/> சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 5 October 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்

கர வருடம் ஐப்பசி 15 ஆம் நாள் 1.1.2011 அன்று காலை 10 மணிக்கு சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.இதனால் ஏற்படும் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் எழுதி வருகிரொம்.அந்த வரிசையில் மீன ராசி.


பூரட்டாதி 4 ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை உடைய மீனம் ராசி அன்பர்களே.குருவின் ராசியை பெற்ற நீங்கள் குருவின் முழு ஆசியை பெற்றவர்.இயற்கையிலேயே தெய்வ சக்தி நிரம்பியவர்.உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கும்.சுய தொழில்,அரசு,ஆன்மீகம்,ஷேர் மார்க்கெட்,கமிசன்,ஆசிரியர்,பேச்சாளர் போன்ற துறைகளில் ஜொலித்து கொண்டிருப்பவர் நீங்கள்.

மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் காணப்படும்.நன்பர்கள் அதிகம் உண்டு.பொது சேவையில் அதிக ஆர்வம் உடையவர்.அப்படி இருந்தால் தான் உங்கள் ராசிப்படி உங்களுக்கு மன நிம்மதி,மகிழ்ச்சி உண்டாகும்.

பல ஆலய தரிசனம்,சித்தர் வழிபாடு,யோகா,தியானம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர்.

உங்கள் ராசி நாதன் குரு டிசம்பர் 26 வரை வக்ர கதியில் செயல்பட்டு கொண்டிருப்பதால் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது.குடும்பத்தில் அதிக வாக்குவாதம்,அதிக விரய செலவு காணப்படும்.

சனி பெயர்ச்சி நவம்பர் 1 முதல் அஷ்டம சனியாக மாறுவதால் இன்னும் இரண்டரை வருடத்திற்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் தவறாகவெ புரிந்து கொள்ளப்படும்.தொழிலில் மந்தம்,குடும்பத்தில் மாறி மாறி மருத்துவ செலவுகள்,பணக்கஷ்டம்,அலைச்சல் போன்றவையால் மன உளைச்சல் ,வர வேண்டிய பணம்,கொடுத்த பணம் வராமை போன்ற பலன்கள் உண்டாக இருக்கின்றன..எனவே தெய்வ வழிபாட்டுடன் நிதான போக்குடன்,கடுமையாக உழைத்தால் மட்டுமே இவற்றை சமாளிக்க முடியும்.

அன்பான பேச்சும்,சிரித்த முகமும் நம்மை என்றும் பிறரிடம் நட்பு கொள்ள வைக்கும்.நண்பர்கள்,உறவினர்களுக்காக தேவையில்லாத பிரச்சனையில் துணிந்து இறங்கினால் கோர்ட்,வழக்குகளை சந்திக்கவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சொந்த தொழில் செய்பவர்கள் கடன் வாங்கி முதலீடு,தொழில் விரிவாக்கம் போன்றவை இக்காலங்களில் ஆபத்தானவை.

பரிகாரம்;பழனி முருகன்,சென்னிமலை முருகனை வழிபட நல்லது நடக்கும்.விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்Related Article:

Post Comment

1 comment:

venkatesa gurukkal said...

அஷ்டம சனி யால் ஏற்படும் விளைவுகள் பற்றி புலிப்பாணி ஜோதிடத்தில் ஏதேனும் கூறப்பட்டுள்ளதா?

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner