/> கருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 28 September 2011

கருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்

அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஜாதகம்;

ஜோதிடம் மூலம் ராசிபலன் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை கணித்து விட முடியாது.என் ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா என பார்க்க கூடது.ஜாதகப்படி அரசு துறையில் அமர ஒருவருடைய ஜாதகத்தில் அரசு கிரகங்களாகிய சூரியனும்,உத்தியோககாரகனாகிய செவ்வாயும்,பெரிய பதவியில் அமர குருவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அது மட்டுமில்லாமல் அவர்கள் வீற்றிருக்கும் இடத்தை பொறுத்தும் அமைகிறது.சூரியன்,செவ்வாய்,குரு போன்றவர்கள் கேந்திரத்திலோ,திரிகோண ஸ்தானத்திலோ உச்சம் பெற்றோ,ஆட்சி பெற்றோ,அல்லது மறைவு ஸ்தானத்தில் அமையாமலும் இருக்க வேண்டும்.மேலும் அந்தந்த ஸ்தானங்கங்களை பார்த்தும் மற்றும் அம்சத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் லக்கினாதிபதியின் நிலை,அரசு துறையில் அமரும் யோகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.மேலும் அரசு உத்யோகம் பெற சூரியனுடன் குருவும்,செவ்வாயுடன் சம்பந்தம்,இணைவு,பார்வை பெற்றுள்ளனரா அதாவது செவ்வாயை ,குரு பார்வை செய்கிறாரா..அல்லது குரு செவ்வாயை பார்வை செய்கிறாரா எனவும் பார்க்க வேண்டும்.தொழில் ஸ்தானமாகிய பத்தாம் பாவத்துடன் இவர்கள் தொடர்பு இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

ஜோதிட விதிப்படி,ஐந்தாம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு,சூரியன்,செவ்வாய் சம்பந்தம் பெற்றுள்ளனரா..?அல்லது அந்த வீட்டதிபதிகள் பலம் எப்படி என்பதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே இவருக்கு அரசு உத்யோகம் கிடைக்கும் என்பதை சொல்ல முடியும்.

கருணாநிதி ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்று மறையாமல்,அரசியல் காரகனான் சூரியனுடன் புதன் அமர்ந்ததும் ,மேலும் செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் பெற்று பஞ்ச மகா யோகத்தில் ஒன்றான ருச்சிக யோகம் பெற்று கேந்திரத்தில் பலம் பெற்றதால் ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்துஅரசு சம்பளம் பெற்று பல முறை எம்.எல்.ஏ ஆக இன்று வரை அரசு சம்பளம் பெறுகிறார்.ரிட்டையர்டே கிடையாது...

மக்கள் செல்வாக்கிற்கு என்ன கிரகம் என்றால் சனிதான்.அவர் பெற்றால் மக்கள் செல்வாக்கு கிடைக்கும்...காரணம் என்ன..? கடுமையாக உழைப்பு..மக்களை தொடர்ந்து சந்தித்து உறவு வளர்க்க இந்த சனிதான் காரணம்..கருணாநிதி ஜாதகத்தில் சனி துலாத்தில் உச்சம் பெற்று கேந்திரத்தில் பலமாக இருக்கிறாரே.கவிதை,சினிமாவுக்கு வசனம் எழுதுனாரே அதுக்கு எந்த கிரகம் காரணம்...கற்பனை...காவியம்...காதலுக்கு அதிபதி சந்திரன் ரிசபத்தில் உச்சம் பெற்று நிற்கிறாரே...மன திடம்,மதி யூகம் இதற்கும் இவர்தான் காரணம்..சந்திரன் தெளிவா இருந்தா ஆளும் ரொம்ப தெளிவா இருப்பார்...

தந்திரம்,சாமர்த்தியம்,பிறரை தன் வசப்படுத்தும் ஆற்றலுக்கும் சந்திரன் தான் காரணமா...இல்லை..அத்ற்கு புதன் அதிபதி..சனி,புதன் பார்வை இருப்பது இன்னும் சிறப்பு.அது கருணாநிதி ஜாதகத்தில் இன்னொரு பெரிய பலம்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner