/> எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 17 November 2011

எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை

எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை


எம்.ஜி.ஆர் தி.மு.க வை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கினார்.அவர் பிரிந்து சென்ற பின் எம்.ஜி.ஆர் எனும் மகா சக்திக்கு முன்னால் அரசியல் செய்ய முடியாமல் தவித்த கதையும்,எம்,ஜி,ஆர் மறைவுக்கு பின்னரே அவரால் மறுபடி ஆட்சியை பிடிக்க முடிந்ததும் நாடே அறியும்.எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தபோது கருணாநிதி அவருக்கு எதிராக செய்த அரசியல் சிறிதும் நாகரீகமில்லாதவை.தன் கட்சி பேச்சாளர்கள் எம்.ஜி.ஆரை குழந்தை பெற முடியாதவர்,அட்டைக்கத்தி வீரன்,மலையாளி என கேவலபடுத்திய போதெல்லாம் அதை தடுக்காமல் ரசித்தவர்.இவரே அதைவிட மோசமாக பேசியும் இருக்கிறார்.தன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆர் போல வேசம் அணிய செய்து நடிக்க வைத்தால் எம்.ஜி.ஆர் செல்வாக்கை குலைத்து விடலாம் என்றெல்லாம் நினைத்தார் என்றால் எந்தளவு எம்.ஜி.ஆரை கண்டு நடுங்கியிருப்பார்..?

இந்திய மாநிலங்கள் சட்டசபை களை 90க்கும் மேற்பட்ட முறை பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்டுள்ளது.அவற்றில் 66 முறை இந்திராகாந்தியே கலைத்தார்.எம்.ஜி.ஆர் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற 1977 முதல் ஆட்சி செய்த்போது இந்திரா துணையுடன் கருணாநிதி எம்ஜி.ஆர் ஆட்சியை 79ல் கலைத்தார்.சட்டம் ஒழுங்கு காரணம் சொல்லப்பட்டது.பாராளும்னற தேர்தலில் வெற்றி பெற்ற மிதப்பில் கருணாநிதி இந்த தவறை செய்தார்.ஆனால் எம்.ஜி.ஆர் மீது அனுதாப அலை வீசி இரண்டாம் முறையாக அவரே மீண்டும் முதல்வர் ஆனார்.

80 முதல் 84 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் பாராளுமன்ற தேர்தல் வருவதால் இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடத்த முடிவு செய்து,ராஜினாமா செய்தார்.இதனால் பாராளும்னற தேர்தலிலும் சட்ட சபை தேர்தலிலும் அவரே அமோக வெற்றி பெற்றார்.காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க உதவி செய்தார்.

84 முதல் 87  வரை பெரும்பாலும் உடல்நலக்குறைவால் அவதிபட்ட எம்.ஜி.ஆர் ஜனவரியில் மறைந்தபோது,ஜா அணி,ஜெ அணி என அ.தி.மு.க பிளவுபட்டு ,சோதனைகளை சந்தித்தது.

இடையில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் கருணாநிதி கட்சியை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது.அந்தளவு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என கருணாநிதி எத்தனையோ இடைஞ்சல்களை கொடுத்தார்.எம்.ஜி.ஆர் அவரை சிறையில் அடைத்தும் பார்த்தார்.ஆனாலும் கருணாநிதியை அவர் மரியாதை குறைவாக பேசியதில்லை.அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்.அதனால்தான் அவர் மக்கள் தலைவராக இன்றளவும் புகழப்படுகிறார்.

பொதுவாக சொல்வார்கள்.இன்றைக்கு ஜெயலலிதா பஸ் கட்டணத்தை உயர்த்தியபின் சொல்ல தோன்றுகிறது.ஜெயலலிதா டாக்டர் மாதிரி.தமிழ்நாடு குடிகாரன் மாதிரி.குடிகாரனை திருத்த ஜெயலலிதா எனும் முதல்வர் கசப்பு மருந்தும்,ஊசியும் போட்டு குணப்படுத்த நினைப்பார்.ஆனால் கருணாநிதி இலவச திட்டம்,சம்பள உயர்வு என குடிகாரனுக்கு சாராயத்தை ஊத்திகொடுத்து அவனை சுய நினைவு இல்லாமலே வைத்திருப்பார்.டாக்டர் நோயாளியை பாதி குணமாக்கி வைத்தால் ,கூடா நட்பு அதை முழுவதுமாக கெடுத்துவிடுகிறது.சென்ற முறை தமிழ்க அரசின் பாதிக்கடனை அடைத்தார்.அடுத்த முறை வந்த கருணாநிதி இன்று பல ஆயிரம் கோடி கடனை தமிழ்க அரசு தலையில் கட்டி விட்டு போயிருக்கிறார்.அதை க்சப்பு மருந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய வேண்டும்.ஜெ.நல்ல நிர்வாகத்தை கொண்டு வர அந்த கசப்பு மருந்தைதான் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.Related Article:

Post Comment

1 comment:

சேகர் said...

எத்தன தடவ அடிவாங்குனாலும் கருணாநிதி திருந்த மாடைகுறாரே.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner