/> குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 2 December 2011

குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா?

ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்..? குழந்தை எப்போது பிறக்கும்..? என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.

இப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.

பழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.

சோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.

அதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா..? என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.

இவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.

ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.


Related Article:

Post Comment

4 comments:

naren said...

ஆச்சரியமான விஷ்யங்கள்!!!!

Moorthy said...

Thanks for the post .....moorthy from Singapore

Yoga.S.FR said...

வணக்கம்,சார்! ரஜனி சார் நடிக்கப் போற "கோச்சடையான்"என்கிற படம் கூட இந்தக் கதை தானோ?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner