ் தயிர சாதம்,சாம்பார் சாதம் ஏ ஒன் தான் போங்க...சாப்பாடு,சாம்பார் வகையும் உண்டு....கீரை பொறியல்,கூட்டு,கெட்டி தயிர் எல்லாமே மாமி கைப்பக்குவம் மாதிரி அவ்வளவு ருசி.அந்த லைன்ல இன்னும் இரண்டு சைவ ஹோட்டல்களும் இருக்கு..அங்கும் நன்றாகவே இருக்கும்.பிருந்தாவன் ஹோட்டல் மாதிரி புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு போய் ஆறிப்போன உணவை சாப்பிட்டு,காசை வீணாக்காதீங்க!


Related Article:

Post Comment

7 comments:

Anand said...

Thanks for sharing...Somebody can write about good hotels in bangalore? i'm struggling lot...

Samantha said...

Gud share sir...

மேரிஜோசப் said...

payanulla padivu

மேரிஜோசப் said...

payanulla padivu

IlayaDhasan said...

அடடா ,பசி கெலபுட்டீங்க ...
சூர்யா படத்தில் விஜய் வில்லன்

naren said...

அடுத்த தடவை ஈரோடு வரும்போது பால்பண்ணை மெஸ் தான். உங்களை நம்பி அதற்கு செல்கிறேன் சார்.

GANESH said...

I also from Erode.You are corect.
Keep it up.....

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner