/> சனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 1 November 2011

சனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்


சனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்;sani peyarchi 2011

ஜோதிடம் சனிப்ரீதிகாக பல பரிகாரங்களை சொல்கிறது.அவற்றில் நடைமுறைக்கு சிறப்பாக ஒத்துவரக்கூடிய பிரபல ஜோதிடர்கள் சொல்லும் வித்தியாசமான சனி பெயர்ச்சி பரிகாரங்களை காண்போம்.


1.கறுப்பு நிறமுடைய காராம்பசுவுக்கு சனிக்கிழமை தோறும் அகத்திகீரை கொடுத்து உண்ண செய்வது பின் அப்பசுவை வலம் வந்து வழிபாடு செய்வது

2.சனீஸ்வர எந்திரத்தை கரும்பலகையில் வரைந்து அதை ஒன்பது நாள் பூஜை செய்து ஒன்பதாவது நாள் திருஷ்டி கழிய தன்னை சுற்றிவிட்டு அந்த கரும்பலகையை குளத்தில் அல்லது கடலில் வீசி எறிந்துவிடுவது.(சென்னை மெரீனா பீச்சில் குறி சொல்பவர்கள் நிறைய இருப்பர்.அவர்கள் இந்த உடனடி பரிகாரம் செய்து தான் பிழைக்கின்றனர்)

3.வடித்த சாதத்தில் எள் போட்டு நல்லெண்ணை விட்டு பிசைந்து தலையை சுற்றி திருஷ்டி கழிந்து அச்சாதத்தை காகத்திற்கு போட வேண்டும்.இப்பரிகாரம் நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை.காரணம் காகம் நம் மூதாதையர் என சொல்லிதான் பித்ருக்களாக வழிபடுகிறோம்..பித்ரு பூஜையின்போது காகத்திற்கு சாதம் வைத்தபின் உண்ணுகிறோம்...நம் தோசத்தை காகத்திடம் விடுவது சரியல்ல.

4.சனீஸ்வரனுக்குறிய நீலக்கல்லை (blue daimond)வெள்ளி மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளுதல்

5.மாதத்தில் நான்கு கோயில்கள் சென்று அந்த கோயில்களில் குடியிருக்கும் நவகிரகங்களை எட்டுமுறை சுற்றி வந்து ஒன்பது வினாயகரை கண்டு கற்பூரம் ஏற்றி வணங்குதல் வேண்டும்.

6.வளர்பிறை சதுர்த்தி திதியன்று விடியற்காலையில்,சூரிய உதயத்துக்கு முன்பு வீட்டில் கணபதி ஹோமமும் நவகிரக சாந்தி ஹோமமும்,செய்தல் வேண்டும்

7.ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் துளசி மாலை சார்த்தி நெய்விளக்கேற்றி 27 முறைகள் ஆஞ்சநேயரை வலம் வரவும்

8.சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு எள் எண்ணை விளக்கு ஏற்றவும்.நீலோத்பவபூவால் மாலை தொடத்து சனீஸ்வரருக்கு சூட்டி வரவும்.

9.சனிப்ப்ரீதிக்காக ஹனுமான்,சாஸ்தா,அர்த்தநாரி,இடும்பன்,கடம்கன்,துர்வாசர் வணங்குதல் நல்லது என சோதிட அறிஞர் பி.எஸ்.ஐயர் கூறுகிறார்.

10.சிவாலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நதி முன் அமர்ந்து கோளறு பதிகம்,சிவாஷ்டகம்,குருதோத்திரம்,விலாடகம் போன்ற செபங்களை செய்யலாம்.

11.கிராமப்புற ஜோதிடர்களின் ஏழரை சனி பரிகாரம்;கறுப்பு எள்ளினை நீலநிறதுணியில் கட்டி,எட்டு வெற்றிலை,எட்டு ஒரு ரூபாய் காசுகளுடன் முடமான ஒருவருக்கு சனி ஓரையில் தானம் செய்யலாம்..சிலர் செருப்பு தானம் செய்ய சொல்வர்.குடை தானம் செய்வதும் உண்டு.வசதியானவர்கள் ஊனமுற்றோர்களுக்கான வண்டி,தாங்குகோல் கொடுத்து உதவலாம்..கருணாநிதி ஊனமுற்றோர்க்கு பல சலுகைகளை அறிவித்தாரே அதுவும் ஜோதிடர் ஒருவர் சொன்ன அறிவுறையின்படிதான்.

12.காயத்ரி செபம் மூன்று காலங்களில் செய்யக்கூடியோர் முறையாக செய்து கொண்டிருந்தாலே சனிபகவான் எவ்வித கெடுதலும் செய்ய மாட்டார்

மேற்க்கண்ட பரிகாரங்களில் எதுவெல்லாம் முடியுமோ அதுவெல்லாம் ஐப்பசி 15 ஆம் தேதி சனி பெயர்ச்சியால் பாதிக்கும் ராசிகளான விருச்சிகம்,மீனம்,கன்னி,துலாம்,மகரம் ராசியினர் செய்யலாம்..சனிபகவான் அருள் உண்டாகட்டும்!!

வாழ்க வளமுடன்!!

Related Article:

Post Comment

2 comments:

சே.குமார் said...

சொல்லியிருக்கும் பரிகாரங்கள் செய்ய முடிந்த பரிகாரங்கள்தான்.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பரிகாரங்களுக்கு நன்றி.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner