/> ஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 10 October 2011

ஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2

குரு ஒரு வருடத்தில் 3 வீட்டிற்கு மாறினால் 2 கோடி பேர் மரணம் அடைவார்கள்.,இலங்கை இன அழிப்பு,காலத்தில் குரு 3 வீடுகள் அதாவது ராசிகளுக்கு மாறியது.அப்போதைய காலத்தில் வெள்ளம்,போர் இவற்ராலும் மக்கள் அதிகமானோர் அழிந்தனர்.இந்த தகவல் காலப்பிரகாசிகை என்ற பழம்பெறும் ஜோதிட நூல் சொல்கிறது.
----------------------------
கிரகங்கள் வீடு தவறாமல் இருப்பது விசேசம்.குறிப்பாக லக்னம் முதல் 5 வீடுகள் வரை இருந்தாலே போதுமானது.

ரிசபத்தில் சூரியன் மிக நல்ல பலன்களை தரும்.அதாவது வைகாசி மாசம் பொறந்தவங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கை உண்டு.

ஜோதிடத்தில் பரிவர்த்தனை யோகம் பற்றி சொல்லப்படுவதுண்டு.பழைய ஜோதிட நூல்களில் பரிவர்த்தனை யோகம் பற்றி சொல்லவில்லை.புலிப்பாணி ஜோதிடம் நூலில் கூட இரண்டு பாட்டு மட்டுமே உண்டு.

லக்கினத்துக்கு 2ல் சூரியன் இருந்தால் வலது கண் பாதிப்பு ஏற்படும்.
5 ல் சனி இருந்தால் இருதய கோளாறுகளை ஏற்படுத்தும்.
---------------

லக்கினத்துக்கு இரண்டில் ராகு,8ல் கேது இருந்தாலும் இல்லறம் இனிக்காது.
-----------------
3ல் சுக்கிரன் இருந்தால் மதன காமராஜ யோகம்.பல பெண்களை அடைவர்.காம சுகம் அதிகம் அனுபவிப்பர்.ஆபாச தொழில் செய்வார்களாம்.

-----------------
4ல் சனி இருந்து சுப கிரகங்கள் பார்வை இல்லாவிட்டால் சாமியார் தான்.எந்த சுகமும் கிடைக்காது.பல மகான்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உண்டு.இதுதான் முற்றும் துறந்தவர் என அர்த்தம்.4ல் சுக்கிரன் அல்லது சுப கிரகம் இருப்பின் எல்லாமே அனுபவிக்கும் சாமியார்.இருக்குற சாமியார் பெண் சுகம் திருட்டுதனமாக அனுபவிப்பார்.அல்லது சாமியார் ஆக முடியாது.Related Article:

Post Comment

2 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தெரியாத ஜோதிட விஷயங்கள்..
பகிர்வுக்கு நன்றி..

gonzalez said...

hello boss why suriyan is auspicious in rishabam???? any reason...bcoz risabam is venus house la??? is it good for virichiga lagnam

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner