/> வீமகவி ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 24 October 2011

வீமகவி ஜோதிடம்

வீமகவி ஜோதிடம்;

வீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் என மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது ..? என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.


ஜோதிடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)


வீமகவி ஜோதிட பாடல்;

காணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;
வானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு
காணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு
தானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.


விளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..


.(தொடரும்)


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;
Related Article:

Post Comment

4 comments:

செங்கோவி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தீபாவளி வாழ்த்துகள் மாப்ள..

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

Sankar Gurusamy said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

http://anubhudhi.blogspot.com/

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner