/> வாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 1 October 2011

வாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்

1.அட்டை ,ப்ளாஸ்டிக்,மரத்தினால் செய்த பிரமிட்டை முன் அறையில் வைத்தால் -எதிர்மறைஉயான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

2.கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும்.

3.கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும்கவர்ச்சியும் தரும்.


4.நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும்.உதாரணம்-எகிப்தில் உள்ள பிரமிடுகள் சதுரமானவை.


5.மேற்கு பகுதி உயரமானால் மேன்மை தரும்.கடின உழைப்பு,தியாக மனப்பான்மை,ஆராய்ச்சி செய்யும் அறிவு,விஞான கண்ணோட்டம்,உயர்நிலை பெரும் யோகம் இவைகளை தரும்.

6.சூரியனின் ஒளிக்கதிகள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விஉழும்படி சன்னல்,கதவுகளை அமைக்க வேண்டும்.அப்பொழுதுதான் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயின் எதிர்ப்பு சக்தி கூடி வரும்.கிருமிகளால்,பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

7.வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது.முக்கியமாக வடகிழக்கு,தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது.அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாலர் அதில் வசிக்க இயலாது...வாடகைக்கு விடும் சூழ்நிலை ஏற்படும்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner