/> செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக்கு கண்டம்..?mars | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 3 November 2011

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக்கு கண்டம்..?mars

செவ்வாய் பெயர்ச்சி ராசிபலன்கள்-அரசியல் தலைவர்களுக்கு கண்டம்..? mars

சனி பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி,குரு பெயர்ச்சி தெரியும்...அதென்ன செவ்வாய் பெயர்ச்சி..? செவ்வாய் கிரகமும் ஒவ்வொரு முறை பெயர்ச்சியாகும்போதும் ஒவ்வொரு பலனை ஒவ்வொரு ராசிக்கும் தருகிறது...ஆனால் சனி அளவு இல்லை எனினும் செவ்வாய் மங்களகாரகன் அல்லவா..? செவ்வாய் முருகன் அம்சம் அல்லவா..? அவர் பெயர்ச்சியானால் சில நன்மைகளும் நம் ராசிகளுக்கு நடக்கத்தான் செய்யும்.அதை பற்றி இந்திய வலைப்பதிவு உலகிலேயே முதன்முறையாக..சரி..சரி...விசயத்துக்கு வர்றேன்...செவ்வாய் பெயர்ச்சி ஐப்பசி 13 ஆம் தேதி,(அதாவது கடந்த ஞாயிற்றுகிழமை) திருக்கணித பஞ்சாங்கப்படி கடகம் ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு மாறியது.இதே ராசியில் செவ்வாய் 2012  ஜூன் வரை காணப்படுகிறார்.அரசியல் கிரகம் எது..?

செவ்வாய்.

நிலம்,சொத்துக்களுக்கு அதிபதி கிரகம் எது..?

செவ்வாய்

பூகம்பம்,விபத்து,பெரும் நோய் இதெல்லாம் சம்பந்தம் ஆவது எந்த கிரகம்..?

செவ்வாய்.

பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு அதிபதி..அதாவது பெண்கள் ஜாதகத்தில் கணவனை பத்தி சொல்லும் கிரகம் எது..?

செவ்வாய்.

சகோதரனுக்கு காரகன்,(அண்ணன் தம்பி உறவு)கோபம்,வீரம்,ரோசம்,ஆத்திரம் இதெல்லாம் வருவது எந்த கிரகத்தின் ஆதிக்கத்தால்..?

செவ்வாய்

ராணுவம்,காவல்துறை...இவற்றுக்கு காரகத்துவம்..?

அதுவும் செவ்வாய்தான்.அப்படிபட்ட கிரகம் பெயர்ச்சியானா மேற்க்கண்ட விசயத்துல எல்லாம் ஒரு சலனமாவது உண்டாகுமா..? இல்லையா.நிச்சயம் உண்டாகும்.இதுவரை கடகத்தில் நீசமாக இருந்துவந்த செவ்வாய் என்ன பலன் கொடுத்து வந்தது என்றால் மேற்க்கண்ட விசயங்களில் எல்லாம் பலவீனத்தையே கொடுத்து வந்தது.பிரச்சனைகளை கொடுத்தது.கூடங்குளம் அனுமின் நிலைய போராட்டம் ,நில அபகரிப்பு வழக்குகளால் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் முடங்கி கிடந்தது,அரசியலில் குழப்பம் பல்வேறு செவ்வாய் காரகத்துவங்கள் எல்லாம் பலவீனப்பட்டன்.இனி செவ்வாய் கிரகம் காரகத்துவம் பெறும் எல்லா அமைப்புகளும் பலம் பெறும்.அப்போ கூடங்குளம் பிரச்சினை..? இன்னும் பெரிதாக வெடிக்கலாம்..அரசுக்கு சிக்கல் நேரலாம்..காரணம் செவ்வாய் சூரியன் வீட்டுக்கு வருவதால் அரசியல்வாதிகளுக்கும்,மத்திய மாநில அரசுகளுக்கும் பாதிப்பே.ஆளும்கட்சி தலைவர்களுக்கும் எதிர்கட்சி தலைவர்களுக்கும்,வயதான அரசியல் தலைவர்களுக்கும் இன்னும் ஒரு மாதம் கண்டம்தான்.அதனால்தானோ என்னவோ..இக்காலத்தில் தீர்ப்பு பெறக்கூடாது என ஜயலலிதா சொத்து குவிப்பு வழக்கை ஒரு மாதமாவது இழுத்தடிக்க வேண்டும் என மறுபடி சுப்ரீம்கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்துவிட்டார்!!

பூகம்பம்,குண்டுவெடிப்பு,நாச வேலைகள்,ரயில்,விமான விபத்துகள் இந்த சிம்ம செவ்வாய் காலத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது என அனுபவம் வாய்ந்த ஜோதிட பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்...

செவ்வாயை யோகமான ராசியை கொண்டவர்களுக்கு இனி வரும் காலம் அதிர்ஷ்டம் தான் ..பொதுவாகவே திருமணம் தடை தாமத்த்தால் அவதிபடுபவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.இரும்பு,நெருப்பு சம்பந்தமான தொழில்கள்,இஞ்சினியரிங் தொழில்கள் சிறப்படையும்.ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் உடலில் இருப்போர் அது சம்பந்தமான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்ல நிவாரணம் தரும்.வண்டிவாகனங்கள் ,கார்,புதிதாக வாங்குவோர் க்கு நிலையான ராசியான வண்டி அமையும்.

செவ்வாய் தோசம் ஜாதகத்தில் 2,4,7,8,12 ல் இருந்தால் தோசமே.பரிகார செவ்வாய் என குழம்பிகொள்ள வேண்டாம்...இருவருக்கும் பரிகார செவ்வாய் எனில் பிரச்சினை இல்லை.பரிகார செவ்வாய் என்பது குரு,சுக்கிரன் வீடுகளில் செவ்வாய் இருந்தாலோ குரு,சுக்கிரனும் செவ்வாய் இருந்தாலோ சொல்லப்படுவதாகும்.

செவ்வாய் தோசம் முருகன் வழிபாடே சிறப்பு.உங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று முருகனை அபிசேகம் செய்து வழிபடுங்கள்.மலைமேல் இருக்கும் முருகன் ரொம்ப விசேசம்.

செவ்வாய் தோசம் உள்ளவர் செவ்வாய் தோசமில்லாதவரை திருமணம் செய்தால் தாம்பத்திய உறவு சந்தோசமாய் இருப்பதில்லை.குழந்தையும் ஊனமாக பிறக்க வாய்ப்பு உண்டு.

பழனி முருகன் அற்புதம்;செவ்வாய் குறிக்கும் தெய்வம் முருகன்.பழனிமலை செவ்வாய் கிரகத்தின் சக்தியை அதிகம் ஆகர்சிக்கும் இடம் என சொல்வார்கள்.அதனால்தான் போகர்  நவபாசண சிலையை அங்கு அமைத்தாராம்...செவ்வாய் நோயை கொடுப்பவரும் அவர்தான்..அதை குணமாக்குவதும் அவர்தான்.செவ்வாய் பலம் குறைந்தவருக்கு உடல்நலிவு ஏற்படும்.உடம்பில் பலம் குறைவு.செவ்வாய் பலம் பெற்றவர் சிங்கம்போல கம்பீரமாக இருப்பார்.பழனி மலை போகர் செய்த நவபாசண சிலையில் சந்தனம் அபிசேகம் செய்து அக்காலத்தில் மன்னர்களும் மக்களும் அந்த அபிசேக சந்தனத்தை தீர்த்தமாக பருகினர்.இதனால் தீராத வியாதியும் தீர்ந்து வந்தது..நலிஞ்ச பிள்ளையும் உடல்வலிமை பெற்றது.இப்போது பல அரசியல்வாதிகளாலும் நடிகர்களாலும் அச்சிலை முழுவதும் நவபாசாணம் சுரண்டப்பட்டு எலும்புகூடாக காட்சி தருகிறது.முருகன் கோயிகளின் அமானுஷ்யங்கள்நிறையஇருக்கின்றன..சென்னிமலை,சிவன்மலை,பழமுதிர்சோலை,திருப்பரங்குன்றம், பழனி,திருச்செந்தூர்,கதிர்காமம்,நல்லூர் ஆயக்குடி,வயலூர்,திருத்தணி முருகன் கோயில்கள் பற்றிய அமானுஷ்ய தகவல்கள் திரட்டி வருகிறேன்..உங்களுக்கு தெரிந்த செய்திகள் தனி மெயிலில் அனுப்பலாம்..

பகுத்தறிவு பேசும் அப்பாடக்கர்கள் சிந்தனைக்கு;,இன்றைய விஞ்ஞானம் சந்திரனுக்கு ராக்கெட் விடுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கிரகம் சிவப்பாக சூரியனை சுற்றி வருகிறது என தனது மெய் ஞானத்தால் கண்டறிந்து,அதற்கு சிவப்பு வாய் அதாவது செவ்வாய் என பெயர் வைத்து ஓலை சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு சென்றார்களே..அது எப்படி என நீங்கள்..யோசிக்க வேண்டும்!!

இதையும் படிங்க ;விஜயகாந்த் கட்சி அவ்வளவுதானா..?-குமுதம்


செவ்வாய் தோசமும்,கல்யாண தாமதமும்
Related Article:

Post Comment

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

VANJOOR said...

அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

பாலா said...

என்னை போல ஒண்ணும் தெரியாதவர்களுக்கு படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய பதிவு.

Pugazhenthi said...

செவ்வாய் பெயர்ச்சி பலன்க‌ள்... வித்யாசமான முயற்சி, வாழ்த்துகள்.

சுமனன் said...

கதிர்காமம் பற்றிய அரிய தகவல்!http://xlweb.com/heritage/skanda/kailasa.htm

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner