கனிமொழி சபதம்-ஜூனியர் விகடன் 4.12.2011
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த சந்தோச செய்தி கிடைத்ததும் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சிதான் என்ற கருணாநிதி ராசாவும் கேட்டுக்கொண்டால் அவருக்கு உதவி செய்யத் தயார் என்றார்.கனிமொழிக்கு புது பதவி கொடுப்பீர்களா..? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு,கட்சி முடிவு செய்யும் என்றார்.
கனிமொழிக்கு ஆதரவான ஆட்கள் சொல்லும் ராஜாத்தி அம்மாளின் நம்பிக்கையைத்தான் சென்ற வாரம் கழுகார் ! சொன்னார்.ஜாமீன் வழங்கிய நீதி மன்றம் டெல்லியில்தான் தங்க வேண்டும்’என்பது மாதிரியான நிபந்தனைகள் விதிக்காதது இவர்களை உற்சாகப் பட வைத்திருக்கிறது.கனிமொழிக்கு மரியாதை ஏற்படுத்தும் பதவி வேண்டும்.தமிழ்கம் முழுவதும் அவரை வைத்து பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்..’’என்று சிலர் இப்போதே கிளம்ப ஆரம்பித்து விட்டனர்.இனியும் ராஜாத்தி அம்மாள் சும்மா இருக்க மாட்டார்என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.என் மகளுக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கித் தராமல் விட மாட்டேன் என அவர் சபதம் போட்டாராம்’’
தி.மு.க வில் இனி நிறைய திடுக்கிடும் திருப்பங்களைப் பார்க்கலாம் என்று சொல்லும்’’
கழுகார் பதில்கள்’;
தி.மு.க நடத்தும் பொதுக் கூட்டங்கள் போராட்டங்களில் பங்கேற்கும் குஷ்பூ அந்த கட்சியின் முக்கிய பொறுப்பைக் கைப்பற்றுவாரா..?
இன்னும் சில மாதங்களில் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்.
கால் உடைந்த நிலையில் கூட கலெக்டர் அலுவலகத்துக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தார்.கடும் மழையிலும் ஸ்டாலினுடன் போராட்டங்களில் கலந்து கொண்டார்.கனிமொழியை வரவேற்று அழைத்து வர டெல்லிக்கு அவரைப் போகச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறார் கருணாநிதி.டெல்லி மீடியாக்களும் ,தமிழ்க பத்திரிக்கைகளும் தி.மு.க நிலைப்பாடு பற்றிக் கருத்து கேட்டால்,குஷ்பூ மட்டும்தான் தயக்கம் இல்லாமல் பதில் சொல்கிறார்.எனவே அவருக்கு தகுதிக் குறை எதுவும் இல்லை!!
-நன்றி;ஜூனியர் விகடன்
டிஸ்கி;குஷ்பூ,அழகிரி,கனிமொழி மூவரும் ஒரு அணியாக ஸ்டாலினுக்கு எதிராக திரளுவதாக எனக்கு தோன்றுகிறது.ஜூனியர் விகடன் வாரம் தோறும் கனிமொழியை பில்டப் செய்து,பூஸ்ட் செய்து.. செய்தி வெளியிடுவது சந்தேகமாக இருக்கிறது!!
Related Article:


5 comments:
இப்ப என்ன சொல்ல வாரிய - உடையுமா? உடையாதா? அத பட்டுன்னு உடைத்து சொல்லுங்க
இன்னும் தியாகி பட்டம் கொடுக்கலையாக்கும்...???
உங்கள் சந்தேகம் சரி ..
என்னமோ நாட்ட்குக்கு விடுதி வாங்கி தந்து ஜெயில்க்கு போன போல பில்டப் குடுகுரனுங்க ...
இன்று ..
பல்சுவை வலைதளம் விருது
Post a Comment