/> உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 30 October 2011

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;

நல்ல நேரம் சதீஷ்குமார்வீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...

இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மிதுனம் ராசிபலன்;

மிதுனலக்கினந்தா நுதயமானால்
விளம்புகிறேன் தென்வடக்கு வீதியாகும்
விதனமென்றாலின்வாசல் கிழக்கதாகும்
மெய்யாகும்யிவனில் திரு கிழக்குப் பாழு

மிதுன கும்பமதில்சத்தி குண்டங்கோவில்
மேலின்கீழ் கோவில் காவரயொன்று
அதனமாம்யிவன் குடியை காக்கும் தெய்வம்
அய்யனாரென்று சொல்லி அறிவித்தோமே.

விளக்கம்;

மிதுன ராசிக்காரர் வீடு தென் வடக்கு வீதியாகும்..அதில் கிழக்கு வாச்ல் கொண்டதாக இருக்கும் வீடு இவருடையது.கிழக்கு பக்கம் காலி இடம்.மாரியம்மன் ஆலயம் அருகில் இருக்கும்.கறுப்பு தெய்வங்களான அய்யனார்,கருப்பு சாமி,காத்தவராயன்,போன்ற தெய்வம் இவரது குலதெய்வமாக இருக்கும்.

மிதுன ராசி இரண்டாம் பாதத்தில் பிறந்தால்;

தண்டிலவன் செனனமது யிரண்டாம்பாதம்
தான் வாழும் வீதியது கிழக்கு மேற்கு
அண்டையதுயிவன் வீட்டுக்கடுத்த சந்து
அன்பான சூழியொன்று கோவிலுண்டு
சொல்தேர் அக்கினிவாயு வென்று சொல்லே.

விளக்கம்;

மிதுனம் ராசி இரண்டாம்பாதம் உடையவர் எனில்,கிழக்கு மேற்காக இருக்கும் வீதியில் இவர் வீடு அமைந்திருக்கும்.இவர் வீட்டுக்கு அடுத்த சந்தில் பெருமாள் ஆலயம்,முருகன் ஆலயம் போன்ற சாந்தமான தெய்வம் உள்ள கோயில் இருக்கலாம்.

மிதுனம் 3 ஆம் பாதம்;

ஆழிதனில் மூன்றான பாதங்கேளு
அது தெற்கு வடக்கதுவும் வீதியாகும்
தாழ்வில்லாவாசலது கீழ்மேற்காகும்
சாத்தினேன் அக்கினியில் சாத்தான் மாரி
ஊரினவன கேள் ரிசபம் ராசி தன்னில்
உறுதியாய்சிவசக்தி கோவிலுண்டு
தெரியிவீது தென்புறத்தில் மருதன்கோவில்
தீர்க்கமாய் சொல்லிவிட்டேன் உறுதியாக.


மிதுனம் 4 ஆம் பாதம்;

நல்லவினைராசியது நாலாம்பாதம்
நலமான வீதியது கிழக்கு மேற்கு
பலமானயிப்பாலன் பிறந்தயில்லம்
பண்பான சொந்தமில்லை பாட்டன் வீடு
சொல்லவினைராசிகும்பம் தலையில் குண்டம்
சுகமானவாலயங்க ளுண்டு சொன்னேன்
வல்லமையாய்மனைதனையுங் காக்கும்தெய்வம்
மதுரைவீரப்பனென்று வகுத்து சொல்லே.

குறிப்பு;தமிழகத்தில் இருப்போருக்கு மட்டுமே மேற்க்கண்ட பாடல் சொல்லப்பட்டுள்ளது.துபாய் ல இருந்துகிட்டு,ஹல்லோ நல்ல நேரம் சதீஷ்குமார்ங்களா..இந்த பாட்டு எனக்கு ஒத்து வர்லீங்களே அப்டீங்கபடாது!!
Related Article:

Post Comment

1 comment:

சே.குமார் said...

அதுசரி... சிம்மராசிக்கு என்ன பாட்டுங்க?
அது என்னங்க... வெளிநாட்டுல இருக்கவங்கள எல்லாருமே வாருறீங்க...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner