Monday, 12 December 2011

முல்லைப்பெரியாறு அணைக்காக போராடும் விஜய்

முல்லைப்பெரியாறு அணைக்காக போராடும் விஜய்,சூர்யாசூர்யா விஜய் இருவருக்கும் தமிழகம் மட்டுமல்ல..கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது.இங்கு வசூலை குவிப்பது போலவே அங்கும் வசூலை குவிக்கின்றனர்...சூர்யா அரசியலில் இல்லை.ஆனாலும் தமிழனுக்கு குரல் கொடுக்கும் பொறுப்பு இருக்கு.வருசம் பூரா சம்பாதிச்சு கொடுக்குறோம்..உங்களை ஹீரோவா கொண்டாடுறோம்..ஹீரோ மாதிரி பறந்து சண்டை போடாம குரல் கொடுக்கலாம்..தமிழ்ன் கரத்தை வலுப்படுத்தலாம்..தேனிக்காரன் தவிக்கிறான் பாஸ்..


விஜய் அரசியலில் நுழைய விரும்புகிறார் அவருக்கு முல்லைப்பெரியார் விவகாரத்தில் மக்களுக்காக போராட நல்ல சான்ஸ். முல்லைப்பெரியார் அணையை உடைக்க கூடாது.தமிழ்ப்பெண்களிடம் கேவலமாக மலையாளிகள் நடந்து கொள்ளக்கூடாது,உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை கேரள அரசியல்வாதிகள் கருத்து கந்தசாமி போல உளறிக்கொட்டகூடாது.. என அறிக்கை விட வேண்டும்.அப்பாவும்,மகனும் நடிகர் சங்கம் கூட்டத்தோடு கோவிந்தா போடாக்கூடாது.


 ,தி.மு.க வை போல மனித சங்கிலி,உண்ணாவிரதம்னு எருமை மாட்டு மேல மழை பெய்தது போல போராடாமல்,ஆக்கப்பூர்வமக போராடுங்க விஜய்.அரசியலில் நுழைய விரும்பினால் இன்று கேரள தமிழ்க எல்லையில் லட்சக்கணக்கில் திரண்டு நின்று ஆவேசத்துடன் இருக்கும் மக்களிடம் பேசுங்கள்...இளைஞர்கள் உங்க பக்கம் திரளுவார்கள்.தேர்தல் சமயத்துல மட்டும் வெளீஏ வந்து பீட்டர் விடலாம்னு நினைச்சா முடியாது.உங்க மக்கள் இயக்கம்,ரசிகர் மன்றம் எல்லாம் வெச்சு ஏதாவது ஆக்கப்பூர்வா செய்ங்க..வதந்தியை கிளப்பும் கேரளாவுக்கு கண்டனம் தெரிவியுங்க..நீங்கதான் மலையாளத்திலும்,தமிழிலும் அதிகமா சம்பாதிக்குறீங்க..அரசியலுக்கு வரும் ஆர்வமும் இருக்கு.அதனால உங்களுக்கு பொறுப்பு இருக்கு பாஸ்..தமிழ்ப்பொண்ணுங்களை இழிவு படுத்தினவனுகளை சினிமாவுல மட்டும்தான் உதைப்பீங்களா பாஸ்..?

ரஜினி தமிழ் சினிமாவின் கடவுள் அவருக்கு இன்று 62 ஆம் பிறந்த நாள்..நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...முடிந்தவரை ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்காமல் ஆரம்பகாலம் முதல் ரசிகர் மன்றம் அமைத்து நற்பணி செய்து வரும்.ஈரோடு பைக்முருகேஷ் போன்றோர்களை யாவது அழைத்து விருந்து வைத்து ஒருநாள் அவர்களுடன் மனம் விட்டு பேசலாமே சார்..?

கருணாநிதிக்கு ராசியான எண் 3.அவர் பிறந்த தேதி எண் வருதுல்ல.அதனால் இன்று 12 ஆம் தேதி போராட்டம்.ஜெயலலிதா பிறந்த தேதி எண் 6 வரும்படி வரும் 15 ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக்கூட்டம்..விஜயகாந்த் எப்போதும் 5 ஆம் எண் வரும் நாட்களில் தான் முக்கிய காரியங்களை செய்வார் அதனால் அவர் 14 ஆம் தேதி போராடுகிறார்.ஆனா தி.மு.க மனித சங்கிலி போராட்டம் 15 ஆம் தேதி வெச்சிருக்கே அது கலைஞருக்கு பகை எண் ஆச்சேன்னு யோசிச்சேன்.அப்புறம் நேத்து அதை மாத்தி 14 ஆம் தேதிக்கு வெச்சிட்டாங்க..

முல்லைப்பெரியார் விவகாரத்துல தமிழ்க எம்.பிக்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கணும்...கேரள காங்கிரசுக்கு ஆதரவா செயல்படும் தேசிய காங்கிரசுக்கு அதிரடியா பாடம் புகட்டணும்...அதுக்கு ஆதரவு கொடுத்து வாழ வைக்கும் தி.மு.க இங்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் போடுது.கவன ஈர்ப்பு போராட்டமாம்.என்ன கொடும சார் இது..? ஏன் கண்டன போராட்டம்னு சொல்லக்கூடாதா..? 

தமிழ்க முதல்வர் வேண்டுகோள் என முல்லைப்பெரியார் அணையின் வலிமை,அதன் வரலாறு,உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பு விவரம் என விவரமாக மேற்கோள் காட்டி.,அணை உடைந்தால் கேரள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை..அந்த நீர் முழுவதும் இடுக்கி அணைக்குதான் செல்லும்...என்பதையும்..தமிழ்க முதல்வர் விளக்கி தமிழக பத்திரிக்கைகளும்,மலையாள பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்..இது ஒரு அறிவுப்பூர்வமான நடவடிக்கை...உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அமைதியாக இருப்போம் என தமிழ்க முதல்வர் சொல்கிறார்.கேரள அரசியல்வாதிகளோ இடைத்தேர்தலை மனதில் கொண்டு மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Related Article:

Post Comment

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

இவர்களுக்கு பணம்தான் முக்கியம் மக்களில்லை...!!!

Yoga.S.FR said...

வணக்கம்,சதீஷ்!இதெல்லாம் வேலைக்காவாது!போராட்டம் நடத்த தாங்களாகவே புறப்பட்ட மக்களை தமிழக காவல் துறை விரட்டி அடிக்கிறது!அங்கே என்னடாவென்றால்,மலையாளிகள் எங்கள் பெண்களை காவல் துறையினர் கண்முன்னாலேயே மானபங்கப்படுத்து கிறார்கள்.விஜய் போராடி..............................ம்...விளங்கிடும்!

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html?

சி.பி.செந்தில்குமார் said...

வேட்டை ஆரம்பிச்சிடுச்சு போல

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் ஆதங்கம் அவர்களுக்கு தெரிய போகுதா பாஸ்! நல்ல அலசல். உங்கள் கருத்தும் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner