/> 2012 எண்கணித பலன்கள் astro numerology | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Tuesday, 11 October 2011

2012 எண்கணித பலன்கள் astro numerology

2012 எண்கணித பலன்கள் astro numerology;

எண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.


1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.

பிறந்த தேதி 2,11,20,29 உடையவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும் வருடம்.நீண்ட நாள் எண்ணங்கள்,ஆசைகள் நிறைவேறும்.4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த வருடம் மறக்க முடியாத ஆண்டாக மலரும்.பிரந்த தேதி கூட்டு எண் 4,2 வந்தாலும் அதிர்ஷ்ட ஆண்டாக 2012 திகழும்.2005 ஆம் வருடத்தில் பிறந்த தேதி 2 உடையவர்களுக்கு எல்லாம் சிறப்பான பலன்களை கொடுத்தது.இதை புத்தகத்திலும் எழுதியிருந்தேன்.இன்று மீண்டும் அந்த வாய்ப்பு அமைகிறது.எண் கணித மேதை சீரோ தன்னுடைய எண்கணித நூலில் பிறந்த தேதி 2 எண் உடையவர்களுக்கு 7,5,6 எண் வரும் ஆண்டுகளில் எல்லாம் எப்போதும் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும் என உறுதி பட சொல்லியுள்ளார்.அது என் வாழ்வில் அப்படியே பலிப்பதை உணர்ந்தேன்.அதையே உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.

9,18,27,8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் எதிரிகள் தொல்லையை அடிக்கடி அனுபவிக்கும் சூழல் உண்டாகிறது.2,4 எண்களில் பிறந்தவர்களால் இந்த தொல்லை இவர்களுக்கு அதிகம் உண்டாகும்.

1,10,19,28 தேதிகளில் பிரந்தவர்கள் அதிக பண இழப்பு,விரய செலவுகள் ,அலைச்சல் மிகுந்த ஆண்டாகவே திகழும்.

3,12,21,6,15,24 தெதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும்,திருமண முயற்சிகள் கைகூடும் ஆண்டாக புது வாழ்வு தொடங்கும் ஆண்டாக இருக்கும்.



Related Article:

Post Comment

3 comments:

வைரை சதிஷ் said...

கலக்கீங்க போங்க

அருமையான தகவல்

Advocate P.R.Jayarajan said...

Sir,

Predictions to the persons who born on 5, 14, 23 ?

I born on 14-06-1968..

தமிழ்வாசி - Prakash said...

என் எண்ணுக்கான பலன் தெரிந்து கொண்டேன்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner