/> சீனத்தில் இருந்து வந்ததா..வாஸ்து? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 20 September 2011

சீனத்தில் இருந்து வந்ததா..வாஸ்து?


சீனத்தில் இருந்து வந்த்தா..வாஸ்து?
ஜோதிட சாஸ்திரம்,ஆகம சாஸ்திரம்,தர்ம சாஸ்திரம் ஆகியவற்றை போல் முக்கியமான ஒன்றுதான் வாஸ்து சாஸ்திரம்.இதன் பூர்வீகம் சீனா என்று பலரும் தவறாக கூறி வருகிறார்கள்.இந்த சாஸ்திரம் நமக்கு சொந்தமானது.இதை நமக்கு உருவாக்கியவர்கள் பாரத தேசத்தின் பெருமைக்குறிய முனிவர்களும்,ரிஷிகளும் ஆவர்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை நம் சாஸ்திர வல்லுனர்கள் எழுதி சென்றிருக்கின்றனர்.

தேவர்களின் தச்சனான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட்து வாஸ்து சாஸ்திரம்.இதை நம் முனிவர்கள் தொகுத்தனர்.இதை பின்பற்றியே ராஜாக்களும் ,செல்வந்தர்களும் தங்கள் அரண்மனைகளையும்,மாளிகைகளையும் அமைத்து கொண்டனர்.வெள்ளைக்கார்ர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் வாஸ்து சாஸ்திரப்படியே கட்டப்பட்ட்து.
எந்த ஒரு இட்த்தையும் அது வாஸ்து முறைப்படி அமைந்துள்ளதா என சோதித்தபின்பே அதை வாங்கி கட்ட வேண்டும்.
புகழ் பெற்ற வாஸ்து நூல்கள்;
தந்திர சமுச்சாயம்,வாஸ்து வித்யா,மகா சந்திரிகா சுபசமயம்,ராஜ வல்லபம்,விஸ்வகர்மா பிரகாசிகா,வாஸ்து ரத்னாவாளி,வாஸ்து ராஜ வல்லபம்,வாஸ்து பிரதீபிகா,விவகார சமுச்சாயம்,முஹூர்த்த சிந்தாமணி,பிரச்சன மார்க்கம்,விஸ்வகர்மா வித்யா பிரகாசிகா,வாஸ்து ரத்ன பிரதீபம்,சாராவாலி,மாதவியம் ,ஜோதிஷ பிரம்ம ரகசியம்–இப்படி எத்தனையோ நூல்களை நம் முன்னோர்கள் கொடுத்துள்ளனர்.


Related Article:

Post Comment

1 comment:

raj dev annamalai said...

Sir please reply and explain... Dob:14.1.1984...mesha lagnam... Rishab rasi... Kiruthigai natchatram... Chandra+ raghu ....now, raghudasa Surya bhukthi palangal please....

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner