/> ஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள் | ஜோதிடம்|ராசிபலன்| நல்ல நேரம்|Astrology|jothidam|

Wednesday, 23 November 2011

ஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்

மனைவி அமையும் யோகம்;ஜோதிடம்;ஜோதிடம் கற்க இது முழுமையான பாடம் அல்ல.ஆனால் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.


ஜோதிட சாஸ்திரத்தில் இன்பத்தை பற்றி சொல்வதற்கு 7 இடங்கள்.துன்பத்தை பற்றி சொல்வதற்கு 5 இடங்கள்.ஐந்து இடங்கள் பற்றி தெரிந்து கொண்டாலே 7 இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

லக்கினம் முதல் எண்ண வரும் 3,6,8,12 இந்த நான்கு இடங்களும் மறைவு ஸ்தானங்களும் என்கிற விதியின் கீழ் ஜாதக்ஜனை அல்லல்படுத்தி அலைக்கழித்து பார்க்கிற இடங்கள்.எஞ்சியது ஒன்று.அது பாதக ஸ்தானம்.அது எப்படி அறிவது..?

12 ராசிகள்.இதி சர ராசி.ஸ்திர ராசி,உபய ராசி என்கிற மூன்று பிரிவுகள் உண்டு.மேசம்,கடகம்,துலாம்,மகரம்,இந்த நான்கு ராசிகளும் சர ராசி.இந்த ராசியை லக்கினமாக கொண்டு ஜனிக்கிற ஜாதகருக்கு அது முதல் எண்ண வரும் 11 ஆம் இடம் பாதக ஸ்தானம்.அங்கு அமரும் கிரகம் நல்லவன் ஆனாலும் கெட்டவன் .பாதகஸ்தானத்துக்கு அதிபதியாக வருகிற கிரகம் கெட்டவன் ஆனாலும் மக்கா கெட்டவன்.

இதனால் என்ன நடக்கும்..?

விஜயகாந்த் அம்மா கிட்ட மாட்டின மாதிரிதான்.அந்த கிரகம் கெடு பலனே தரும்.கடக லக்கினத்துக்கு பாதகதிபதி சுக்கிரன்.

கடக லக்கினத்தார் சுக்கிரன் திசையில வாங்குனதெல்லாம் அதன் திசையிலேயே கெடுத்தும் வெச்சிரும்.பெண்களால் இவர்களுக்கு தொல்லை நேர்வதும்,மனைவியால் அல்லல்படுவத்ற்கும் சுக்கிரன் பாதகாதிபதியாவதுதான் காரணம்.அதனால்தான் மகான்கள் கடக லக்கினத்தில் பிறக்கிறார்களோ...இரண்டு தாரம் அமைவதும்,சின்ன வீடு செட்டப் செய்வதும்...என இல்லற வாழ்வில் பலருக்கு மயக்கம் என்ன..? என்பது மாதிரி குழப்பம் ஏற்படுத்தி விடுகிறது.காம எண்ணம் தூக்கல்தான்.கேந்திர சுக்கிரன் கெடுதல் செய்வார்னு புலிப்பாணி ஜோதிடத்துல விளக்கமா சொல்லியிருக்கார் சித்தர்.

துலாம் லக்கினத்துக்கு சூரியன்.ஆட்சி பெர்றால் அவ்வளவுதான்.திசா புத்தி வந்தா படுத்தி எடுத்துருவார்.இவங்களுக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்றால்..?பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.டெம்போ வேன்ல சீர் கொண்டு வந்திருக்கே..? எப்படி மதிக்கும்?
துலாம் லக்கினத்துக்கு சின்ன வீடு ...சுலபமா வாய்க்கும்.புண்பட்ட மனதை இப்படித்தான் இவங்க ஆத்திக்குறாங்க...ஆனா இவங்க படுற துன்பம்..why this கொலைவெறி.. கொலைவெறிடி..தான்.

11 ஆம் இடமும் 11 ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியோடு சம்பந்தம் பெறும்போது இரண்டாவது கல்யாணம் செய்றதுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது உண்மை.ஆனா இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தா வெச்சிருக்குறதோடு சரி.கெட்டிமேளம் வரை போகாது.

மகரம் ராசி லக்கினத்துக்கு செவ்வாய் தான் கனிமொழிக்கு திகார் மாதிரி.செவ்வாய் கெட்டுட்டா நிலைமை மாறுமா.சரியா போச்சு.கெட்டு போற இடம் பாருங்க..7..காலாகாலத்துல கல்யாணம் ஆகுமா.கல்யாணம் பொருத்தம் பார்க்க கூட ஜாதகம் கிடைக்காம கல்யாண மாலை இணையத்துல பழியா கிடக்கணும்.தமிழ் மேட்ரிமொனி எவ்வளவு கேட்டாலும் கொடுத்துட்டு காத்திருக்கணும்.

சரி லக்கினத்தில் செவ்வாய் உச்சம் அடைந்தால்?

நாலு ஊர்ல நிலம்,தோப்பு இருக்கும்.ஆனா அதன் பலனை அனுபவிக்க முடியுமான்னா ம்ஹீம்.சொத்தை விற்கவும் முடியாம.,அதை பராமரிக்கவும் முடியாம திணறனும்.இவர் பெயரில் சொத்து உண்டிஉ.அவ்வளவுதான்.

புலிப்பாணி ஜோதிடம் 300 ;

சூடப்பா சரராசி செனித்த பேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
அப்பனே அரசரிட தோசமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பா கோணத்திலிருக்க நன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையை ப்பாரே


நாளை.... ஸ்திர ராசிகளான...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

Related Article:

Post Comment

3 comments:

naren said...

ஜோதிடம் பற்றி அறிய நல்ல குறிப்புகள். தொடருங்கள்.

perumal shivan said...

entha maathiri visayangalellaam naraiya ezhuthuppa mikka nanri .

சி.பி.செந்தில்குமார் said...

தொழில் ரகசியம் கத்துக்கொடுத்தா பரவால்லயா?

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner