அரசியலே வேண்டாம்டா சாமி -கும்பிடும் வடிவேலு ;
எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி ஆடி தி.மு.க வுக்கு ஆதரவாக விஜயகாந்த்க்கு எதிராக கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரித்த வடிவேலு,கலைஞர் முதல்வர் ஆகி விடுவார் என பெரிதும் நம்பினார்.காரணம் இவருக்கு கூடிய கூட்டம் அப்படி.ஜெயலலிதா முதல்வர் ஆனதும் விக்கித்து போன வடிவேலு நமக்கு அரசியல் வராது...மக்கள் ரொம்ப விவரம்மானவங்க..நாமதான் கேனத்தனமா புரிஞ்சிகிட்டோம் என தெளிவானார்..எனினும் ஜெ...விஜயகாந்த் குரூப்க்கு பயந்து கொண்டு தலைமறைவாக இருந்தவர் தன் மீதான தாக்குதல் எதுவும் வராது என கன்ஃபார்ம் ஆனதும் சுந்தர்.சி யுடன் இணைந்து புதுப்படம் ஒன்றை தொடங்குகிறார்.
விகடன் மாணவ பத்திரிக்கையாளர் கூட்டத்துக்கு வந்த அவரிடம்,உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு போவீங்களா என கேட்டதற்கு,என்னோட கடையை எப்பவோ லைட் ஆஃப் பண்ணி,ஷட்டரை க்ளோஸ் பண்ணி இழுத்து மூடியாச்சு தம்பி என்றாராம்.
பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு,தலைவர் என்னை பொழைப்பை பாருய்யா னு சொல்லிட்டாருங்க.. என்கிறார். கருணாநிதி பிரச்சாரம் பண்றவங்களை போய் பொழப்ப பாருங்கய்யா..பிரச்சாரம் வேண்டாம் என்பாரா..? நல்லா தப்பிக்க கத்துக்கிட்டாரு வடிவேலு.எப்படியோ இனிமேலாவது அரசியல் சாக்கடையில் விழாதீங்க..கைப்புள்ள..!!
Related Article:

8 comments:
we want analysis of thala and vijay astrology..
அட வடிவேலு வந்துட்டாரா? வரட்டும்! வரட்டும்!!
super boss haa haa
அப்போ வடிவேலு தப்பிச்சிட்டாரு
திமுக முத்திரை பலமாக அவர்மீது படிந்துவிட்டதே, இனி ரசிக்க முடியுமா...??? பார்ப்போம்.
http://cinema.dinamalar.com/tamil-news/5309/cinema/Kollywood/Vadivelu-is-not-in-my-film-says-Sundar.C.htm
வடிவேலு என் படத்தில் நடிப்பதாக சொன்னது உண்மையில்லை என்கிறார் சுந்தர்.சி...வடிவேலுக்கு தில்லான தயாரிப்பாளர் உதயைதி ஸ்டாலிந்தான்..கட்சி காரர் ஆச்செ..அவர் காப்பாத்துனாதான் உண்டு.அதுக்குள்ள பயபுள்ள பொய் சொல்லிருச்சே
வடிவேலு செய்த அராஜகத்தை பொது ஜனமான நாம் மறந்தாலும் கேப்டனின் ரத்தத்தின் ரத்தங்கள் அவரை விடமாட்டார்கள்.
Post a Comment