Friday, 16 September 2011

ஜெயலலிதாவுக்கு கைகொடுக்கும் எம்.ஜி.ஆர்

ஜெயலலிதாவுக்கு கைகொடுக்கும் எம்.ஜி.ஆர்;


எம்.ஜி.ஆர் தனது சினிமாவில் சிகரெட் பிடிப்பது,மது அருந்துவது,பெண்களிடம் தவறாக நடப்பது போன்ற காட்சிகளில் இறுதிவரை தோன்றாமல் நடித்தவர்.இது மிக கஷ்டமான ஒரு சாதனை.மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை சினிமாவில் சொன்னவர்.பாடல்களும் அர்த்தமுள்ளதாகவும்,தத்துவம் நிரம்பியதாகவும் இருக்கும்.அதனால்தான் மக்கள் அவரை வாத்யாரே என்றனர்.இப்போதைய சினிமாக்களில் மங்காத்தா வில் அஜித் எல்லா கெட்ட பழக்கமும் உள்ள நடிகராக நடித்திருக்கிறார்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் கெட்டவனாக நடிக்கும் ஹீரோ கடைசியில் ஹீரோயினால் திருந்திவிடுவதாகத்தான் காட்சி இருக்கும்.ஆனால் கெட்டவனாக இருப்பது அதாவது எல்லா கெட்ட பழக்கத்துடனும் இருப்பது இயல்பானது போல செய்தி சொல்கிறது மங்காத்தா.இனி வரும் பெரும்பாலான படங்களும் இந்த டிரெண்டை கடைபிடிக்க ஆரம்பிக்கும்.இன்னொரு அதிர்ச்சியும் இருக்கிறது பில்லாவில் நாம ஒருத்தன் வாழணும்னா எத்தனை பேரை கொன்னாலும் தப்பில்லை என்ற தத்துவத்தை சொன்னவர்,மங்காத்தாவில் நிறைய பணம் கொள்ளையடிச்சா எத்தனை பொண்டாட்டி வேணா கட்டலாம் நு தத்துவம் சொல்றார்.

பணம் கொள்ளையடித்தல்,முன்னேற என்ன வேணா செய்தல்,மது,சிகரெட் சாதாரண அன்றாட பழக்கம் போல காட்டுதல் இவை இளைஞர்களை வெகு விரைவில் சீரழிக்கும்.காரணம் சினிமா மக்கள் ஆழ்மனதில் அப்படியே பதியும்.அதை நடைமுறை வாழ்விலும் கொண்டு வர தூண்டும்.

இதையெல்லாம் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் ஒரு வாத்தியார் என்பதில் மட்டுமில்ல எவ்வளவு நல்ல மனம் கொண்ட மனிதன் என புரிகிறது.தமிழக சட்டமன்றத்தில் இப்போதெல்லாம் எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்லும்போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா வும் அவரது மந்திரிகளும் எம்.ஜி.ஆர் பாடல்களை தான் பதிலாக பாடுகின்றனர்.கருணாநிதி அரசு சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது.அந்த சிக்கல்களை விடுவிக்க முடியாமல் தடுமாறுகிறேன் என்பதை விளக்கும் ஒரு மந்திரி பாடுகிறார்;
அவனுக்கு என்ன தூங்கிவிட்டான்;
அகப்பட்டவன் நானல்லவா..?

இதை முதல்வர் கைதட்டி ரசிக்கிறார்.

மீனவர் நலனுக்கான ஒரு கல்லூரி அடிக்கல் நாட்டியதும்,

கரை மேல் பிறக்க வைத்தான்;
எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்;

என மீனவர் கஷ்டங்களை பாடிய எம்.ஜி.ஆர் பாடல் மீனவர் கஷ்டங்களை சொல்லியது.அவர்கள் துயர் துடைக்க அம்மா கொண்டு வந்த மகத்தான திட்டம் இது என்கிறார் ஒரு மந்திரி.

நாளை நமதே ....இந்த நாளும் நமதே

என்ற பாடல்,இன்னிக்கும் நம்ம ஆட்சிதான்.இனிஎப்போதும் நம்ம ஆட்சிதான் என்பதை சொல்ல முதல்வருக்கு நல்ல வாய்ப்புள்ள பாடலாக அடிக்கடி அமைகிறது



இதனால் இந்த ரூட் நல்லாருக்கே என மந்திரிகளும் அந்த ரூட்டை பிடிக்க எம்.ஜி.ஆர் பாடல்களை மனப்பாடம் செய்கிறார்களாம்.இறுக்கமான சட்டசபையில் பாடல்கள் அதுவும் தத்துவம் நிறைந்த எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடுவதும் வரவேற்கதக்கதுதான்.

அண்ணா பிறந்த நாள் வருகிறது.ஜெயலலிதா மக்கள் முன் பாடுகிறார்;

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் எங்கும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்;
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்;

இது ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உற்சாகம் தருகிறது.

எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கும் சிலிர்ப்பை உண்டாக்குகிறது.ஆம் எம்.ஜி.ஆரின் பாடல்களை கருணாநிதியா பாடப்போகிறார்?

இதயத்தை தந்திடு அண்ணா 

என இருப்பதெல்லாம் போதாது என,அத்ற்கும் ஆசைப்படுகிறார் கலைஞர்.



Related Article:

Post Comment

3 comments:

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சதீஷ்குமார் சார்!

வித்தியாசமான பார்வை! வித்தியாசமான சிந்தனை!

naren said...

எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி நடித்த படங்களை எந்த காலத்தில் பார்த்தாலும் ஒரு “feel good factor" இருக்கும். இது எந்த நடிகராலும் சாத்தியபடவில்லை.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, பிறந்தவர்கள் கூட அவரின் படத்தை ரசிப்பதை பார்த்திருக்கிறேன்.
படம் opening காக எப்படி வேண்டுமானலும் நடிப்பார்கள்.

பதிவுக்கு நன்றி.

N.H.பிரசாத் said...

என்றைக்குமே வாத்தியார், வாத்தியார் தான் அண்ணே. Thanks for Sharing.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner