/> ஆண்ட்ராய்டு ஜோசியம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 8 November 2011

ஆண்ட்ராய்டு ஜோசியம்

ஆண்ட்ராய்டு ஜோசியம் android mobile

ஆண்ட்ராய்டு O.S பற்றி கேள்விபட்டது முதல் அந்த வசதி உள்ள ஃபோனை பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது.சென்ற மாதம் சாம்சங் ஆண்ட்ராய்டு ஃபோன் ஒன்று வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டேன்.ஆண்ட்ராய்டு வசதியில் என்ன முக்கியம் என்றால் நமக்கு தேவைப்படும் அப்ளிகேசனை எல்லாம் உடனே தரவிறக்கி பயன்படுத்தலாம் என்பதுதான்.இதனால் அடிக்கடி ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் நுழைந்து தேடுவது வழக்கமாகி விட்டது.

சாம்சங் பாப் ஃபோன் நான் வாங்கினேன்..ஆனால் இது பாட்டரி ரொம்ப வீக் போல இருக்கு.கொஞ்ச நேரத்தில் இணையம் உபயோகித்தால் செயல் இழந்து விடுகிறது.எல்.ஜி.P500 மாடல் ஃபோன் நன்றாக உழைப்பதாக சொல்கிறார்கள் .கவனிக்கவும்.

ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்கள் டவுன்லோடு செய்ய இணையத்தில் ஆண்ட்ராய்டு மார்க்கெட் என இருக்கிறது.இங்கு சென்று நம் ஃபோனுக்கு என்னென்ன மென்பொருட்கள் தேவையோ அதையெல்லாம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.ஆண்ட்ராய்டு ஓ.எஸ் ல் தமிழ் வேலை செய்வதில்லை.இதற்காக தமிழா மென்பொருள்காரர்கள் அழகான தமிழ்விசை என்னும் மென்பொருள் உருவாக்கியிருக்கிறார்கள்.இதனை பயன்படுத்தி அழகாக தமிழ் டைப் செய்யலாம்.இணையத்தில் தமிழ் படிக்க ஒபேரா மினி உலாவி அவசியம்.இவை இரண்டும் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்கியதும் முதலில் நிறுவ வேண்டியவை.

ஆண்ட்ராய்டு ஃபோனில் முக்கியமானவை விதவிதமான கலக்கலான அப்ளிகேசன்கள்தான்.இவை விலைக்கும்,இலவசமாகவும் கிடைக்கின்றன...இலவசம் என்பதால் சப்பை இல்லை..அதுவு பட்டையை கிளப்புகிறது.செய்திகள் படிக்க நான் நியூஸ் ஹண்ட்,தினமலர்,மாலைமலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்கள் பயன்படுத்துகிறேன்.மிக நன்றாக இருக்கிறது.கேம்ஸ் அப்ளிகேசன்கள் விதவிதமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் நீங்கள் என்ன டைப் செய்து தேடினாலும் ஒரு வித்தியாசமான அளிகேசன்கள் கிடைக்கும்.உதாரணத்திற்கு news,games,fly,bird,bike,car என தேடிக்கொண்டே இருக்கலாம்..ஆண்ட்ராய்டு முகப்பு பக்கத்திலும் பிரபலமான இலவ்ச அப்ளிகேசன்கள்,பிரபலமான கட்டண அப்ளிகேசன்கள் என பிரித்து வைத்திருக்கிறார்கள்.அன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு புதிது புதிதாக அப்லோடு ஆகிக்கொண்டே இருக்கிறது.இதனால் இந்த ஓ.எஸ் வேகமாக பிரபலமாகி வருவதாக சொல்கிறார்கள்.நோக்கியா ஷோரூம்களில் எல்லாம் ஆண்ட்ராய்டு ஓ.எஸ் இருக்கா இந்த ஃபோன்ல என கேட்டு சேல்ஸ்மேன்களை மக்கள் நோகடிக்கிறார்களாம்.

நோக்கியா வில் நாம் இப்படி அப்ளிகேசன்கன்களை மாற்றிக்கொண்டிருக்க முடியாது15,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஃபோன்களில் எல்லா வசதியும் இருக்கின்றன..ஆனால் ஆண்ட்ராய்டு ஃபோன்கள் சந்தையில் 6,000 முதலே கிடைக்கின்றன...6,000 ரூபாய் மதிப்பு ஃபோனிலேயே, நமக்கு தேவையில்லாதவற்றை அழித்துவிட்டு புதிதாக டவுன்லோடு செய்துகொண்டே இருக்கலாம்...

இலவ்ச மென்பொருட்களில் டாப் ஃப்ரீ என மார்க்கெட்டில் இருப்பதை கவனித்து டவுன்லோடு செய்யுங்கள்.எல்லாமே பயனுள்ளவைதான்.கேம்ஸ் தான் அதிகம்.மொபைல் மூலம் கேம்ஸ் விளையாடுவதுதானே அதிகம்.அதனால் பொழுதுபோக்கு அப்ளிகேஷன்களில் ஆண்ட்ராய்டு தான் நெம்பர் ஒன்னாக இருக்கும்.நோக்கியா வைத்திருப்பவர்கள் இதை படித்து டென்சனாக வேண்டாம்.

எனக்கு பிடித்தவை;இந்த பூனை நாம் பேசுவதை அப்படியே கீச்சு குரலில் திருப்பி சொல்கிறது.காலை தொட்டால் தட்டி விடுவதும்,மூக்கை தொட்டால் கீழே விழுவதும்,உடனே நாய் ஒன்று வந்து அதற்கு தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவதும் ,என சூப்பராக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


இணையத்தில் மிக பிரபலமான விளையாட்டு.குரோம் உலவியில் நிறைய பேர் விளையாடி இருப்பார்கள்.அதன் ஆண்ட்ராய்டு வடிவம்.இதில் 5 சீசன்கள் இருக்கின்றன..எல்லாமே கலக்கல்.உங்கள் மொபைலில் 20/20 கிரிக்கெட் மேட்ச் விளையாட..நல்ல கேம்..


உங்கள் மொபைலில் பெரும்பாலும் இந்த அடோப் ரீடர் இருக்கலாம் இல்லையெனில் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.பொதுவாக இது போன்ற முக்கியமான அப்ளிகேசன்கள் எல்லாமே இங்கு இருக்கின்றன.அதனால் அவை கிடைப்பதில் சிரமம் இல்லை.


தமிழ் ஆங்கில தேதிகள்,நல்ல நேரம்,ராகுகாலம் தெளிவாக அப்டேட் ஆகிறது.அனைவருக்கும் பயனுள்ள அருமையான மென்பொருள்.

இது தவிர தினமலர்,மாலைமலர் தனியாக அப்ளிகேசன்கள் கொடுத்து இருக்கிறது.தமிழ் என தேடினால் கிடைக்கும்.

கலர் லைட்டுகள் என பல அப்ளிகேசன்களும்,ஃப்ளாஷ் லைட்டுகள் என சில அப்ளிகேசன்களும் இருக்கின்றன்.இவை டார்ச் லைட் போலவும்,மெழுகுவர்த்தி எரிவது போலவும் அழகாக வடிவமைத்துள்ளனர்.

வினாயகர் கோயில்;

VINAYAGAR TEMPLE,BALAJI TEMPLE எனும் பெயர்களில் கோயிலை போல செட் செய்யப்பட்ட அப்ளிகேசன்கள்.இதை ஆன் செய்தவுடன் திரை விலகும்.மங்களகரமாக அங்கே வினாயகர் அமர்ந்திருந்தார்.இனிமையாக ஒரு பக்தி பாடல்.தொட்டால் படங்கள் மாறும்.பூ தட்டை தொட்டால் பூக்கள் வினாயகருக்கு தூவப்படும்.சங்கு படத்தை தொட்டால் சங்கூதும்.ஆலயமணி இருக்கும் அதை தொட்டால் மணியடிக்கும்.இதுவும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும்.

முயலை வேட்டையாடு;

ஆங்க்ரி பேர்டு போல பிரபலமானது இந்த விளையாட்டு.காட்டுக்குள் இருக்கும் முயலை வில் அம்பு வைத்து வேட்டையாடுவதுதான் இதன் ஸ்பெசல்.ஒவ்வொரு லெவலும் வித்தியாசமாக இருக்கும்.

இந்தியன் ரெயில்வே ;indian rail info app

இந்தியாவில் இருக்கும் எல்லா ஸ்டேசன்களுக்கான பதிவு செய்யப்பட்ட சீட் நிலவரம் அறிந்துகொள்ளலாம்.ரயில் புறப்படும் நேரம்,வந்து சேரும் நேரம் ,பி.என்.ஆர் விவரம் எல்லாம் சுலபமாக அறிந்துகொள்ள இயலும்

photo copy android;புகைப்படத்தை பி.டி.எஃப் கோப்பாக மாற்றும் வசதி;

நாம் ஒரு புக்கை படிக்கிறோம்.அதை ஸ்கேன் செய்து அதை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி நண்பர்களுக்கு மெயில் செய்வோம்.அதை இப்பொது உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன் மூலமகவே செய்யலாம்.ஆச்சர்யமாக இருக்கிறதா.ஆம்.பத்து ஃபோட்டோ வரிசையாக எடுத்து இந்த அப்ளிகேசனில் கொடுத்துவிட்டால் அழகாக பி.டி.எஃப் கோப்பாக மாற்றிவிடுகிறது.

திருக்குறள்;

திருக்குறள் அழகு தமிழில் அதுவும் சுஜாதா,பரிமேழகர்,கலைஞர் கருணாநிதி மு.வ,சாலமன் பாப்பையா,ஜி.யூ போப் தெளிவுரையுடன் ஒரே அப்ளிகேசனில் படிக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய விசயம்.இதில் அது சாத்தியமாகி இருக்கிறது.இதை நோக்கியா செய்து தருமா.ஆண்ட்ராய்டு ஸ்பெசலே யார் வேண்டுமானாலும் அப்ளிகேசன் உருவாக்கி அதை அப்லோடு செய்யலாம்.யார் வேண்டுமானாலும் அதை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.இதன் மூலம் திறமையான வடிவமைப்பாளர்கள் பணம் சம்பாதிக்கமுடியும்.இதனால் வடிவமைப்பாளருக்கு இது வரப்பிரசாதம்,..ஜெயகாந்தன் சிறுகதைகளும் இதே அமைப்பில் கிடைக்கிறது.பி.டி.எஃப் ரீடர் அப்ளிகேசன்கள் எக்கசக்கமாக கிடைப்பதால் பி.டி.எஃப் கோப் மூலமாகவே படித்துக்கொள்ளலாம்...

ஒவ்வொரு அப்ளிகேசன்கள் கீழேயும் அதை உபயோகப்படுத்தியவர்கள் கமெண்ட் போட்டிருப்பார்கள்..அய்யோ வேண்டாம் சாமி..டவுன்லோடு பண்ணிடாதீங்க..இடையில விளம்பரம் போட்டே கொல்றாய்ங்க..என்கிற ரீதியில் இருக்கும் கமெண்டுகளை படித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம்..நல்லாருக்கு என நிறையபேர் சொல்லியிருந்தால்,அதிகம்பேர் டவுன்லோடியிருந்தால்,..நல்ல ரேங்கும் கிடைத்திருந்தால் தைரியமாக டவுன்லோடலாம்

Related Article:

Post Comment

6 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பல பயனுள்ள தகவல்கள் மாப்ள.. நன்றி..

தமிழ்வாசி - Prakash said...

சார், மொபைல் டிப்ஸ் போட்டிருகிங்க சூப்பர். ஆண்ட்ராய்டு பற்றியும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

நம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

FOOD said...

வித்யாசமான பகிர்வு.

சி.பி.செந்தில்குமார் said...

சதீஷ் புது ஃபோன் வாங்கிட்டாரு ஹி ஹி

arul said...

nice

perumal shivan said...

sathisu...... kalakkuriye enjoy

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner