/> தமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 17 October 2011

தமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்

தமிழ்மணம் கட்டண சேவை tamilmanam vs tamil bloggers part 2


தமிழ்மணம் நிர்வாகி என்ற பெயரில் பல வலைப்பதிவுகளில் வந்து அசிங்கமான எழுத்துக்களில்,மரியாதை இன்றி பின்னூட்டம் இட்ட பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.தமிழ்மணம் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்..இந்த நிமிடம் வரை தமிழ் மணத்தை தூக்கி எறிந்தவர்கள் ,மானஸ்தர்கள்,எண்ணிக்கை 25


தமிழ்மணம் கட்டண சேவை என்பது மற்ற திரட்டிகள் போல விளம்பரதாரர்களுக்கு அல்ல...இது பதிவர்களுக்கானது.எப்படியெனில் இவர்கள் விளம்பர கட்டண பிரிவு தொடங்கியதும் முதலில் தகவல் அனுப்பியது பதிவர்களுக்குதான்.எப்படி தெரியுமா.நாங்கள் கட்டண பிரிவை தொடங்கியிருக்கிறோம்.உங்கள் பதிவை நீங்கள் விரும்பினால் கட்டண பிரிவுக்கு மாற்றிக்கொள்ளலாம்...குறைந்த பட்ச கட்டணம் 5 டாலர்.அதிக பட்சம் 100 டாலர்.முன்பக்கம் நீல நிறத்தில் உங்கள் பதிவை தனித்து காட்ட,25 டாலர் கட்டணம்.என மெயில் அனுப்புகின்றனர்.எனக்கு இந்த மெயில் பலமுறை வந்தது.காரணம் நான் சோதிட பதிவுகள் எழுதுவதும் இல்லாமல்,அடிக்கடி பதிவு போடுவதால் இவர் ப்ளாக்கை கட்டண பிரிவுக்கு மாற்ற நிர்பந்தித்தால் மாற்றிக்கொள்வார் என்பதே காரணம்.நான் அதை கண்டுகொள்ளவே இல்லை.காரணம் கட்டண ஒஇரிவுக்கு மாற்றினாலும் நமக்கு ஒன்றும் பெரிய ஹிட்ஸ் கிடைக்காது என்பது ஒரு காரணம்.தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பகுதிக்கு என் பதிவுகள் உடனே வந்துவிடுவதும் ஒரு காரணம்.

என் ப்ளாக் திடீரென முடக்கப்பட்டது.என் ப்ளாக்கை யாரோ அழித்துவிட்டனர்.அதன் பின் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்து,பார்த்தபோது என் ப்ளாக் கட்டண சேவைக்கு மாறிவிட்டதாக செய்தி வந்தது.எப்படி நான் கேட்காமல் கட்டண பிரிவுக்கு மாறியது என யோசித்து ,அவர்களுக்கு மெயில் செய்தால்,இது தொழில் நுட்ப கோளாறு..சரி செய்கிறோம்..நீங்கள் கட்டண சேவைக்கு மாறிக்கொள்ளுங்களேன் ..இன்னும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும் என்றார்கள்.இல்லை.எனக்கு விருப்பம் இல்லை...என்னை தர்ம தரிசனம் பகுதியிலியே அனுமதியுங்கள் என கேட்டபின்,24 மணி நேரத்தில் என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிய ஆரம்பித்தது.

அதன் சில மாதம் கழித்து என் ப்ளாக் மீண்டும் முடக்கப்பட்டது..இந்த முறை என் மெயில் ஐடியையே தூக்கிவிட்டனர்...மறுபடி எல்லாம் சரி செய்து.,தமிழ்மணம் பட்டையை நிறுவினால் மீண்டும் கட்டண சேவை என பல்லிளித்தது.என்னடா..இவனுக தொழில் நுட்பம் த்தூ..என மறுபடி மெயில் செய்தால்..பழைய கேள்வி வரவில்லை....பதிலாக உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்..அல்லது கட்டண சேவைக்கு மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்...என மெயில் வந்தது..எனக்கு ஒரு எச்சரிக்கை மெயிலும் வரவில்லை.அவர்களாவே என்னை கட்டண சேவைக்கு மாற்றிவிட்டார்களாம்...அவர்களாகவே நீக்கிவிட்டார்கள்..இது சம்பந்தமாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை..அல்லது எச்சரிக்கையும் செய்யவில்லை...இவ்வளவு நாளாக சோதிடம் பதிவுகளை இணைத்துவிட்டு திடீரென ஜோசியம் ஆகாதுன்னா இத்தனை நாளா என்ன பண்ணினே...திடீரென விதிமுறை விதித்து,கட்டாயமாக திணித்து,அவர்களாகவே கட்டண சேவைக்கு மாற்றி..விரும்பினால் வா..இல்லைன்னா போ..என நடந்துகொள்வது சர்வாதிகாரம்தானே..காசி அவர்கள் தமிழ்மணத்தை துவக்கியதும்,பிற்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தலாம் என்பதற்காகவா..? அல்லது தமிழ் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடையவா..?

ஒரு தவறான பதிவு ஒரு பதிவர் எழுதுகிறார் என்றால்,அதை பர்றி அவர்தான் கவலைகொள்ள வேண்டும்.அல்லது ஆபாச பதிவு எனில் அனைவரும் குரல் கொடுத்து திரட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.சோதிடம் எழுதுபவனை நீக்குவோம்..என்றால் அதை நீ முழுமையாக செய்யவில்லையே..என்னை மட்டும்தான் நீக்கியிருக்கிறாய்...காப்பி பேஸ்ட் செய்பவர்களை நீக்குவோம் என்றால் குறைந்தது பத்து பேரையாவது நீக்கவேண்டும்..அதையும் செய்யவில்லை..ஒரு காப்பி பேஸ்ட் பதிவர்கள் கூட நீக்கப்படவில்லை..அப்படி நீங்கள் எத்தனை பேரை நீக்கினீர்கள்..அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி ஏன் பதிவிடவில்லை..? அப்போ இது ஏதேச்சதிகாரம்தானே..?

யாரையும் இவர்கள் நீக்கவில்லை..சிலரை பயமுறுத்தி கட்டாயமாக கட்டண சேவைக்கு மாற்றுகின்றனர்.அதற்கு முதல் பலிகடா நான்.எச்சரிக்கை மெயில் ஏன் செய்யவில்லை என நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.ஆத்திக பதிவை நீக்கினால் பெரியாருக்கு சொம்பு தூக்குபவனுக்கும் அங்கு வேலை இல்லையே..? அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

சோதிடம் வேண்டாம் எனில் ஜோசியத்தை கிண்டல் செய்பவனுக்கும் அங்கு வேலையில்லையே..?அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

காப்பி பேஸ்ட் பதிவு செய்பவர்களை கண்டால் மெயில் செய்யுங்கள் என்றீர்கள்.உடனே கப்சிப்புன்னு சிலர் மாறினர்.ஆனால் என் பதிவை மட்டும் முதலில் நீக்க காரணம் என்ன..? நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே..? முஸ்லீம் நண்பர்களுக்கும் இதே தான்..கட்டண சேவைக்கு மாற கட்டாயப்படுத்தி..விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்..

நான் இப்போது 25 டாலர் கட்டினாலும்,என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் பளிச்சிடும்.5000 ஹிட்ஸ் தினசரி கிடைக்கும் (அவர்கள் உறுதி கொடுக்கிறார்கள்) ஏனெனில் இன்னும் என் தமிழ்மணம் பாஸ்வேர்டு உயிரோடுதான் இருக்க்றது....இதுதான் இவர்களின் தொழில் நுட்பம்.

இவர்கள் தமிழ்மணம் கருவி பட்டை இருப்பதே அவ்வப்போது சிலரை கட்டண சேவை என மாற்றி காண்பிக்கத்தான்.புதிய பதிவர்கள் தினசரி இணைகிறார்கள்...நிறைய பேர் தங்கள் தொழில் சார்ந்து எழுதுகின்றனர்.அவர்களை குறிவைத்தே இவர்களின் இந்த புதிய கட்டாய கட்டணம் சேவை தொடங்கி இருக்கிறது...

இன்று தமிழ்மணம் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூட செய்ய கூடாது என்கின்றனர்.செய்தால் அந்த பதிவர்கள் நீக்கப்படுவார்களாம்...தமிழ்மணத்தை பற்றி எழுதப்பட்ட சில இடுகைகளில் வந்து பெயரிலி எனும் நாகரீகம் இல்லா மனிதன் இவர் முனைவராம்..(என்னய்யா.... நமீதா டீச்சர்கிட்ட ஆய்வு பண்ணி பட்டம் வாங்குனியா) கண்டபடி ஏசுகிறார்.தமிழ்மணம் இவரை அடியாள் வேலைக்கு வெச்சிருக்கும்போல...எங்கெல்லாம் நம்ம பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்களோ அங்கெல்லாம் போயி கழிஞ்சிட்டு வருவதுதான் இவர் வேலை.குட்.ஹல்லோ தமிழ்மணம் இந்தாளு குடுத்த காசுக்கு மேல கூவுறான்..நல்லா மீட்டருக்கு மேல..போட்டு கொடு..

தமிழ்மணம் என்னை என்ன நீக்குவது..என கொந்தளித்து பத்துக்கும் மேற்பட்ட பிரபல பதிவர்கள் தமிழ்மணத்தை தூக்கி கிடாசி இருக்கிறார்கள்.பதிவர்கள் மேல் தமிழ்மணம் நடத்தும் இந்த சர்வாதிகாரத்தை பல பிரபல பதிவர்கள்  சூ## பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..காரணம் இதான் நடுநிலையாம்..இப்படி இருந்துதாண்டா தமிழன் நாசமா போறான்!!


Related Article:

Post Comment

17 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஐக்கான் இப்பத்தான் கரெக்டா இருக்கு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிலநூறு ஹிட்டுகளுக்கும், ஓட்டுகளுக்கும் பதிவர்களை ஒட்டுண்ணிகளாக்கி மகிழ்கிறார்கள்....

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

அந்த ஐக்கான் இப்பத்தான் கரெக்டா இருக்கு.....//
ஹஹா

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

பதிவர்களை ஒட்டுண்ணிகளாக்கி மகிழ்கிறார்கள்.//
இவனுகளும் ஒட்டுண்ணிதான்..அடிக்கடி பதிவை இணைக்கும் 20 பேர் தமிழ்மணத்தை புறக்கணித்தாலே தமிழ்மணம் பொழப்பு நாறிடும்

Abdul Basith said...

எனக்கு ஒரு டவுட்டு..

//nonprofit organization //

இதுக்கு என்ன அர்த்தம்? ஏன்னா, தமிழ்மணம் தளத்தில் Managed by Tamil Media International Inc - A US registered nonprofit organization அப்படின்னு போட்டிருக்கு..

யாராச்சும் பதில் சொல்லுங்களேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டமில் வால்க.. சூப்பர் போஸ்ட் சதீஷ்

இம்சைஅரசன் பாபு.. said...

சதீஷ் நச் பதிவு ..

ஐகான்ல ஒரு துணைக்கால் போட்டா இன்னும் நச்சுன்னு இருந்திருக்கும் ..

சம்பத்குமார் said...

ஓரு திரட்டி வைத்து நடத்துபவருக்குரிய அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல், நாகரீகமற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ்மணம் நிர்வாகியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

இன்று முதல் தமிழ்மணத்தில் இருந்தே விலகிவிட்டேன்.

நட்புடன்
சம்பத்குமார்

நிபந்தனைகள் விதிப்பத்ற்க்கு அவர்கள் யார் நண்பரே ? ஒருத்தருடைய எழுத்துகள் வாசகர்களுக்கு பிடிச்சி போயிருச்சுன்னா திரட்டிகள் திரட்டினாலும், திரட்டாவிட்டாலும் அவங்க தேடிப்பிடிச்சு வந்து படிச்சிருவாங்க. எந்த ஜில்லாவுல இருந்தாலும் அவங்களால அதை படிக்காம இருக்க முடியாது. இதை இனிமேலாவது தமிழ் மண்ம் உணரட்டும்.

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

சம்பத்குமார்..சரியா சொன்னீங்க..

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

இம்சை அரசன் பாபு ..நன்றி

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

அப்துல் பாஷித் ;-)) அது என்ன தொழில் நுட்பமோ புரியலையே?

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

ரமேஷ்....வாங்க

NAAI-NAKKS said...

Good thalaiva...

Nanum pottirukken.....

வைரை சதிஷ் said...

தமிழ்மணம் இன்றோடு வீழ்ந்து விடும்.

நாம் இல்லையெனில் திரட்டிகள் இல்லை

! சிவகுமார் ! said...

கருத்து கணிப்பு சொல்றாங்க சில பேரு, இந்த கட்சி தோக்கும் அந்த கட்சி ஜெயிக்கும், படம் ஓடும் ஓடாது...இதெல்லாம் கூட ஆருடம் தான். அதற்காக அதை தூக்கி விட முடியுமா? அநாகரீகம் இல்லாமல் அசிங்கமான படங்கள் போடாமல் இருக்கும் அனைத்து பதிவும் ஏற்புடையவையே.

கார்த்தி கேயனி said...

நல்லது நண்பரே

bala said...

நான் பிரபல பதிவர இல்லையானுகூட தெரியாதா அப்பாவி நானு என்னக்கு பதிவு போட நேரமும் கிடைக்கல இந்த லட்சலதுல என் ஒரு ப்ளாக் கட்டண பிளாக் அப்படினு சொல்றனுங்க நான் அதுல எப்பவுமே இணைக்கரதில்லபா அதை எடுக்க நேரமும் கிடைக்கல சிக்கிரம் தூக்கணும் . இவனுங்க சொல்றது தப்புன்னு தோனல நாம தான் ஒதுக்கணம் ஒதிக்கினால் தன்னால அடங்குவானுங்க . ஒரு வெலை தமிழ் பிளகர்களுக்கு நேரம் சரி இல்லையோ ! கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் நண்பா !

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner