வடிவேலு பதில்கள் -ஆனந்தவிகடன் 16.11.11
உங்களுக்கு கோவை சரளாவை விட பொருத்தமான ஜோடி யார்..?
பாட்டாளி படத்தில் வடிவுன்னு ஒரு பொண்ணு நடிச்சுதே ஞாபகம் இருக்கா..? கெச்சலா இருந்தாலும் நல்ல களையான பொண்ணு அது.அதுதான் நமக்கு சரியான ஜோடியா இருக்கும்.அந்த பொண்ணோட போன் நம்பர் இருந்தா சொல்லுங்க தம்பி..அடுத்த படத்துல அந்த அம்மணியையே ஜோடியா பிடிச்சி போட்ருவோம்’’
நீங்க டைரக்ட் பண்ணினால் யார் ஹீரோ..? யார் காமெடியன்..?
ஏம்பா..புலிகேசி படம் பார்க்கலையா நீயி.ஹீரோவாகவும் காமெடியனாகவும் பட்டைய கிளப்பிய அந்த படத்தை பார்த்துப்புட்டு இப்புடி ஒரு கேள்வி கேட்கலாமா..?நானே இயக்கினாலும் நம்ம படத்துக்கு நாந்தான் ஹீரோ....நாந்தான் காமெடியன்..!’’
ஆங்கிலம் தெரியாமல் முழி பிதுங்கியது உண்டா..?
நிறைய தடவை பிதுங்கி இருக்குண்ணே...ஃப்ளைட்ல போறப்ப எல்லாம் இங்கிலீசு தெரியாம அப்படியே கண்ண மூடிட்டு தூங்குற மாதிரியே நடிச்சு எஸ்கேப் ஆகுறதுதான் நம்ம வேலை.
கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களின் கடைசி காலம் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறதே கவனித்தீர்களா..?உதாரணம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,தங்கவேல்;சந்திரபாபு,சுருளிராஜன்...’’
வாழ்க்கையோட எந்த பகுதியில் வேணும்னாலும் மனுசனுக்கு கஷ்டம் வரும்ணே...விதியோட கையில் நாம எல்லாம் வெளாட்டு பொம்மையாகத்தானே இருக்கும்>காமெடி நடிகர்களுக்கு மட்டும் இல்ல...வாழ்க்கை முழுக்க சந்தோசமாவும்,வசதியாகவும் இருந்த பல பேரு இப்போ நம்ம கண்ணு முன்னாலயே கஷ்டப்படுறதை பார்த்துகிட்டு தானே இருக்கோம்..?நாம சம்பாதிச்சு வெச்சிருக்குற நல்ல பேரு மட்டுமாதாண்ணே கடைசி வரை நம்மை காப்பாத்தும்.
நன்றி;ஆனந்த விகடன்
Related Article:

7 comments:
சிறந்த நடிகர்! திரும்பவும் வந்து கலக்கணும்!
இவர் மறுபடியும் நடிக்க வரணும் தலைவரே..
வணக்கம்,முன்கூட்டியே பேட்டியை பதிவு செய்ததற்கு நன்றி!
வடிவேலு சிறந்த நடிகர்.அவர் நடிப்பை யாரும் தடை செய்து விட முடியாது...
அவரை இனி திமுக ஆளாத்தான் இனி எல்லாரும் பார்ப்பார்கள், எஸ் எஸ் சந்திரன் மாதிரி...!!!
நல்ல நடிகர். நேரந்தான் இப்படியானது!
தகவலுக்கு நன்றி
புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை
http://murugananda.blogspot.com/2011/11/grapes-for-cancer-drug.html
Post a Comment