Friday, 4 November 2011

6 மந்திரிகள் நீக்கம்;6 மந்திரிகள் அறிவிப்பு;முதல்வர் ஜெயலலிதா அதிரடி


தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மீண்டும மாற்றியமைத்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 பேர் விடுவிக்கப்பட்டு, 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பரஞ்சோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.


சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஒரு சிலரின் இலாக்களை முதல்வர் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மரியம் பிச்சை சாலைவிபத்தில் பலியானார். கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.


இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகின. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, கோஷ்டிபூசல் காரணமாக ஒரு சில அமைச்சர்களின் பதவி பறிபோகும் என கூறப்பட்டது.


இதனை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இன்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 பேரை நீக்கவிட்டு 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அமைச்சர்களாக நீக்கப்பட்டவர்கள்: ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், செய்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் அமைச்சர் பதவியை இழந்துள்ளனர்


அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள்: சமீபத்தில் நடந்த திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி, கணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.தாமோதரன், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., வீ.மூர்த்தி, நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர் காமராஜ், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திர பாலாஜி மற்றும் பரமக்குடி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோர்அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக அமைச்சர்களின் ஒரு சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.சி. சம்பத் ஊரக தொழில்துறை அமைச்சராகவும், பிவி ரமணா சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும், சின்னையா கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும், செல்வி ராமஜெயம் சமூக நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பரஞ்சோதிக்கு அறநிலையத்துறை, சட்டம் மற்றும் நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர்ராஜ் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராகவும், காமராஜ் உணவுத்துறை அமைச்சராகவும், மூர்த்தி பால்வளத்துறை அமைச்சராகவும், ராஜேந்திர பாலாஜி செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும், தாமோதரன் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி;தினமலர்


Related Article:

Post Comment

7 comments:

ஆமினா said...

அம்மா ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே :-)

பகிர்வுக்கு நன்றி சகோ

Yoga.S.FR said...

அப்பப்ப மாத்தினாத்தான் இருக்காங்களா இல்லையான்னு தெரியும்!

தமிழ்வாசி - Prakash said...

ஊசின வடை போயி நல்ல வடை வந்துச்சே...

நம்ம தளத்தில்:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கமுங்க.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அம்மா ஆட்டம் ஆரம்பம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

பாலா said...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner