Monday, 31 October 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்


புலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012

பாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

சனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.

புலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியில் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.

’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
பாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்
சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
சிவசிவ சலபயமும் பொருளும்சேதம்
கூரப்பா குடியோடிப் போக செய்வன்
கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
வீரப்பா வெகுபேர்க்கு கொடியோனாகி
விளங்குவான் புவிதனிலே விளம்பகேளே’’

விளக்கம்;

கோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.

இன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;

’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்
கெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்
நாளப்பா நலமாகும் மற்றை ராசி
நற்சுகமும் கிட்டுமடா வேட்டலுண்டு
கூளப்பா கோதையினால் பொருளுஞ்சேதம்
கொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே
ஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி
அப்பனே முடவன்சேய் வலுவைக்கூறே’’

விளக்கம்;

கடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...

மேலும் வாசிக்க"புலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்"

Post Comment

Sunday, 30 October 2011

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;

நல்ல நேரம் சதீஷ்குமார்



வீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...

இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் வாசிக்க"உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்"

Post Comment

Saturday, 29 October 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்

சனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்..? என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.

தனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.

.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.

11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.

வங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

இக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


மேலும் வாசிக்க"சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு"

Post Comment

பால்மலர் கொலை வழக்கு-நடுங்கும் தி.மு.க-ஜூனியர் விகடன் 2011-11-02

பால்மலர் கொலை வழக்கு-நடுங்கும் தி.மு.க-ஜூனியர் விகடன் 2011-11-02;


சென்னை கே.கே.நகர் தி.மு.க பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு ,க்ளைமாக்ஸை எட்டியுள்ளது.குற்றவாளிகளை நெருங்கிவிட்ட ச்.பி.சி.ஐ.டி போலீஸ் விரைவில் தி.மு.க முக்கிய புள்ளிகள் சிலரை அடுத்தடுத்து வளைக்கும் என காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது!

சென்னை கே.கே.நகர் பகுதியில் தி.மு.க மகளிர் அணி செயலாளராக இருந்த பால்மலரை கடந்த 2008 அம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் கொடூரமாக கொன்று மணிமங்கலம் கால்வாயில் வீசினர்.பால்மலர் கட்சி பிரபலங்கள் பலருக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதால் இந்த கொலை அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் தி.மு.க ஆட்சி முழுவதும் இந்த கொலை வழக்கு வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்தது.அடுத்து அ.தி.மு.க ஆட்சி வந்ததும் பால்மலரின் கணவர் குமரவேல் தி.மு.க முக்கியஸ்தர்கள்தான் என் மனைவி மரணத்துக்கு காரணம் என களம் இறங்க..இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது!

பால்மலரின் கணவர் குமரவேல் பின்வாங்கிவிட்டதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.ஆனால் இப்போது கொலைக்குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் கசிய ஆரம்பித்ததை தொடர்ந்து குமரவேலை சந்தித்தோம்.

என் மனைவியின் சாவுக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.தங்கள் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு நிர்வாகியின் கொலையைக்கூட முறையாக விசாரிக்காமல்விட்ட தி.மு.க வுக்கு பாடம் புகட்ட வேண்டும்.என் மனைவி இறந்த அன்று கடைசியாக நந்தனம் லோட்டஸ் காலனியில் இருக்கும் அன்பகம் கலை வீட்டுக்கு சென்றார்.அதன்பிறகுதான் அவளது செல்ஃபோன் ச்விட்ச் ஆஃப் ஆனது.தி.மு.க ஆட்சியில் இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி இதில் மேல்மட்ட தொடர்பு இருக்கு.எங்களால ஒண்ணும் செய்ய முடியாது..!! என்று என்னிடம் சொன்னார்.கட்சியில் இருக்கும் என் நண்பர்களும் ,தி.மு.க முக்கியஸ்தர்களும்தான் இந்த கொலைக்கு காரணம் என சொன்னார்கள்.

அப்போது நடந்த விசாரணையில் பால்மலர் எங்க வீட்டுக்கு வந்தது உண்மைதான்.அன்னிக்கு கலைஞர் பிறந்த நாள்கிறதால கொஞ்சம் பிஸியா இருந்தேன்.அதனால அவங்க எப்போ போனாங்கன்னு எனக்கு தெரியல’ என்று அன்பகம் கலை சொன்னார்.எனவே அன்பகம் கலைக்கு தெரியாமல் இந்த கொலை நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.அவர் கண் அசைவின்றி அவர் வீட்டில் எதுவுமே நடக்காது.கொலை செய்ய சொல்லி கட்டளை இட்டது யார் என்பதுதான் இப்போதைய கேல்வி.அன்பகம் கலையை கைது செய்து தீவிரமாக விசாரித்தால் குற்றவாளியை கைது செய்துவிடலாம்.சமீபத்தில் என்னிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர்,உங்கள் மனைவி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் விரைவில் கைது செய்துவிடுவோம்.என்று மட்டும் சொன்னார்.யார் அதை செய்தார்கள் என்பதை மட்டும் சொல்லவில்லை.கைதுக்காக நானும் காத்திருக்கிறேன்.பணம் வாங்கிகொண்டு நான் பின்வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எனக்கு சொந்தமாக நாங்கு வீடுகள் உள்ளன.டிராவல்ஸ் தொழில் நடத்தி நன்றாகவே சம்பாதிக்கிறேன்.நான் யாருக்கும் விலைபோக வேண்டிய அவசியம் இல்லை.


கழுகார் பதிகள்;

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வின் வாக்கு வங்கி சதவீதம் அதிகரித்துள்ளதாக கருணாநிதி கூறியுள்ளாரே..?

தி.மு.க வின் ஒரே ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெற்றிருந்த 1991 சட்டமன்ற தேர்தலில் கூட தி.மு.க 22.67 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது.23-26 சதவீதம் வாக்குகளை நிரந்தரமாக வைத்திருக்கும் தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக காரணம்,கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் கெட்ட பெயரை சம்பாதித்த தி.மு.க அமைச்சர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடாததுதான்.அந்த மந்திரிகளுக்கு எதிரான ஓட்டு குறையாததால் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா விடம் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை;

உங்களிடம் இருந்து 24 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறதே,..?

எனக்கேட்டு முடிக்கும் முன்னரே,என்னிடம் 21,000 கிராம் தங்க நகை மட்டுமே இருக்கிறது.நான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள்.பிரபல நடிகையாக இருந்து சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கியவை.அவை அத்தனையையும் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.அது சுத்த பொய்.என்னிடம் இருந்த பழைய நகைகளை மதிப்பிட்ட ஊழல் தடுப்பு அதிகாரி நல்லம்ம நாயுடு வேண்டும் என்றே என் மீது பழி போட்டுள்ளார்.அதே போல எங்கிருந்தோ கொண்டு வந்து வைத்த நகைகளை என் வீட்டில் வைத்து படம் பிடித்துள்ளனர்..என காரசாரமாக பேசினாராம்.



நன்றி;ஜூனியர் விகடன்

இண்டெர்நெட்டில் வேலாயுதம்;விஜய் கோபம்;

இண்டெர்நெட்டில் புதுபடங்களை வெளியிடக்கூடாது என நடிகர் விஜய் போர்க்கொடி தூக்கியுள்ளார்...இதனாலதான் இவங்க படம் எல்லாம் ஓட மாட்டேங்குதாம் என்ன கொடுமை சார்..வேலாயுதம் விட 7 ஆம் அறிவுதான் நெட்டில் முதலில் வந்தது...தியேட்டர்களிலும் 7 ஆம் அறிவுக்குதான் முக்கியத்துவம் என நினைக்கிறேன்..

நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை 


மேலும் வாசிக்க"பால்மலர் கொலை வழக்கு-நடுங்கும் தி.மு.க-ஜூனியர் விகடன் 2011-11-02"

Post Comment

Friday, 28 October 2011

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;

ரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.

நான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்

கருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.
மேலும் வாசிக்க"ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்"

Post Comment

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்;


தீபாவளி பண்டிக்கைகாக இந்த வருடமும் மாமனார் வீட்டுக்கு போக கூடாது..நம் ஊரிலேயே இருந்துவிடலாம்.என்றுதான் இருந்தேன்.விடுமுறை நாள் என்பதால் ஜோதிடம் பார்க்க இப்பதான் சவுகரியமா இருக்கு..டைம் சொல்லுங்க..என ஃபோன் செய்துகொண்டே இருந்தனர்.இந்த வருடம் எந்த ஊருக்கும் போகாமல் தொழிலை கவனிக்கலாம் என நினைத்தேன்.விதி என் மச்சினன் வழியில் வந்தது..எங்களை அழைத்து செல்ல ஊருக்கு வந்துவிட்டான்.முதல் நாள் தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் முடிந்ததும் அடுத்த நாள் என் மனைவி ஊருக்கு கிளம்ப தம்பியுடன் ரெடி.நீங்க எப்பங்க வரீங்கன்னு கேள்வி வேற.ஊருக்கு போகலாம்னு நான் சொல்லவே இல்லையே.கிளம்பி நிக்குற ..முறைத்தபடி கேட்கிறேன்..அதுக்குள்ள என் மகள் அவசர அவசரமா அவள் சின்ன பேக் எடுத்து தோள்ள...மாட்டிகிட்டு அப்பா ஊருக்கு வரும்போது குச்சி மிட்டா,கரடி பொம்ம,ஐஸ்க்ரீம்..அப்புறம் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கு வாங்கிட்டு வா.நாங்க டாட்டா போறோம்னு சொல்லிட்டு ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க.வேற வழியில்லாம நானும் அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிடுச்சி.

மேலும் வாசிக்க"என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்"

Post Comment

Monday, 24 October 2011

ஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்

அதென்ன ஏழாம் அறிவு..? முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ..? மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..!!

1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

2.தட்டான் தாழ்ப்பறந்தால் மழை

3,அந்தி ஈசல் அடை மழை

4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை

5.தவளை கத்தினால் மழை

6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7.கொக்கு மேடேறினால் மழை

8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.

9.கழுதை காதை உயர்த்தினால் மழை

10.ஈசல் பறந்தால் மழை


11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்

12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்

13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.

14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்

15.மயில் நடனமிட்டால் மழை வரும்

16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்

17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்

18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்

19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.

20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.

இன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி..? மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;

முக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,


ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே
என மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.


எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!




மேலும் வாசிக்க"ஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்"

Post Comment

வீமகவி ஜோதிடம்

வீமகவி ஜோதிடம்;

வீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் என மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது ..? என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.


ஜோதிடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)


வீமகவி ஜோதிட பாடல்;

காணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;
வானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு
காணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு
தானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.


விளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..


.(தொடரும்)


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;


மேலும் வாசிக்க"வீமகவி ஜோதிடம்"

Post Comment

புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்;

பாடல்;


''வீரப்பா யின்னமொரு புதுமை கேளு
விளம்புகிறேன் வீரியன் வீட்டில் தானும்
ஆரப்பா அசுரர்குரு செவ்வாய் கூடில்
அப்பனே அம்மங்கலையை அணைத்து வாழ்வான்
கூரப்பா குமரனுக்கு வித்தை புத்தி
குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே''


விளக்கம்;

இதுவரை சொல்லியதைவிட இன்னொரு புதுமையான கிரக அமைப்பை கொண்ட ஜாதகரை பற்றி கூறுகிறென் கவனமுடன் கேட்பாயாக.சூரியனின் வீடான அதில் சுக்கிரனும் ,செவ்வாயும் சேர்ந்திருப்பானாயின் இந்த ஜாதகர் கணவனை இழந்த பெண்ணை மணந்து வாழ்வான்.ஆனால் அவன் தொழில் சிறந்து புத்தி கூர்மையுடன் இருப்பான்.தவிர செல்வந்தனாகவும்,சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்,நூல்களை ஆராய்ச்சி செய்பவனாகவும் இருப்பான்.இதனை போகருடைய கருணையினால் கணித்து புலிப்பாணி சொல்லியுள்ளேன்.
மேலும் வாசிக்க"புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்"

Post Comment

Saturday, 22 October 2011

ரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..?

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.

அடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.
மேலும் வாசிக்க"ரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..?"

Post Comment

ஜெயலலிதா பெங்களூர் வழக்கு -ஜூனியர் விகடன் 26.10.2011

ஜூனியர் விகடன் 26.10.2011

பரப்பனஹள்ளி அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் ஆஜராக வேண்டும் என சொன்னதும் ஏகத்துக்கும் டென்சனானாராம் ஜெயலலிதா.ஏன் அந்த இடத்தில் ஆஜராவதற்கு அனுமதி வாங்கினீர்கள்..இப்போதே நான் ஜெயிலுக்கு போக வேண்டுமா..? என செண்டிமெண்ட் காட்டி வக்கீல்களை விளாசினாராம் .முத நாள் இரவு முழுவதும் தூங்கவில்லையாம்.தூக்கம் இழந்து டலாகத்தான் மறுநாள் 8.30 மணிக்கு போயஸ்கார்டன் விட்டு கிளம்பினார்.

மேலும் வாசிக்க"ஜெயலலிதா பெங்களூர் வழக்கு -ஜூனியர் விகடன் 26.10.2011"

Post Comment

ஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும் பாகம் 2

ஜோதிடம்,ஜாதகம்,திருமண பொருத்தம்,நியூமரலாஜி;நல்லநேரம் சதீஷ்

சோதிடம் சதீஷ்னு பெயர் வெச்சு எழுதுனேன்..கூகிள் காரங்களுக்கு டவுட் வந்து எங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு.அதன்படி இந்த பெயர் செல்லாது.அதனால வெற பெயர் வெச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க...இப்போ josiyam sathishkumar னு மாத்தியிருக்கேன்.இதுக்கும் ஆட்சேபம் தெரிவிச்சா நல்ல நேரம் சதீஷ்குமார் னு மாத்திடலாம்னு ஐடியா.என்ன சொல்றிங்க..?

நல்ல நேரம் ப்ளாக்கை ஜோதிட பதிவு தளமா இல்லாமல் பொழுது போக்கு தளமாக எல்லா மேட்டரும் இருக்கும்படியா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.உங்களுக்கும் போரடிக்கும் இல்லையா..தினசரி ஒரு ஜோதிட பதிவு ,அரசியல்,சினிமானு மசாலாவா இருக்கணும்னு நினைக்கிறேன்.ஆனா டைப் பண்றதுதான் கஷ்டம்.இருப்பினும் ஜமாய்ப்போம்.
------------
ஜாதகத்தில் ராகு அமர்ந்த நிலை பலனுக்கு நல்ல வரவேற்பு.ஜாதகத்தில் லக்கினம் என போட்டிருக்கும் இடத்தை ஒன்றாம் வீடாக வைத்து,எத்தனாவது கட்டத்தில் ராகு இருக்குன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.அதன்படி பலன்களை பார்க்கலம்.ஒவ்வொரு ராசிக்கும் பத்து பக்கம் எழுதும் அளவு பலன்கள் இருப்பினும்..நான் நாலே வரியில நச்சுன்னு முடிக்கணும்னு நினைக்கிறேன்.என்னோட எழுத்து முகத்துல அறைஞ்சாற்போல இருக்கும்.இது பலருக்கு வருத்தம் கொடுத்தாலும் என்ன செய்றது வழ வழன்னு எழுதறதுல,சாஃப்ட்டா எழுதறதுல ஒரு பலனும் இல்லை.ஜோசியம்னா அதிரடியா இருக்கணும்.நான் எழுதிய விஜயகந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..? என்ற் கணிப்புகள் உள்ளாட்சி தேர்தல் முடிவில் பலித்ததாக பாராட்டிய நண்பர்களுக்கும்,ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவில் டிசம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கே வெற்றி என நான் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தி வாழ்த்திய நபர்களுக்கும் நன்றி.

ராகு அமர்ந்த ராசிபலன் இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு செல்லவும்..

7ல் ராகு அம்ர்ந்த பலன்; தவறு செய்வது மனித இயல்பு.ஆனால் இவர்களுக்கு அது பொழுதுபோக்காக அமைந்துவிடும்.கோயிலுக்கும் போவாங்க..பலான மேட்டருக்கும் போவாங்க.போகிற போக்கில் சாதரணமா செய்ற செயல் குடும்ப பெயருக்கு அவமானம் தரும்.பெரிய குடும்பமாக இருந்தாலும் மோசமான இடத்துக்கு சென்று தலைகுனிவை குடும்பத்துக்கு உண்டாக்குவார்..ஜாதகருக்கும் நிம்மதி இல்லை.சம்பிரதாயம்,ஜோசியம் நு இவர் கிண்டல் பண்ணாத விசயமே இல்லை.பகுத்தறிவு பேசுவார்.பிரச்சனை வந்தா சித்தர்களை வழிபடுவார் யோகா,தியானம் செய்வார்.மனசுதான் கடவுள் என பினாத்துவார்.ஆனா இதை சொல்லிகிட்டே இவர் செய்ற சேட்டைகள் இருக்கே.குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை.வீட்டுக்கு போனா துக்கம்னு நண்பர்களெ கதின்னு இருப்பார்.

8 ல் ராகு;பொருளாதார ஏற்றதாழ்வு.போதுமான வருமானம் இன்மைமருத்து பேசுவதே மனைவியின் குணம்.உறவினர்,நண்பர்கள் உறவுகள் கெடும்.பேச்சு அந்த மாதிரி.மோசமான திசாபுத்தி நடந்தா கஷ்டம்,நஷ்டம் அதிகரிக்கும்.குறுக்கு வழியில் பணம் செரும்.

9ல் ராகு;மத நம்பிக்கைகளை மறந்தவர்.தகப்பன் சொல் கேளாதவர்.தகப்பன் வழி சொந்தம் எதிரி.ஜோசியம்,கடவுள் நம்பிக்கை கொண்டாரை கண்டால் எள்ளி நகையாடுவார்.மனைவி சொல்லுக்கு மகிமை உண்டு.முதலாளி ஆக முடியாது.ஆனாலும் நிலைக்காது.பிள்ளை பிறப்பது தாமதிக்கும்.5,9 கெட்ட்டிருந்தால் அதுவும் இல்லை.5 ஆம் இடம் நன்றாக இருந்தால் கூட பிள்ளை உண்டு.

10 ல் ராகு;பல தொழில் செய்யும் யோகம்.நிறைய பணம் சம்பாதிப்பார்.ராகு திசை வந்தால் செல்வந்தர் தான்.நுட்பமான வேலைகளில் இவர்கலை மிஞ்ச ஆள் இல்லை.சினிமா,டிவி ,என இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.கமிசன் தொழிலில் செமையாக சம்பாதிக்கிறார்கள்.ரியல் எஸ்டேட் பணம் குவியும்.பலர் குறுக்கு வழிதான்.பல தொழில் செய்வார்.அடிக்கடி தொழில் மாறுவார்.இருப்பினும் பணம் வந்துகொண்டே இருக்கும்.ராகு 10 ஆமிடம் தர்ம சிந்தனையை தருவார்.அன்ன சத்திரம் கட்டுதல்,கும்பாபிசேகம் செய்தல்,கைலாயம் யாத்திரை,சித்தர் ஜீவ சமாதி வழுபாடு,ஏழைகளுக்கு உதவுதல் என பெயர் சொல்லும் படி நடப்பர்.

11ல் ராகு;கண்டதை தின்றால் குண்டாகலாம்.கண்டதை கற்றவன் பண்டிதனா..? இவங்க அப்படித்தான்.எல்லா துறையையும் ஒரு கை பார்ப்பார்கள்.ஜாதகரின் அறிவாற்றல் நன்கு வெளிப்படும்.விவசாயம் விருத்திக்கும்.நடு ராத்திரியில் உதவின்னு கதவை தட்டினாக்கூட ஓடி வருவார்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.

12ல் ராகு;பாவ ராகுவால் சாபமே மிஞ்சும்.வாயக்கட்டி வயித்த கட்டி சம்பாதிச்சு வெச்சதெல்லாம் திசா புத்தி நடப்புக்கு வரும்போது எல்லாம் அம்பேல் ஆகும்.வாழ்வின் பெரும்பகுதி நஷ்டம்தான்.செலவுன்னா செலவு அப்படியொரு செலவு.யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காசை வீசுவார்கள்.பூர்வீக சொத்து இவர் பிறந்ததும் மறைந்துவிடும்.போதை வஸ்துக்கள் எல்லாம் அத்துபடி.குடும்ப வாழ்வு பாலைவனம்.ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்.
மேலும் வாசிக்க"ஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும் பாகம் 2"

Post Comment

Friday, 21 October 2011

தி.மு.க,காங்கிரஸ்,தே.மு.தி.க,பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி

தி.மு.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.அதுவும் தே.மு.தி.க அதிர்ச்சி தோல்வி..ராமதாஸ்,திருமாவளவ்ன் கட்சிகள் சைபர் மார்க் வாங்கியிருக்கின்றன..மக்கள் ஜயலலிதா பக்கமே என நிரூபித்து இருக்கும் இந்த தேர்தலில் ,கருணாநிதி மீது மக்கள் கோபம் இன்னும் தீரவில்லை போலும்.

நான் எழுதிய ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவை படிக்க;

மேலும் வாசிக்க"தி.மு.க,காங்கிரஸ்,தே.மு.தி.க,பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி"

Post Comment

விஜயகாந்த் கட்சிக்கு பட்டை நாமம்;ஆதரவு இழந்தது தே.மு.தி.க

விஜயகாந்த் கட்சிக்கு பட்டை நாமம்;உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்;
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் விஜயகாந்த் கட்சிக்கு நான்காம் இடம்தான் கிடைக்கும் போலிருக்கிறது.அனைத்து தொகுதிகளிலும் ஆமை போல இந்த ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தன் மகனை நடிகனாக்கி சம்பாதித்து கட்சி வளர்ப்பேன் என விஜயகாந்த் சொல்லியிருந்தார்.அவர் மகன் நடிக்க வந்துடுவாரோ என்ர பயத்தில் மக்கள் ஓட்டே போடவில்லையோ என்னவோ.


அனைத்து மாநகராட்சி தொகுதிகளிலும் அ.தி.மு.க புலிபபாய்சலில் முன்னிலை வகிக்கிறது..

நான் எழுதிய ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவை படிக்க;

பேருராட்சி இரண்டு கைப்பற்றியிருக்கிறது.ஆனால் இக்கட்சியை விட வாக்கு வங்கி குறைவாக உள்ள ம்.தி.மு.க 7 பேரூராட்சி தலைவர்களும்,பி.ஜே.பி 10 இடங்களும்,காங்கிரஸ் 10 இடங்களை கைப்பற்றியிருப்பதை பார்க்கும்போது விஜயகாந்த் கட்சிக்கு மக்களிடம் மவுசு குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.இதன்படி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக வீசப்பட்ட அலையிலேயே இவர் எதிர்கட்சி தலைவர் ஆனார் என்பது புரிந்துவிடும்.




சென்னையில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில் ஒரு இடம் கூட தே.மு.தி.க பெறவில்லை.

மதுரைக்காரண்டா என மார்தட்டிக்கொள்ளும் விஜயகாந்துக்கு மதுரையில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

விஜயகாந்த் ஜாதகம் பற்றி நான் எழுதியதை படிக்கவும்

மேலும் வாசிக்க"விஜயகாந்த் கட்சிக்கு பட்டை நாமம்;ஆதரவு இழந்தது தே.மு.தி.க"

Post Comment

சரித்திர சாதனை படைத்த ஜெயலலிதா;எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறியது

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வர தொடங்கிவிட்டன..பெரும்பாலான பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி தொகுதிகளில் அ.தி.மு.க வே முன்னிலை வகித்து வருகிறது...

ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் என்ற பதிவில் ,டிசம்பர் 26 வரை அவருக்குதான் வெற்றி என குறிப்பிட்டிருந்தேன்....அதனை படிக்க;


ஜெயலலிதா வின் வலுவான பிரச்சாரம்,முதல்வர் ஜெயலலிதா தவறு செய்தவர்களை கண்டு அஞ்சாமல் எடுக்கும் முடிவுகளை கண்டு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகுவதையே இது காட்டுகிறது.உண்மையை சொன்னால் இது மக்களாட்சி.சட்டசபை தேர்தல் தொடர்ந்து திருச்சி இடைதேர்தலில் கூட்டணி கட்சியினர் ஆதரவில்லாமல் அ.தி.மு.க சென்ற முறையை விட இருமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி கட்சியினர் ஆதரவு இல்லாமல் அசுர பலத்துடன் வெற்றி பெறுகிறது.இதன் மூலம் மக்கள் ஆதரவு பன்மடங்கு ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கிடைத்திருப்பது நிரூபனம் ஆகியிருக்கிறது.

அ.தி.மு.க வெற்றி சரித்திரம்;

மாநகராட்சிகள் 10 ஐயும் கைப்பற்றியது.

நகராட்சிகள்;89

பேருராட்சிகள்;284

இதுவரை சென்னை மாநக்ராட்சியை அ.தி.மு.க வெற்றி பெற முடியவில்லை.முதன்முறையாக அதை வென்றுள்ளது இம்முறைதான்.இதன் மூலம் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறியது.

அ.தி.மு.க பெற்ற வாக்குக்கும்,தி.மு.க பெற்ற வாக்குக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது.தே.மு.தி.க ,பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவே இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.



மேலும் வாசிக்க"சரித்திர சாதனை படைத்த ஜெயலலிதா;எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறியது"

Post Comment

Thursday, 20 October 2011

ஏழாம் அறிவு,மாற்றான் சூர்யா சொல்லும் புதிய தகவல்கள் 7 aam arivu

ஏழாம் அறிவு சூர்யா சொல்லும் புதிய தகவல்கள் surya

(ஆனந்த விகடன் 26.10.2011 ல் சூர்யா பகிர்ந்து கொண்ட தகவல்கள்)

ஏழாம் அறிவு எதிர்பார்ப்பு ஜூரம் கோலிவுட் தாண்டி பாலிவுட் வரை தகித்து கிடக்க..மாற்றான் சிந்தனையுடன் ரஷ்யா கிளம்பி கொண்டிருக்கிறார் சூர்யா!

ஏழாம் அறிவு மேக்கிங் பற்றி சொல்லுங்கள்..?

மேலும் வாசிக்க"ஏழாம் அறிவு,மாற்றான் சூர்யா சொல்லும் புதிய தகவல்கள் 7 aam arivu"

Post Comment

வேலாயுதம் விஜய் பேட்டி -ஆனந்தவிகடன் 26.10.2011

வேலாயுதம் விஜய் பேட்டி -ஆனந்தவிகடன் 26.10.2011


நம்ம படத்தை பத்தி நாமே பேசக்கூடாதுங்கண்ணா.இந்த படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குனர் ராஜாவுக்கு வரும்.பெரிய இயக்குனர்கள் இன்னும் என்னை நம்பி ஃபிக்ஸ் பண்ணுவாங்க..! கண்களில் தொக்கி நிற்கும் டிரேடு மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

மேலும் வாசிக்க"வேலாயுதம் விஜய் பேட்டி -ஆனந்தவிகடன் 26.10.2011"

Post Comment

ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்

ஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.


மேலும் வாசிக்க"ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்"

Post Comment

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய

விருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.

மேலும் வாசிக்க"ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future"

Post Comment

Wednesday, 19 October 2011

புனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க! star astrology

நட்சத்திரத்தின் தன்மை;

இந்த நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும்.சாத்வீக குணம் கொண்டது.பிறை போன்ற வடிமைப்பு கொண்டது.கூட்டமாக உள்ள இடத்தில் காணப்படும்.நாத பிந்து என்ரு அழைக்கப்படும் ஒலிகளின் கூட்டணியில் அமைச்சரை போல போற்றப்படும்.கடவுளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அமைப்பு கொண்டது.இதன் அதிபதி குரு பகவான் ஆவார்.கணம் தேவ கணமாகவும்,மிருகம் பெண் பூனையாகவும்,விருட்சம் மூங்கிலாகவும்,பட்சி அன்னமாகவும் அமையப்பெற்று காணப்படுகிறது.இவர் காது,தொண்டை,தோள்கள்,தோள் எலும்புகள் இவற்றை ஆளுகை செய்கிறார்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதலில் வரும்.அதனை அடுத்து மற்ற திசைகள் வரும்.ராமர் பிறந்த புன்ணிய நட்சத்திரம்.

மேலும் வாசிக்க"புனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க! star astrology"

Post Comment

Tuesday, 18 October 2011

தே.மு.தி.க உடையும்..? விஜயகாந்த் அதிர்ச்சி;ஜெயலலிதா மகிழ்ச்சி

விஜயகாந்த் அதிர்ச்சி;ஜெயலலிதா மகிழ்ச்சி

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் 10 எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க வில் சேரப்போவதாகவும்,விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை இழக்க போவதாகவும் இன்று காலை முதலே ஒரு செய்தி பரவி கொண்டிருக்கிறது.யார்னு பார்த்தா முத ஆளு நம்ம நக்கீரன்.இவர்தான்
மேலும் வாசிக்க"தே.மு.தி.க உடையும்..? விஜயகாந்த் அதிர்ச்சி;ஜெயலலிதா மகிழ்ச்சி"

Post Comment

புலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology

பாடல்;

கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம் 
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த
சிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக்கூறே.


மேலும் வாசிக்க"புலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்"

Post Comment

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra

சித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.

அன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..முதுமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.

அழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.

மேலும் வாசிக்க"ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology"

Post Comment

Monday, 17 October 2011

தமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்

தமிழ்மணம் கட்டண சேவை tamilmanam vs tamil bloggers part 2


தமிழ்மணம் நிர்வாகி என்ற பெயரில் பல வலைப்பதிவுகளில் வந்து அசிங்கமான எழுத்துக்களில்,மரியாதை இன்றி பின்னூட்டம் இட்ட பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.தமிழ்மணம் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்..இந்த நிமிடம் வரை தமிழ் மணத்தை தூக்கி எறிந்தவர்கள் ,மானஸ்தர்கள்,எண்ணிக்கை 25


தமிழ்மணம் கட்டண சேவை என்பது மற்ற திரட்டிகள் போல விளம்பரதாரர்களுக்கு அல்ல...இது பதிவர்களுக்கானது.எப்படியெனில் இவர்கள் விளம்பர கட்டண பிரிவு தொடங்கியதும் முதலில் தகவல் அனுப்பியது பதிவர்களுக்குதான்.எப்படி தெரியுமா.நாங்கள் கட்டண பிரிவை தொடங்கியிருக்கிறோம்.உங்கள் பதிவை நீங்கள் விரும்பினால் கட்டண பிரிவுக்கு மாற்றிக்கொள்ளலாம்...குறைந்த பட்ச கட்டணம் 5 டாலர்.அதிக பட்சம் 100 டாலர்.முன்பக்கம் நீல நிறத்தில் உங்கள் பதிவை தனித்து காட்ட,25 டாலர் கட்டணம்.என மெயில் அனுப்புகின்றனர்.எனக்கு இந்த மெயில் பலமுறை வந்தது.காரணம் நான் சோதிட பதிவுகள் எழுதுவதும் இல்லாமல்,அடிக்கடி பதிவு போடுவதால் இவர் ப்ளாக்கை கட்டண பிரிவுக்கு மாற்ற நிர்பந்தித்தால் மாற்றிக்கொள்வார் என்பதே காரணம்.நான் அதை கண்டுகொள்ளவே இல்லை.காரணம் கட்டண ஒஇரிவுக்கு மாற்றினாலும் நமக்கு ஒன்றும் பெரிய ஹிட்ஸ் கிடைக்காது என்பது ஒரு காரணம்.தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பகுதிக்கு என் பதிவுகள் உடனே வந்துவிடுவதும் ஒரு காரணம்.

என் ப்ளாக் திடீரென முடக்கப்பட்டது.என் ப்ளாக்கை யாரோ அழித்துவிட்டனர்.அதன் பின் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்து,பார்த்தபோது என் ப்ளாக் கட்டண சேவைக்கு மாறிவிட்டதாக செய்தி வந்தது.எப்படி நான் கேட்காமல் கட்டண பிரிவுக்கு மாறியது என யோசித்து ,அவர்களுக்கு மெயில் செய்தால்,இது தொழில் நுட்ப கோளாறு..சரி செய்கிறோம்..நீங்கள் கட்டண சேவைக்கு மாறிக்கொள்ளுங்களேன் ..இன்னும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும் என்றார்கள்.இல்லை.எனக்கு விருப்பம் இல்லை...என்னை தர்ம தரிசனம் பகுதியிலியே அனுமதியுங்கள் என கேட்டபின்,24 மணி நேரத்தில் என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிய ஆரம்பித்தது.

அதன் சில மாதம் கழித்து என் ப்ளாக் மீண்டும் முடக்கப்பட்டது..இந்த முறை என் மெயில் ஐடியையே தூக்கிவிட்டனர்...மறுபடி எல்லாம் சரி செய்து.,தமிழ்மணம் பட்டையை நிறுவினால் மீண்டும் கட்டண சேவை என பல்லிளித்தது.என்னடா..இவனுக தொழில் நுட்பம் த்தூ..என மறுபடி மெயில் செய்தால்..பழைய கேள்வி வரவில்லை....பதிலாக உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்..அல்லது கட்டண சேவைக்கு மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்...என மெயில் வந்தது..எனக்கு ஒரு எச்சரிக்கை மெயிலும் வரவில்லை.அவர்களாவே என்னை கட்டண சேவைக்கு மாற்றிவிட்டார்களாம்...அவர்களாகவே நீக்கிவிட்டார்கள்..இது சம்பந்தமாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை..அல்லது எச்சரிக்கையும் செய்யவில்லை...இவ்வளவு நாளாக சோதிடம் பதிவுகளை இணைத்துவிட்டு திடீரென ஜோசியம் ஆகாதுன்னா இத்தனை நாளா என்ன பண்ணினே...திடீரென விதிமுறை விதித்து,கட்டாயமாக திணித்து,அவர்களாகவே கட்டண சேவைக்கு மாற்றி..விரும்பினால் வா..இல்லைன்னா போ..என நடந்துகொள்வது சர்வாதிகாரம்தானே..காசி அவர்கள் தமிழ்மணத்தை துவக்கியதும்,பிற்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தலாம் என்பதற்காகவா..? அல்லது தமிழ் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடையவா..?

ஒரு தவறான பதிவு ஒரு பதிவர் எழுதுகிறார் என்றால்,அதை பர்றி அவர்தான் கவலைகொள்ள வேண்டும்.அல்லது ஆபாச பதிவு எனில் அனைவரும் குரல் கொடுத்து திரட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.சோதிடம் எழுதுபவனை நீக்குவோம்..என்றால் அதை நீ முழுமையாக செய்யவில்லையே..என்னை மட்டும்தான் நீக்கியிருக்கிறாய்...காப்பி பேஸ்ட் செய்பவர்களை நீக்குவோம் என்றால் குறைந்தது பத்து பேரையாவது நீக்கவேண்டும்..அதையும் செய்யவில்லை..ஒரு காப்பி பேஸ்ட் பதிவர்கள் கூட நீக்கப்படவில்லை..அப்படி நீங்கள் எத்தனை பேரை நீக்கினீர்கள்..அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி ஏன் பதிவிடவில்லை..? அப்போ இது ஏதேச்சதிகாரம்தானே..?

யாரையும் இவர்கள் நீக்கவில்லை..சிலரை பயமுறுத்தி கட்டாயமாக கட்டண சேவைக்கு மாற்றுகின்றனர்.அதற்கு முதல் பலிகடா நான்.எச்சரிக்கை மெயில் ஏன் செய்யவில்லை என நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.ஆத்திக பதிவை நீக்கினால் பெரியாருக்கு சொம்பு தூக்குபவனுக்கும் அங்கு வேலை இல்லையே..? அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

சோதிடம் வேண்டாம் எனில் ஜோசியத்தை கிண்டல் செய்பவனுக்கும் அங்கு வேலையில்லையே..?அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

காப்பி பேஸ்ட் பதிவு செய்பவர்களை கண்டால் மெயில் செய்யுங்கள் என்றீர்கள்.உடனே கப்சிப்புன்னு சிலர் மாறினர்.ஆனால் என் பதிவை மட்டும் முதலில் நீக்க காரணம் என்ன..? நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே..? முஸ்லீம் நண்பர்களுக்கும் இதே தான்..கட்டண சேவைக்கு மாற கட்டாயப்படுத்தி..விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்..

நான் இப்போது 25 டாலர் கட்டினாலும்,என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் பளிச்சிடும்.5000 ஹிட்ஸ் தினசரி கிடைக்கும் (அவர்கள் உறுதி கொடுக்கிறார்கள்) ஏனெனில் இன்னும் என் தமிழ்மணம் பாஸ்வேர்டு உயிரோடுதான் இருக்க்றது....இதுதான் இவர்களின் தொழில் நுட்பம்.

இவர்கள் தமிழ்மணம் கருவி பட்டை இருப்பதே அவ்வப்போது சிலரை கட்டண சேவை என மாற்றி காண்பிக்கத்தான்.புதிய பதிவர்கள் தினசரி இணைகிறார்கள்...நிறைய பேர் தங்கள் தொழில் சார்ந்து எழுதுகின்றனர்.அவர்களை குறிவைத்தே இவர்களின் இந்த புதிய கட்டாய கட்டணம் சேவை தொடங்கி இருக்கிறது...

இன்று தமிழ்மணம் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூட செய்ய கூடாது என்கின்றனர்.செய்தால் அந்த பதிவர்கள் நீக்கப்படுவார்களாம்...தமிழ்மணத்தை பற்றி எழுதப்பட்ட சில இடுகைகளில் வந்து பெயரிலி எனும் நாகரீகம் இல்லா மனிதன் இவர் முனைவராம்..(என்னய்யா.... நமீதா டீச்சர்கிட்ட ஆய்வு பண்ணி பட்டம் வாங்குனியா) கண்டபடி ஏசுகிறார்.தமிழ்மணம் இவரை அடியாள் வேலைக்கு வெச்சிருக்கும்போல...எங்கெல்லாம் நம்ம பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்களோ அங்கெல்லாம் போயி கழிஞ்சிட்டு வருவதுதான் இவர் வேலை.குட்.ஹல்லோ தமிழ்மணம் இந்தாளு குடுத்த காசுக்கு மேல கூவுறான்..நல்லா மீட்டருக்கு மேல..போட்டு கொடு..

தமிழ்மணம் என்னை என்ன நீக்குவது..என கொந்தளித்து பத்துக்கும் மேற்பட்ட பிரபல பதிவர்கள் தமிழ்மணத்தை தூக்கி கிடாசி இருக்கிறார்கள்.பதிவர்கள் மேல் தமிழ்மணம் நடத்தும் இந்த சர்வாதிகாரத்தை பல பிரபல பதிவர்கள்  சூ## பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..காரணம் இதான் நடுநிலையாம்..இப்படி இருந்துதாண்டா தமிழன் நாசமா போறான்!!
மேலும் வாசிக்க"தமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்"

Post Comment

Sunday, 16 October 2011

தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா?


தமிழ்வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா? tamil bloggers vs tamilmanam

தமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால் இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;


பதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது..? என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)

பெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)

அதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.

ஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..?

தமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..?

ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா? விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..?

எங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..? 


டெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்..? சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...

தமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..? 

வருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா..? நீ  இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..?

நான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு..? என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா..? தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..? 

டிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.
அதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..? 

என் பதிவுகளை இண்ட்லியில இணைச்சா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..?

என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...

தமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;


தமிழ்மணம் என்றதொரு சர்வாதிகாரம்.



தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!


தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!





மேலும் வாசிக்க"தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா?"

Post Comment

Saturday, 15 October 2011

ஜூனியர் விகடன் உள்ளாட்சி தேர்தல் சர்வே 19.10.2011

ஜூனியர் விகடன் உள்ளாட்சி தேர்தல் சர்வே 19.10.2011;

ஜூனியர்விகடன் உள்ளாட்சி தேர்தல் பற்றிய மக்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.நக்கீரன் பத்திரிக்கையும் சர்வே வெளியிட்டாலும் அத்தனையும் கட்டுகதை.அதனால் அதை எழுதவில்லை..ஜூவி ஓரளவு எதார்த்தமாக இருக்கிறது.

http://www.astrosuper.com


மேலும் வாசிக்க"ஜூனியர் விகடன் உள்ளாட்சி தேர்தல் சர்வே 19.10.2011"

Post Comment

Friday, 14 October 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo

(உத்திரம் 2 ஆம் பாதம் முதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)

கன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.


மேலும் வாசிக்க"ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி"

Post Comment

Thursday, 13 October 2011

வடிவேலு -ஆனந்த விகடன் பேட்டி 19.10.2011

உங்ககிட்ட இருக்குற சட்டை எல்லாம் சண்டையில கிழிஞ்சதுதானா..?

-எம்.கோபால்,மதனபுரம்



மேலும் வாசிக்க"வடிவேலு -ஆனந்த விகடன் பேட்டி 19.10.2011"

Post Comment

ஃபேஸ்புக் தொடர்பால் கணவனுக்கு துரோகம் செய்த தமிழ் பெண்ணின் கதை

ஃபேஸ்புக் தொடர்பால் கணவனுக்கு துரோகம் செய்த தமிழ் பெண்ணின் கதை;

தினத்தந்தி நாளிதழில் நேற்று முன் தினம் ஒரு பரபரப்பு செய்தி.மூணாறு பகுதியில் ஒரு லாட்ஜில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.அவள் கணவனே அவரை கொலை செய்ததாக போலீஸ் சந்தேகமடைந்து அவரை தேடி வந்தது.கணவன் ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர்.தலைமறைவாக இருந்தவர்,மனைவி மீது இருந்த காதலால்! மன உளைச்சல் தாங்காமல் இவரும் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்க்கு இவர் எழுதிய கடிதத்தில் என் மனைவி ஃபேஸ்புக் மூலம் ஒருவரை தொடர்பு கொண்டு பழகி வந்தார்.அவனும் பலமுறை என் மனைவி செல்ஃபோனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டும்,இரவு 10 மணிக்கு மேல் மிஸ்டு கால் கொடுப்பதுமாக இருந்தான்.ஒரு நாள் என் மனைவியை அவனுடைய நண்பர்கள் 3 பேருடன் வந்து என் மனைவியை கடத்தி சென்றான்.நான் தடுத்தேன்.அதற்கு என் மனைவி என்னுடன் வராதே என சொல்லிவிட்டு அவர்களுடன் ஒரு லாட்ஜில் 6 மணி நேரம் தங்கியிருந்தாள்.ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டதற்கு நான் திருந்திவிட்டேன் என சொன்னாள.அதன் பின் தமிழ் டிவி சீரியல் நகைச்சுவை நடிகருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது.அவனும் அவர் நண்ப்வர்களுக்கு என் மனைவியை காம விருந்து படைத்தான்....


என கடிதம் போய்க்கொண்டே இருக்கிறது..இன்னொரு கடிதத்தில் படித்த பெண்கள் பற்றிய அவனுடைய பார்வை அதிர்ச்சி தருகிறது.;


 மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?... படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது. படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் சாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், 


மேலும் கடிதம் படிக்க க்ளிக் செய்க;



ஃபேஸ்புக் தொடர்பால் சீர்ழிந்த இந்த பெண்ணால் ஒரு அப்பாவி ஆணும்!(கொலைகாரன் தான் ஆனாலும் திருந்துவா னு நம்பினானே அதான் அப்பாவி) உயிரிழிந்தான்.அப்போதே அவளை விட்டுவிட்டு வந்திருந்தால் பரவாயில்லை.அவள் திருந்திவிட்டாள்.அதனால் அவள் செய்த தப்பை மன்னித்தேன்..மீண்டும் அதே தப்பை செய்தாள் கொன்றுவிட்டேன்..என எழுதியிருக்கிறான்.அவளுக்கு உடல் பசி.இவனுக்கு அவள் மீது காதல் பசி.உண்மையான அன்பும்,காம வெறியும் எப்படி சேர்ந்து வாழ இயலும்..?


அந்த பெண் ஜாதகத்தில் சுக்கிரன்,சனி,ராகு சேர்க்கை இருக்கும்போல.....திருமண பொருத்தம் பார்க்கும்போது ஒரு பெண்ணின் சுக ஸ்தானமாகிய லக்கினத்திற்கு நான்காம் இடத்தையும்,களத்திர ஸ்தானத்தையும்,சயன ஸ்தானத்தையும் சுக்கிரன்,குரு அமைப்பையும் கவனித்து திருமணம் செய்யுங்கள்...காதலித்தாலும் ஒரு முறை ஆய்வு செய்து கொள்வது நல்லது.

ஆசை அறுபது நாள்..மோகம் 30 நாள் என நம் பெரியோர் சொன்னது நினைவுக்கு வருகிறது.6 மாசம் காதலிப்பார்கள்...ஒரு மாதம் நன்கு அனுபவித்து ஆசை தீர்ந்ததும் எலியும்,பூனையுமாக ஈகோ சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து விடுவர்.இதுவே இன்றைய நிலை.உன் விசயத்தில் நான் தலையிட மாட்டேன்..என் விசயத்தில் நீ தலையிடாதே என்ற ஒப்பந்த அடிப்படையில் தான் பலகுடும்ப வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது...
மேலும் வாசிக்க"ஃபேஸ்புக் தொடர்பால் கணவனுக்கு துரோகம் செய்த தமிழ் பெண்ணின் கதை"

Post Comment

Wednesday, 12 October 2011

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;


உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.

குரு வகரம்னா என்ன..? குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.

ஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே...? அந்த வகையில் தன் வெற்றி இமாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....
மேலும் வாசிக்க"ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்"

Post Comment

அம்மாவை மிரள வைத்த அண்ணி

அம்மாவை மிரள வைத்த அண்ணி;

போன ஆட்சியைவிட இந்த ஆட்சி சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசம் என ஊட்டியில் அனல் முழங்க பேசியிருக்கிறார் விஜயகாந்த் கட்சி ஓனர் பிரேமலதா.தே.மு.தி.க வினர், அண்ணியின் இந்த பேச்சைக்கண்டு ஜெர்க் ஆகி கிடக்கின்றனர்.அண்ணி இப்படி பேசிட்டு போயிரும்.எலெக்சன் முடிஞ்சதும் போலீஸ் விட்டு அந்தம்மா ஒவ்வொரு விஜயகாந்த் கட்சிக்காரனையும் பிதுக்கி எடுக்க போகுது பாரு..என புலம்புகின்றனர்.9 சதவீத ஓட்டு வைத்திருக்கும்...விஜயகாந்த் 40 சதவீத ஓட்டு வங்கி வைத்திருக்கும் அ.தி.மு.க வை ஜெயிக்க முடியும் என எப்படி நம்புகிறார்....? 

அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என முழக்கமிடும் தே.மு.தி.க கட்சி ஓனர்,அதை தட்டி கேட்கமுடியாமல், பம்மி கிடந்த எதிர்கட்சி தலைவர் முகத்திரையையும் கிழித்திருக்கலாமே..?

முதல்வர் தனக்கு சமமான கலைஞர்க்கு மட்டுமே பதில் சொல்கிறார்.அதுவும் சில சமயம் புறக்கணிப்புதான்.விஜயகாந்த் மற்றும் அவர் ஓனருக்கு ஒட்டுமொத்த புறக்கணிப்புதான்.தேர்தல் முடிந்ததும் தி.மு.க வினர் கைது ஆகிறார்களோ இல்லையோ தே.மு.தி.கவினர் அடக்கி வைக்கப்படுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
----------------------------------------------------------
ரஜினி-ஷாருக்கான் சந்திப்பு;

http://www.astrosuper.com

ரா ஒன் படத்துக்காக ரஜினி கெளரவ வேடத்தில் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்க ரஜினியை சந்தித்தார் ஷாரூக்;

ரஜினி முகத்தில் எவ்வளவு தேஜஸ் பாருங்க....

ராஒன் படம் பத்தி டிவிட்டரில் ஒருவர் அடித்த கமெண்ட் ;

ஏம்பா நம்ம தலைவர் ரஜினி நடிக்கும் படம், ரா ஒன்னில் ஷாரூக் ரெண்டு மணி நேரம் வர்றாராமே..?

செம கிண்டல்.....

------------------------
நேரு விடுதலை ஆனதும் ஸ்டாலின் விட்ட கமெண்ட்;ஜெயலலிதா நேருவை கண்டு அஞ்சி நடுங்கி விடுதலை செய்து விட்டார்..

அதற்கு நேரு என்ன சொன்னாராம் தெரியுமா.?(நான் டிவிட்டரில் எழுதியது..).

தம்பி..நீ ஆணியே புடுங்க வேணாம்..சும்மா இருக்கியா...

----------------------
இந்திய வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும்,இண்டி ப்ளாக்கர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தமிழ் ப்ளாக்கர்களுக்கு எப்படி உதவலாம் என ஒரு போர்டு வைக்கப்பட்டதாம்.அதை கேபிள் சங்கர் வன்மையாக கண்டித்து போராடி இருக்கிறார்.தமிழ் ப்ளாக்கர்கள் ஆங்கில வலைப்பதிவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.தமிழ் வலைப்பதிவர்களில் முதல் இடத்தில் இருக்கும் அவருக்கு மதிப்பளித்து வருத்தம் தெரிவித்தது இண்டி ப்ளாக்கர்.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஆட்சென்ஸ் கூகிள் ஒதுக்கீடு செய்யட்டும்.அப்புறம் தெரியும் தமிழ் வலைப்பதிவன் யார்னு.

-------------------------------------

மேலும் வாசிக்க"அம்மாவை மிரள வைத்த அண்ணி"

Post Comment

Tuesday, 11 October 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;

யாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)

பூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.

மேலும் வாசிக்க"2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo"

Post Comment

2012 எண்கணித பலன்கள் astro numerology

2012 எண்கணித பலன்கள் astro numerology;

எண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.


1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.

மேலும் வாசிக்க"2012 எண்கணித பலன்கள் astro numerology"

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner