/> நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 15 September 2011

நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர்

நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர்;

சீனர்கள் இந்த நாடிகளை பற்றி பழங்காலம் திட்டே அறிந்துவைத்திருந்தனர்.நாடிகளுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.இதற்கு காரணம் போகர் சித்தர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ததாக அவரது குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே அதனாலா என்றால் இருக்கலாம்..உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் இந்த நாடிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிந்து வைத்து இருந்தனர்.
அவர்கள் நாடியை பற்றி சொல்லும் கருத்துக்கள் இதுதான்.


நாம் உணவின் மூலம் சுவாசத்தின் மூலம் பெறும் சக்தியானது,இந்த நாடிகளின் மூலம் பிறவி உடலையும் பிராண உடலையும் புத்தியையும் மனதையும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறது.
இந்த நாடிகளில் எங்காவது மிக சிறிய அடைப்பு ஏற்படுமேயானால் சக்தி இயக்கம் தடைபடும். அல்லது சக்தி இயக்கம் மெதுவாக நடைபெறும்..அதனால் ஸ்தூல உடல் ,புத்தி,பிராணன்,மனம் அனைத்தும் பாதிக்கப்படும்.

இதை சரி செய்வதற்கு விசேச ஊசிகளை பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள் அவர்கள் அந்த விசேஷ ஊசி மூலம் சக்தி தடைபட்ட இடத்தில் சில அறிகுறிகள் மூலம் அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு ஊசியால் குத்துவர்.அப்போது அந்த அடைப்பு நீங்கும்.இதனால் சக்தியானது நாடிகளில் பழையபடியே செல்ல ஆரம்பிக்கும்.உடல்,புத்தி,மனம் அனைத்தும் பழைய நிலையை அடையும் .

சீன நாட்டார் அறிந்து வைத்திருந்த இந்த கலையை நம் நாட்டு சித்தர்களும் அறிந்து வைத்திருந்தனர்.நம் சித்தர்கள் அவர்களுக்கும் பழமையானவர்கள்.ஆனால் நம் சித்தர்கள் இதே முறையை ஊசி இல்லாமல் கை விரல்கள் மூலம் சரி செய்தனர்.அதற்கு பெயர்தான் வர்ம கலை.


Related Article:

Post Comment

1 comment:

M.R said...

ஆமாம் நண்பரே .

தடைகளை தூண்டியும் ,வலிகளுக்கு

எதிர் ஆக்கங்களை தூண்டியும் ,சில சமயங்களில் சில வலிகளை தூண்டி சமன் செய்தும் நிவாரணம் அளிப்பார்கள்.

ஊசி இல்லாமல் அக்கு பிரசர் முறையில் கை விரல்களால் குறிப்பிட்ட புள்ளிகளை தூண்டியும் வைத்தியம் செய்வார்கள்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner