/> சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 4 October 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்

சனி பெயர்ச்சி கர வருடம் ஐப்பசி 15 ஆம் நாள் 1.11.2011 காலை 10 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சியாகிறார்.அது சமயம் எந்தெந்த ராசிக்கு என்ன நன்மை தீமை என பார்த்து வருகிறோம்.அதில் இன்று கும்பம் ராசி.


கும்பம் ராசிக்கு ராசிக்குறிய படமாக கலசம் படம் போட்டிருப்பார்கள்..காரணம் இவர்கள் மங்களகரமானவர்கள்.பல கோயில் கும்பாபிசேகம்,ஊர் நல்ல காரியங்களில் இவர்கள் முக்கியஸ்தர்களாக இருப்பதை பார்க்கலாம்...

கும்பம் சனியின் ராசி என்பதால் கடுமையான உழைப்பு உடையவர்கள்.பல சமயம் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனவும் வருந்துவீர்கள்.

கும்பம் ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படியிருக்கும்? கடந்த இரண்டரை வருடங்களாக அஷ்டமத்து சனியால் பல துன்பங்களை அனுபவித்து வந்த நீங்கள்,பல இழப்புகளை,பணக்கஷ்டங்களை ,தொழில் பாதிப்புகளை சந்தித்த நீங்கள்,னவம்பர் 1 முதல் அஷ்டம சனியில் இருந்து விலகுகிறீர்கள்..வரப்போகும் இரண்டரை வருடங்கள் சனி உங்களுக்கு 9 ஆம் இடத்தில் இருந்து பல நன்மைகளை கொடுக்கவிருக்கிறார்.

9 ஆமிடம் பாக்யஸ்தானம் ..தந்தை வழியில் சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும்,நன்மைகளையும் அள்ளி தரும்.தெய்வ பலம் அதிகரிக்கும்.எதிரிகள் தொல்லை காணப்பட்டாலும்..இதுவரை இருந்து வந்த காரிய தடைகள் நீங்கி முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்...

கும்ப ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் ஆதரவை எளிதில் பெற்று விடுவார்கள்.பொது மக்களிடம் எளிதில் பழக கூடியவர்கள் ,வசியமன பேச்சு திறமை உடையவர்கள் என்பதுதான் பொதுக்கருத்து.அவிட்டம்,சதயம்,பூரட்டாதியில் பிறந்தவர்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது அவசியம்..அவிட்டத்தில் பொறந்திருப்பான் போலிருக்கு..அடங்காமல் திரியறான் என கிராமங்களில் துறு துறுவென இருக்கும் குழந்தைகளை திட்டுவதை பார்த்திருப்போம்.காரணம் இவர்களின் முரட்டுத்தனம் தான்...அவசரகுணத்தை சரி செய்து கொண்டால்...எல்லோரையும் பகைத்துக்கொள்ளும் சூழல் மாறும்..
Related Article:

Post Comment

1 comment:

Vishnu Varadhan said...

Tnx a lot for your immediate response. Didnt expect that you will write about Kumba raasi today itself. :)

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner