Wednesday, 31 August 2011

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஜோதிடம்;சனி தோசம் நீங்க..

சனி பெயர்ச்சியால் வரும் நவம்பர் 1 முதல் அதிக பாதிப்பை பெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் சனி தோசம் நிங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ...


1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்
2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவ்லாம்
3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்..இதுதான் தானத்தில் சிறந்தது.
4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..
5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி
6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்.
7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு
8.கடுமையான உழைப்பு அவசியம்.இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்
9.ஆஞ்சநேயர்,வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும்.இருவரும் சனியை வென்றவர்கள்.
10.தாய்,தந்தையை வணங்குங்கள்.உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள்.குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்.
மேலும் வாசிக்க"சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்"

Post Comment

ஜோதிடம்;களத்திர தோச பரிகாரம்


செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி  சம்பந்தமான வேலைகள்,  ராணுவம், ரத்தம், ரணம்  எனப்படும் காயம்,   சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார்.
 
மேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல  பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குவது தனிச்சிறப்பு.
 
ரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.
 
எல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமாப மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.
 
ஆக செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் முக்கிய சொல்லாக இருக்கிறது. வாழ்க்கையின் மூலச் சொல்லாக உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் என்ன என்பதை பார்ப்போம். நிவர்த்தி செய்வதையும் கவனிப்போம்.
 
திருமண தோஷம்:
 
அங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிமார்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.
 
ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.
 
அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.
 
மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும்  செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில்  இருந்தால் தோஷம்  இல்லை.
 
மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.
 
கடகம், சிம்ம லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் 2-ம்மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில் செவ்வாய் இருக்கும் வீடு 4ம் இடம் மேஷம், விருச்சிகம் என்றாலும் தோஷம் இல்லை. செவ்வாய் 7ம்மிடம் கடகம், மகரமாயின் தோஷம் ஏற்படாது. செவ்வாய் 8ம்மிடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.
 
செவ்வாய் 12மிடம் ரிஷபம், துலாமாக இருந்தால் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பம் இருந்தால் தோஷம் இருக்காது. குருவுடன் இருந்தாலோ சந்திரனுடன் இருந்தாலோ தோஷம் இல்லை. புதனு டன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை. சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ பார்த்தாலே தோஷம் ஏற்படாது.
 
செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமா யின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது.
 
செவ்வாய் சனியுடன் சந்திரன், குரு இவர்கள் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச்சேர்ந்த விஜய்சுவாமிஜி.
 
பரிகார இடங்கள்:
 
பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.
 
காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.
 
குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாது காஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.
 
பலன் தரும் பரிகாரங்கள்:
 
துவரை தானம்:
 
உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
 
வாழைப்பூத் தானம்:
 
முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.
 
வழிபாட்டு முறை:
 
செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.  
 
கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.
 
இந்த  தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.
 
இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.
 
செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.  முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.
 
வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.  
 
பரிகார காலம்:
 
செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.
 
பரிகாரம் செய்ய  ஆகாத நேரம்:
 
ஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல. இதைப் போல பரிகாரம் செய்து கொள்பவருடைய மனைவியின் நட்சத்திரத்திலிருந்து நான்கு, எட்டு, பன்னிரண்டு இந்த நாட்களிலும் செய்யக் கூடாது.  
 
இதைப் போல இந்த தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்திரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.           

மேலும் வாசிக்க"ஜோதிடம்;களத்திர தோச பரிகாரம்"

Post Comment

ராஜீவ் கொலை வழக்கு;உண்மையான குற்றவாளிகள்;ஜூனியர்விகடன்

ராஜீவ் கொலை வழக்கு;உண்மையான குற்றவாளிகள்;ஜூனியர்விகடன்

பெங்களூர் ரெங்கநாத்;சிவராசன்,சுபா வுக்கு தன்னுடைய பெங்களூர் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்.சுமார் 15 நாட்கள் சிவராசன் குரூப்[புடன் நெருங்கி பழகியவர்.இதனால் கைது செய்ய்ய்ப்பட்டு சிறைவாசத்துக்குபின் விடுதலையான அவருடன் ஒரு சந்திப்பு;


இலங்கையில் சிங்களர்கல் எய்த கொடுமைகளை சிவராசனும்,சுபாஉம் நிறைய உருக்கமான தகவல்களை சொல்லியிருக்கின்றனர்.தனது பள்ளி தோழிகளுடன் சுபா விளையாடிக்கொண்டிருந்தபோது,அங்கே வந்த மைதி படையினர் ஆறு சிறுமிகளை அள்ளிக்கொண்டு போனார்களாம்.மறுநாள் அந்த சிறுமிகளை பலாத்காரப்படுத்திவிட்டு,கொன்று போட்டிருந்தார்களாம்.சிறுமிகளை பள்ளி அடையாள அட்டையை அவரவர் கழுத்தில் மாட்டி,அவர்கள் வீட்டு வாசலில் பிணத்தை போட்டிருந்தார்களாம்.இதை அவர் சொல்லி,எப்படி அண்ணா போராடாமல் இருக்க முடியும் என கண்ணீர் விட்டார்.

சிவராசன் குரூப்புடன் பழகியதில் ராஜீவ் கொலை கொலையில் 40 சதவீதம் தெரியும் என்றால்,சி.பி.ஐ விசாரணையில் இருந்தபோது மீதி 40 சதவீத உண்மைகள் தெரிந்தது.அப்போது சந்திராசாமி எப்படி இந்த வழக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன்.எனக்கு ஹிந்தி,தமிழ்,மலையாளம் தெரியும்.ஆனால் அதிகாரிகளிடம் ஹிந்தி தெரியும் என்பதை மறைத்துவிட்டேன்.அதனால் அவர்கள் என்னை வைத்துக்கொண்டே ஹிந்தியில் நிறைய பேசினார்கள்.

சந்திராசாமியின் பி.ஏ...,நான் சி.பி.ஐ கஸ்டடியில் இருந்தபோது,அவர்கள் முன்னிலையிலேயே என்னை மிரட்டினார்..சுவாமிஜி (சந்திராசாமி)யிடம் சுரேஷ் மாஸ்டர்,சிவராசன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதை கோர்ட்டில்,சொன்னால் உன்னை இங்கேயே முடித்துவிடுவோம்..என்றார்.

அதன் பின் பலமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோதும் இந்த உண்மைகளை நான் சொல்லவில்லை.ஒருமுறை சோனியா என்னை சந்திப்பதாக சொன்னார்கள்.நடந்தவற்றையெல்லாம் சொன்னேன்.அதிர்ச்சியுடன் கேட்டவர்,கண்களில் நீர் தளும்பியது..பார்த்துக்கொள்கிறேன்..என்றுஅனுப்பிவிட்டார்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ராஜீவ் கொலையில் இன்னும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன..ஆனால் எனக்கு தெரிந்து எந்த தொடர்பும் இல்லாத பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூகு தண்டனை விதிப்பது நியாயமே இல்லை.
தூக்கு தண்டனை எதிர்கொண்டுள்ள மூவரும் தீவிரவதிகள் அல்ல.அவர்கள் அனுபவித்த தண்டனையே நியாயமில்லை.அவர்களை விடுவிக்க வேண்டும் என்றார்.
நன்றி;ஜூனியர்விகடன்


மேலும் வாசிக்க"ராஜீவ் கொலை வழக்கு;உண்மையான குற்றவாளிகள்;ஜூனியர்விகடன்"

Post Comment

மலை ஏறும் மங்காத்தா


சூர்யாவின் ஏழாம் அறிவு;மலை ஏறும் மங்காத்தா;நண்பன் விஜய் கவலை

சூர்யா வின் ஏழாம் அரிவு தீபாவளி ரேஸில் விஜய் நடித்த வேலாயுதத்துடன் களம் இறங்குகிறது.அதிக எதிர்பார்ப்புடன் மங்காத்தா இன்று களம் இறங்குகிறது.சூர்யா,அஜீத் இருவரும் தயாரிப்பாளர்கள்,வினியோகஸ்தர்கள் மத்தியில் ஹாட்கேக் ஆகிவிட்டனர்..விஜய்க்க்ய் வேலாயுதம் கில்லி போல வெற்றி கொடுத்தால்தான் இவர்களை விட பெரிய ஹாட்கேக் ஆக முடியும்.


சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கஜினி தமிழ் சினிமாவின் முக்கிய மைல் கல் ஆன பிறகு மீண்டும் இதே கூட்டணி இணையும் படம்,ஏழாம் அறிவு...

இந்தப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகிவிட்டது.படம் பெரிய செலவில் தயாரவது பெரிய விசயமில்லை.அந்தளவு சத்தான கதை,திரைக்கதையுடன் வளர்வதுதான் முக்கியம்...முருகதாஸ் ரமணா,கஜினிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் ஆகிவிட்டார்.சூர்யாவும் அடுத்தடுத்த ஹிட்ஸ்களால் தமிழின் முக்கிய ஹீரோவாக ஜொலிக்கிறார்.

டாப் ஹீரோவும்,டாப் ஹீரோவும்,பாப்புக்லர் டெக்னீசியன்களும் கலந்து கட்டி அடிக்கும் மசாலா விருந்தாக ஏழாம் அறிவு இருக்கப்போகிறது...இதில் தசாவதரம் போல பல வேடங்களில் சூர்யா நடிக்க போகிறாராம்...

சீனாவுக்கு குங்க்ஃபூ கலையை கற்றுக்கொடுத்ததே ஒரு தமிழ் மன்னதான் என்பதை ஆணித்தரமாக ஆதாரத்துடன் இந்த படம் மூலம் நிரூபிக்க போகிறார்கள்...

சிங்கம் படத்தின் வெற்றி ஏ.பி.சி என தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.விஜய் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொடுத்த நல்ல படமான காவலன் கூட சுமாரான வசூலே கொடுத்த நிலையில்,சூர்யாவின் சிங்கம் வெற்றிக்கு பின்,ஏழாம் அறிவும் மெஹாஹிட் ஆனால் வினியோகஸ்தர்களும்,தயாரிப்பாளர்களும் தன்னை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற கவலை ஏற்படுவது இயற்கைதானே..!
மேலும் வாசிக்க"மலை ஏறும் மங்காத்தா"

Post Comment

Tuesday, 30 August 2011

ரஜினி, ரஜினிதான்...!


ரஜினியின் ஆளுமைத்திறன்,வசீகரம்,டயலாக் டெலிவரி மிக அற்புதமானது.அதிக பட்ச மக்களின் ஆதர்ஸ நாயகனாக இவை மிக முக்கியம்.சில நாயகர்கர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாமல்தான் தோற்றுப்போயிருக்கின்ரனர்.முள்ளும்மலரும் படத்தில் ரஜினியின் நடிப்பு இன்றும் பேசப்படுவதற்க்கு காரணம் தேவையான அளவுக்கு உணர்ச்சியை காட்டும் விதமும்,சாதாரண மனிதன் இக்கட்டான நேரத்தில் எப்படி தன் இயலாமையை வெளிப்படுத்துவானோ அதை தத்ரூபமாக ரஜினிவெளிப்படுத்தி இருப்பார்.16 வயதினிலே படத்தில் தான் ரஜினியின் பஞ்ச் டயலாக் அறிமுகமாகியது என நினைக்கிறேனிது எப்படி இருக்கு? என்ற வசனம் சிறியவர்களை மட்டுமல்ல..பெரியவர்களையும் பல முறை உச்சரிக்க வைத்தது
.
பில்லா படம் ரஜினியின் ஆக்சன் அவதாரம்.ரஜினியின் விஸ்வரூபம்.மை நேம் ஈஸ் பில்லா என அவர் கர்ஜிப்பதை இன்றும் இமை கொட்டாமல் ரசிப்பேன்.அந்த கம்பீரம் அஜித்தின் பில்லாவில் எடுபடவில்லை.அவர் வேகமா படம் வேகமா என்ற அளவுக்கு திரைக்கதை எக்ஸ் பிரஸ் வேகத்தில் பயணிக்கும்.நிறைய ஸ்வாரஸ்யமான சின்ன சின்ன கதைகள்,திருப்பங்கள் திரைக்கதையின் போக்கை மாற்றிவிடாமல் பின்னப்பட்டிருந்ததால் படம் பெரிய வெற்றியை பெற்றது
.
பல வெற்றிப்படங்களின் யுக்தி இதுதான் ஸ்வாரஸ்யமான நிறைய திருப்பங்கள்.,ரசிக்க வைக்கும் சின்ன சின்ன கேரக்டர்கள்,காட்சி அமைப்புகள் தான் வெற்றிபெற வைக்கின்றன.அதற்க்கு பிறகுதான் இசை.,நடிகர்,இயக்குனர் என்பதெல்லாம்.பெரிய இயக்குனர்களின் படங்கள் பெரிய வெற்றி பெற இதுதான் காரணம் என நினைக்கிறேன்.அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரு சாதாரண பால்காரனாகவும் பெரிய பணக்காரனாகவும் அடிப்பின்னியிருப்பார்.பால்காரனாக இருக்கும் போது காணப்படும் எளிமை,எதார்த்தம்,நம்ம பக்கத்து வீட்டு ஆள் போல இருக்கும்.பணக்காரன் ஆனபிறகு மிடுக்கு,கம்பீரம்,இறுக்கமான முகம் என இரு கேரக்டர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.அழகிய தமிழ் மகன் படத்தில் இரண்டு விஜய் க்கும் வித்தியாசம் காட்டத்தெரியாமல் விஜய் தடுமாறி இருப்பார்.அவரது ரசிகர்களே அதை கடுப்புடன் சொல்லியதை கேட்டேன்.எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர் காட்டும் வித்தியாசமும்,நீரும் நெருப்பும் படத்தில் காட்டும் வித்தியாசமும் பெரிதும் ரசிக்கப்பட்டன..முக பாவனைகள்,நடக்கும் ஸ்டைல்,உச்சரிப்பு,என எல்லாமே பக்காவாக இருக்கும்.சிவாஜி 3 சிவாஜியாக ஒரு படத்திலும்,நவராத்திரியிலும் செம கலக்கு கலக்கி இருப்பார்.கமல் தசாவதாரத்தில் இதற்க்கு கிளாசே எடுத்துவிட்டார்.

 பாட்சா படத்தில் சாந்த சொரூபியாகவும்,டான் ஆகவும் மிரட்டிய,ரஜினி அதே படத்தில் ஒரு அண்ணனாகவும் முத்திரை பதித்திருப்பார்.தங்கையின் உதட்டில் ரத்தத்தை பார்த்ததும் ஆக்ரோசப்படும் காட்சி புல்லரிக்க வைக்கும்.தர்மதுரை படத்தில் ரஜினியின் நடந்துவரும் காட்சிகளை காட்டி அதன் பின் முகத்தை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் காட்சி அதுதான் புதுசு என நினைக்கிறேன்..பாண்டியன் படத்தில் இடை வேளை வரை ரவுடியாகவும் வில்லனுக்கு அடியாளகவும் நடித்து இடைவேளைக்கு பின் போலிஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார்.அது செம மாஸ்.இதே கதையை சிட்டு எடுக்கப்பட்ட போக்கிரியில் விஜயின் போலீஸ் கெட்டப் பொருந்த வில்லை.அல்லது சரியாக காட்சிப்படுத்தபடவில்லை.அப்பாவும் மகனுமாகரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் ஒரு காட்சியில் மனைவி லட்சுமியை அறைந்து விட்டு,அதற்க்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு வசனம் பேசுவார்.லட்சுமியும் கன்னத்தை துடைத்துக்கொண்டு,இதோ எடுத்துட்டு வர்ரேங்க..என பேசுவார்.செம சீன்.
மேலும் வாசிக்க"ரஜினி, ரஜினிதான்...!"

Post Comment

புதிய பதிவர்கள் கவனிக்கவும்!


புதிய பதிவர்கள் கவனிக்கவும்!
நாளுக்கு நாள் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்க்கு வருகை தருவது மகிழ்ச்சி தருகிறது(புது ஃபாலோயர்ஸ் கிடைப்பாங்களே-;)) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு வருசமா பதிவுலகத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி ,காசை நிறைய விட்டு(பிரவுசிங் செண்டர்ல..இப்ப கம்ப்யூட்டர் வாங்கிட்டென்),முக்கி திணறி 100 ஃபாலோயர்ஸ் கிடைச்ச அருகதையில உங்ககிட்ட சில வார்த்தைகள்.....
நான் அட்வைஸ் பன்ணல..ஒரு சில ஐடியாக்கள் அவ்வளவுதான்...
புதிய பதிவர்கள் முதலில் செய்ய வேண்டியவை......
1.
எல்லாமே ஹிட்ஸ்க்காகத்தான்.என்றாலும் ஹிட்ஸை எதிர்பாராமல் அவ்வப்போது சமூகத்திற்க்கும் மெசேஜ் கொடுங்கள்.

2.
காப்பி பேஸ்ட் தவிர்த்து விடவும்..இதனால் எந்த பெயரும் நமக்கு கிடைக்க போவதில்லை.சமூகத்திற்க்கு பயன்படும் என்றால் போடலாம்.முக்கிய செய்தி என்றால் போடலாம் தவறில்லை.ஆனால் அதை வைத்தே பதிவுலகத்தில் காலம் ஓட்ட முடியாது...(சொந்த அனுபவம் நிறைய இருக்கு ஹி..ஹி)

3.
ரொம்ப ஹாட்டா எதுவும் எழுதிட வேண்டாம்..கவிதையை எழுதி தள்ளாதீங்க..இங்க முக்காவாசி வைரமுத்து..வாலி தான்..
.
4.
பதிவின் பக்கங்களை அழகாக்குறேன் பேர்வழின்னு கலர்கலரா எழுத்தை மாத்தாதீங்க..கண்ணுக்கு கெடுதல்..இது போல பல தளங்களுக்கு சென்று நான் ஓடி வந்துவிட்டேன்....ஃப்ளாஷ் விளம்பரங்களை பக்கம் முழுவதும் தோரணம் கட்டாதீங்க..அதுவும் எரிச்சலை தரும்..அது மூலமா ஆதாயம் இருந்தா ஓகே.

5.
குறைந்த பட்சம் 100 பதிவர்களிடமாவது உறுப்பினர்களா சேருங்க அப்பதான் உங்களுக்கும் 50 உறுப்பினர்கள் சேருவாங்க..எனக்கு யார் ஃபாலோயர் சேர்ந்தாலும் அவர்களிடம் நானும் ஃபாலோயர் ஆகிறேன்.....இது நல்ல பலன் தருகிறது...நீங்கள் யாரிடமாவது ஃபாலோயராக இணைந்து அவர்கள் உங்களிடம் ஃபாலோயராக சேரவில்லை என்றால் அவர்கள் பிரபல பதிவர்கள் என அறிந்துகொள்க..அவர்களிடம் நமக்கு எதுவும் தேறாது..பின்னூட்டம் உட்பட.

6.
நம்மை போல..புது பதிவர்கள் யார் வந்தாலும் ஃபாலோயராக சேருங்கள்.ரொம்ப நல்லா அவங்க எழுதினாத்தான் ஃபாலோயர் ஆகணும்னு இல்லை.உடனே அவர்கள் போடும் பதிவுகளுக்கு சென்று மறுமொழி இடுங்கள்.குறைந்தபட்சம் ஸ்மைலி யாவது போடவும்...

7.
யாருடைய பதிவையாவது நீங்கள் எடுத்து கையாண்டால் அவர்களுக்கு லின்க் கொடுத்து விடவும் அல்லது நன்றி என போட்டு விடவும்..இது பதிவுலக சட்டம்.

8.
நீங்கள் மொக்கை பதிவர் என்றால் அதான் என்னை பொல..ஹிட்ஸ் மட்டுமே எதிர்பார்ப்பவர் என்றால் சீசனுக்கு தகுந்தாற்போல பதிவு போட வேண்டும்..எந்திரன் சீசன் இது ..எந்திரன் சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு விட்டீர்களா...அதுக்கு தான் இப்ப மார்க்கட்.ஒரு நாளைக்கு 500 ஹிட்ஸ் குறைந்தது நிச்சயம்...

9.
நிறைய புது பதிவர்களில் மறுமொழி நாம் போட்டால் ,உங்கள் மறுமொழி சேமிக்கப்பட்டுள்ளது. பதிவு ஓனர் சொன்னால் வெளியிடுகிறோம்..என வருகிறது.. இது செம கடுப்பை கிளப்புகிறது..நீங்க என்ன பெரிய வினவா,சவுக்கா ..அல்லது பிரபல பதிவரா.. நமக்கு தேவை மறுமொழி..அப்பப்ப அது வந்தாதான் அப்பப்ப தமிழ்மணம் மறுமொழி திரட்டியில உங்க பேரு வரும் யாராவது ஒண்ணு ரெண்டு நல்ல உள்ளம் உள்ளே நுழையும்..அதனால் செட்டிங் சென்று கமெண்ட் மாடரேசன் .டிக் பண்ணி விடவும்..அதே போல நாலு இங்கிலீஸ் எழுத்து வரும் அதை டைப் பண்ணாத்தான் உள்ளே போக முடியும்..அதற்காகவே நான் கமெண்ட் போடாமல் திரும்பியது நிறைய..அதையும் நீக்கவும்.
.
10.
நம்ம பதிவை எல்லாம் பிரபல பதிவர்கள் படிப்பாங்களா என சோர்ந்து போக வேண்டாம் எல்லாமே உள்ளே வரும் ஆனா எதுவும் கமெண்ட் போடாது... ஏன்னா அவங்களுக்கு இமேஜ் இருக்குதுன்னு அவங்களே நினைச்சுகிறாங்க..
.
11.
அப்புறம் கூட்டு களவாணிங்க..இங்க ஜாஸ்தி.மெயில் சாட்டிங்க் ல பேசிக்குவாங்க..என்னோட பதிவு போட்ருக்கேன்..இதுல பின்னூட்டம் ஓட்டு போட்ரு..உனக்கும் போட்டுடறேன் னு பேசிக்குவாங்க...அதே மாதிரி 6 பெரு ஓட்டு போட்டா போதும் ஹிட்ஸ் தான்..நல்ல பதிவு நாம போடல..அதனால் நமக்கு ஓட்டு விழலை ந்னு ஏமாந்துடாத..மக்கா..சூதானமா பொழச்சுக்க...

12.
உங்களுக்கு யாராவது கமெண்ட் போட்டா உடனே அவங்க பதிவுக்கு போயி கமெண்ட் போட்ரு...அதுதான் நல்லது...கமெண்ட் போடறவன் உன் எழுத்து அமர காவியம் நு நினைச்சா போடறான்..ஏதோ.. அண்ணன் நமக்கும் கமெண்ட் போடுவாருன்னு நம்பிதானே போடுறான்.. அவனுக்கு நீ துரோகம் பண்ணலாமா..?
நன்றே செய் அதை இன்றே செய் னு எதுக்கு சொன்னாங்க...இதுக்குதான்....அப்படி மறுமொழி போடலன்னா ,தனிப்பட்ட முறையில் அவங்க மெயில் ஐடிக்கு போய் அண்ணே..நான் உனக்கு இத்தனை பதிவுல..இத்தனை கமெண்ட் மொய் வெச்சிருக்கேன்..எனக்கு நீ இத்தனை பதிவுல  இத்தனை கமெண்ட் போடல...அதனால ஒழுக்கமா வந்து மொய் கணக்கு தீருன்னு சொல்லு தம்பி..அண்ணன் அலறிக்கிட்டு வருவான்.. 
-
இன்னும் அரசியல் இருக்கு...சொல்வேன்.அடுத்த பதிவுல...
மேலும் வாசிக்க"புதிய பதிவர்கள் கவனிக்கவும்!"

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner