Saturday, 12 November 2011

ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்..சிகிச்சைக்காகவா?-ஜூனியர் விகடன் 16.11.11

அமெரிக்கா செல்கிறார் ஜெயலலிதா..சிகிச்சைக்காகவா?-ஜூனியர் விகடன் 16.11.11


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி க்ளிண்டன் கடந்த ஜூலையில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாரே..அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தன் விசிட்..போயஸ்கார்டனில் செல்வாக்குடன் வலம் வரும் மனிதர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன்.இவரை எம்.ஆர் என்றே அ.தி.மு.க வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.இவரின் மூத்த மகன் தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் தற்போது இருக்கிறார்.இவர் ஹிலாரியின் வெளியுறவு வெளியுறவு அரசியல் ஆலோசனைக்குழுவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாராம்.ஹிலாரியின் டெல்லி விசிட்டில் சென்னை ப்ரோகிராமைச் சேர்த்து முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததில் இவருக்கும் பங்கு உண்டாம்.

ஹிலாரியும் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசினார்கள்.இலங்கைப் பிரச்சினையில் ஆரம்பித்து தொழில்,வர்த்தகத் துறைகளில் அமெரிக்க ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தார்கள்.குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் தமிழ்கத்தில் முதலீடு செய்ய அமெரிக்கர்களின் வரவை எதிர்பார்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா அப்போது கேட்டுக்கொண்டாராம்.தமிழ்கத்தில் 10 இடங்களில் சோலார் சக்தி பூங்கா அமைக்க இருக்கும் திட்டம் பற்றியும் விரிவாக சொல்ல...அதற்கு ஹிலாரியோ எங்கள் நாட்டில் உள்ள மகாணங்களும் தமிழ்நாடு போன்ற இந்திய மாநிலங்களும் கூட்டாக,தொழில் வர்த்தக,வர்த்தகத் துறைகளில் கைகோர்த்து செயல்படலாம்.அந்த வகையில் நான் உங்களுக்கு உதவத் தயார்’என்றாராம்.அந்த சந்திப்பின் போது,முதல்வர் ஜெயலலிதாவின் ஆழமான அறிவாற்றல் மிகுந்தப் பேச்சை ரசித்து,தமிழ்கத்தின் மாபெரும் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள நீங்கள் எங்கள் நாட்டுக்கு அவசியம் வர வேண்டும்.அரசு முறை பயணமாக நீங்கள் அங்கே வரும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு அனுப்புகிறேன்’’என்று வெளிப்படையாக சொல்லிவிட்டுப் போனாராம்’’

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோசம்.எப்போது வேண்டுமானாலும் கிளம்பத் தயார்.அமெரிக்காவில் இருந்து முறைப்படியான அழைப்பு வந்ததும் கிளம்புவார்.அங்கு அரசியல் சூழல் பிஸியாக இருப்பதால் அழைப்பு தள்ளிப்போகிறது.அதே நேரத்தில் இந்திய அரசியலின் அசைக்க முடியாத சக்திகளில் ஜெயலலிதாவும் ஒருவர் என்பதை என அமெரிக்க அரசு நினைக்கிறது.இந்தியாவில் நிலவும் அரசியல் குழப்பங்களால் எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்ற தேர்தல் வரலாம்.அத்ற்கு சற்று முன்பாக ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்து கொளரவிக்கலாம் என யோசிக்கிறார்கள்!

தலைமை செயலகத்தில் உள்ள ஒரு துறையின் முக்கிய அதிகாரிகள் முதல்வரின் அமெரிக்க பயணம் பற்றிய முக்கிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள்.அமெரிக்க முதலீட்டாளர்கள்,தொழில் அதிபர்கள்,நிறுவன தலைவர்களை தனித்தனியே சந்தித்து தமிழ்க வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த போகிறார் நம் முதல்வர்.

இந்த சூழலில், உடல்நிலை குறித்த சில ஸ்பெசல் செக் அப் செய்து கொள்ளவும் ஜெயலலிதா நினைக்கிறாராம்.அவருக்கு சிறு சிறு தொந்தரவுகளாக இருந்து வரும் முதுகு வலி,கால்வலி போன்றவை குறித்தும் சில சிகிச்சைகளை செய்துகொண்டு திரும்பலாம் என்கிறார்கள்!’’

நன்றி -ஜூவி
Related Article:

Post Comment

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அமெரிக்க ஏர்போர்ட்ல அம்மையாரை தடுத்து சோதனை செய்யாமலிருந்தால் சரி, அப்துல்கலாம் மாதிரி....

சி.பி.செந்தில்குமார் said...

குழந்தைகள் தின வாழ்த்துகள்

பாலா said...

அவங்களுக்கும் வயசாகுதில்லையா?

moovendar said...

சுப்பிமணியன்சாமிபோல் ஜெயலலிதா அமெரிக்க உளவுத்தாபனமான சி.அய்.ஏ ன் நிகழ்ச்சி நிரலுக்கமைய வேலை செய்யத் தொடங்கிவிட்டார்.மக்கள்தான் பாவம்.

Naran said...

ஏன் கடவுள் காப்பாற்றவில்லையா?அது சரி அவுரே ஓவர் டைம்ல ஓடிகிட்டு இருக்காரு.ஜெயாவுக்கு முதுக வலிச்சா அவுருக்கு தெரியுமா என்ன?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner