Saturday, 31 December 2011

சசிகலா மற்றும் அவர் குடும்பத்தார் கைது..? ஜெயலலிதா அதிரடி

சசிகலா மற்றும் அவர் குடும்பத்தார் கைது..? ஜெயலலிதா அதிரடி


சசிகலா ;உடன்பிறவா சகோதரி,ஜெயலலிதா வின் உயிர்த் தோழி என்றெல்லாம் மீடியாக்கள் கொடுத்த வெளிச்சத்தில் பல வருடங்கள் மின்னிய விளக்கு.

மீடியாக்கள் கொடுத்த பில்டப்பால் சசிகலா சின்ன மேடம் ஆனார்.அவர்கிட்ட போனா எல்லாக் காரியமும் கச்சிதமா நடக்கும் என அ.தி.மு.க வினர் மத்தியில் ஒரு பிம்பம் உண்டானது..அது நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக மாறிப் போனது...

இன்று,தன் வீட்டில் மிக சாதரணமாக அவரை வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா.காரணம் சசிகலா பெயரை சொல்லி அவரது உறவினர்கள் அடித்த கொள்ளைதான்!

இன்று ஜெயலலிதா கட்டம் கட்டி துரத்தப்பட்டு,அவர்கள் வீடுகளிலும் அறிவிப்பு இல்லாத ரெய்டு,விசாரணை என அதகளமாகி வருகிறது மன்னார்குடி மாஃபியா.

நேற்று பரபரப்புடன் நடந்த அ.தி.மு.க செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் என்ன சொல்வாரோ,யாரெல்லாம் இன்னும் வெளியே போகப் போகிறார்களோ என மந்திரிகள் முதல் தொண்டர்கள் வரை திகில் அடைந்து கிடந்தார்கள்.நாளை நமதே..செங்கோட்டையில் நம் கொடி பறக்க வேண்டும் என சூளுரைத்து அ.தி.மு.க தொண்டர்களை உற்சாகபடுத்தியிருக்கிறார் புரட்சித் தலைவி...அவர் நிச்சயம் சொன்னதை செய்வார்...குறிக்கோளையும் அடைவார்.அதில் சந்தேகம் இல்லை.ஆனா சசிகலா மேட்டர் வேறு எதுவும் கிடைக்கலையே என நினைத்தனர் பலர்...ஆனால் தற்போதைய நிலவரப்படி..சசிகலா வை விட்டுவிட்டு மீதியுள்ள அனைத்து மன்னார்குடி உறவுகளையும் சிறைக்கு அனுப்பபோகிறார் முதல்வர்.ரைய்டு மூலம் பல ஆவணங்கள்,கோடிக்கணக்கான பணம் கைப்பற்று விட்டன...சொத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன..இன்னும் சில வேலைகள் முடிந்ததும்..தி.மு.க முன்னாள் மந்திரிகளை போல மன்னார் குடி மாஃபியா கம்பி எண்ண வேண்டியதுதானாம்!!

இதையும் படிங்க;பேஸ்புக் கில் நிறைய நண்பர்களை சேர்ப்பது எப்படி..?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மேலும் வாசிக்க"சசிகலா மற்றும் அவர் குடும்பத்தார் கைது..? ஜெயலலிதா அதிரடி"

Post Comment

Friday, 30 December 2011

பேஸ்புக் ல் நிறைய நண்பர்களை சேர்ப்பது எப்படி..?

பேஸ்புக் ல் நிறைய நண்பர்களை சேர்ப்பது எப்படி..?


பேஸ்புக் எனும் சமூக இணைய தளத்தில் தமிழர்களின் எழுச்சி அதிகரிக்க தொடங்கி விட்டது..நிறைய நன்பர்களை ஃபேஸ்புக் மூலம் மிக விரைவில் பெற முடிகிரது...நம் பதிவுகள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தாலும் நல்ல ஹிட்ஸ் கிடைக்கிறது..நாம் எழுதும் கருத்துக்கு உடனடி பலன் சில நிமிடங்களில் கிடைப்பது இதன் அசுர பலம்.உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய திரட்டி தமிழில் எதுவென்று கேட்டால் ஃபேஸ்புக்தான்.ஏன் டிவிட்டர் இல்லையா.இருக்கிறது..ஆனா ஃபேஸ்புக் அளவு திருப்தி இல்லை.நான் ஏற்கனவே எழுதிய புதிய பதிவர்கள் பிரபலமடைய சில குறுக்கு வழிகள் போன்ற மகா காவியத்தை!  செம ஹிட்டாக்கிய நண்பர்களுக்கு இந்த குறிப்புகள் சமர்ப்பணம்.(அந்த பதிவுகள் இப்போ இல்லை...ஹேக் செய்யப்பட்ட என் பழைய ப்ளாக்கோடு மூழ்கி விட்டது)

பேஸ்புக்கில் என் முகவரி;sathishkumar jothidar   ..............சும்மா ..விளம்பரம்;-))

பேஸ்புக் தளத்தில் இணைந்து விட்டேன்..நண்பர்களை அதிகம் சேர்க்க என்ன வழி எனக் கேட்கும் புதியவர்களுக்காக சில டிப்ஸ்;

1.நாம எதுக்கு குறுக்கு வழியில போய்,நிறைய நண்பர்களை சேர்க்கணும்..நாம நல்லா எழுதுனா நிறைய பேர் நண்பர்களா சேர்வாங்களே என கேட்பவரா நீங்கள்..? நீங்க அவ்ளோ நல்லவரா...? இது நானா சேர்த்த கூட்டம் இல்ல...தானா செர்ந்த கூட்டம்னு மார் தட்டிக்க விரும்புறவங்க எஸ்கேப் ஆகிடுங்க...ஃபேஸ்புக்கில் பாப்புலர் ஆக விரும்புறவங்க,அதை புரிஞ்சிக்க நினைக்கிறவங்க.. மேற்க்கொண்டு படிங்க..!

http://www.astrosuper.com  நல்ல நேரம் 
2.நண்பர்களை நிறைய சேருங்கள்..முதலில் அதிகம் ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களை பார்த்து அவர்களுடன் இணையுங்கள்..அவர்கள் எழுதும் ஒவ்வொரு ஸ்டேட்டஸிலும்,லைக் கமெண்ட் போடுங்க..! பெண் பதிவர்களா தேடி தேடி நண்பர்களா இணையாம (ஹிஹி..) என்னை மாதிரி நல்ல பதிவர்கள் (ஹிஹி) சமூக ஆர்வலர்கள்,சினிமா சம்பந்தபட்டவர்கள்,பிரபலங்களை முதலில் இணைத்துக்கொள்ளுங்கள்...

3.திரிஷா,சிம்பு,ஜோதிகா,சூர்யா எல்லாம் பதிவு போட்டதும் 1000 ல் ஒருவராக போய் உடனே ஒரு லைக் போட்ருங்க...ஒரு கமெண்டையும் தட்டி விடுங்க...உதாரணமா அவங்க happy new year 2012 சொன்னா சேம் டூ யூ ந்னு கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி கரைச்சிட்டு வாங்க..அவங்க உங்களை கண்டுக்க போறதில்லை.ஆனா சில நன்பர்கள் உங்களுடன் இணைய வாய்ப்புண்டு..அதுக்காக எல்லா ஸ்டேட்டஸையும் லைக் அடிச்சிகிட்டே இருந்தா ஓவரா போயிரும்...ஒரேடியா பேஸ்புக்கில் மூழ்கி கிடக்கவும் வேணாம்..அதை வருசம் ஒரு தடவ எட்டி பார்க்கவும் வேணாம்...!
http;//www.astrosuper.com
4.தினசரி காலை,மதியம்,இரவு ஒரு கமெண்ட் உங்க முக நூலில் எழுதி வாருங்கள்...ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவு எழுதுவது உங்க சாமர்த்தியம்...ரசிக்கிற மாதிரி இருந்தா ஹிட்ஸ் கட்டி ஏறும்! லைக் கிடைக்க கிடைக்க நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும்...

5.அதிக பட்சம் 5000 நண்பர்கள் வரைதான் பேஸ்புக் அனுமதி தருகிரது..அனால் நீங்கள் மூன்று பேஸ்புக் பக்கம் வரை வைத்துக் கொள்ளலாம்..குழுமம் வைத்துக்கொள்ளலாம்..இந்த எளனியில தண்ணி வல்லீங்க...என்னும் பெயரில் எல்லாம் குழுமம் இருக்கு..சாதி சங்கம்..மத சங்கம்..கட்சி குழுமம்...அம்மா குழுமம்..அய்யா குழுமம் எல்லாம் உண்டு..சண்டை,மோதல் கரை புரண்டு ஓடும் இடம்..ரத்த பூமியாக இருக்கும்..!

பொழுது போக்குக்கு பஞ்சம் இல்லை...உதாரணமா, .கருணாநிதி பொதுவாழ்வில் 70 வருடங்களை கடந்தும் இன்னும் மக்களுக்காகவே உழைக்கிறார் ..டைப் காமெடியெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்..சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துரும்!

-இன்னும் இருக்கு


மேலும் வாசிக்க"பேஸ்புக் ல் நிறைய நண்பர்களை சேர்ப்பது எப்படி..?"

Post Comment

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்


மீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.

அதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.

இவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.

அஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year!!



மேலும் வாசிக்க"2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்"

Post Comment

Thursday, 29 December 2011

விஜயகாந்த் கதறல்;ஸ்டாலின் ஓய்வு;கனிமொழி உற்சாகம்

விஜயகாந்த் கதறல்;ஸ்டாலின் ஓய்வு;கனிமொழி உற்சாகம்


என்ன செய்றதுன்னு தெரியாத கையறுந்த நிலை..போகும் பாதை தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் சிக்கித் திணறுவது போன்றவற்றுக்கு யாரை உதாரணம் சொல்லலாம் என்றால் இதோ நானிருக்கிறேன் என வந்து நிற்கிறார் விஜயகாந்த்.

கறுப்பு சட்டை காவல்காரன் ரேஞ்சுக்கு பிரதமருக்கு கறுப்பு சட்டை அணிந்து போர்க்கோலம் பூண்ட விஜயகாந்த்,அடுத்து என்ன செய்வது என 10 வது பீரை குடித்தும் புரிபடாததால் படுத்து தூங்கிவிடுகிறாராம்..இப்படியே அஞ்சு வருசத்துக்கு எத்தனை பாட்டிலை காலி பண்ணுவாரோ கொடுமைடா சாமி என அவருக்கு சைடிஷ் வறுவல் செய்தே நொந்து நூலாகிறார் பிரேமலதா விசயகாந்த்.

மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்தால்தான் எந்த கட்சியும் வளர முடியும்.விஜயகாந்த் அந்த வாய்ப்பை நழுவ விட்டு பல மாதங்கள் ஆகிறது.அதற்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் படு சூடாக பதிலடியும் கொடுத்தார்கள்.முல்லைப் பெரியாறு விசயத்தில் மக்களை தூண்டாமல் சட்டம் ஒழுங்கை காத்து,சுப்ரீம் கோர்ட் நம் பக்கம் தீர்ப்பு தரும் நாள் நோக்கி காத்திருக்கிறார் ஜெயலலிதா.உணர்ச்சி பொங்க பேசியும் அழுதும் மக்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டுள்ளார் வைகோ.ஆனால் விஜயகாந்த் சம்பிரதாய போராட்டங்களை நடத்தி தி.மு.க வை போலவே செயல்படுகிறார்.கொஞ்சம் நஞ்சம் இருக்கும் செல்வாக்கும் சரிகிறது கேப்டன்.சரக்கை கவிழ்க்காமல் மக்களுடன் களத்தில் இறங்குங்கள்.!

சென்னை ரோடுகள் அடிக்கடி மக்கர் ஆவதை நிரந்தரமாக தடுக்க ப்ளாஸ்டிக் கழிவுகளை தாருடன் கலந்து ரோடு போடும் புது திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் சென்னை மேயர் சைதை துரை சாமி.விரைவில் செயல்படப்போகும் இந்த திட்டம் நிரந்தரமாக அவர் பெயரை சொல்லும்.இப்பதான் திங்க் பண்ற மேயர் கிடைச்சிருக்கார்.

ஸ்டாலின் உடல்நிலைக் கோளாறு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.தமிழ்கம் முழுக்க பிரச்சாரம் அலைச்சலாலும்,,சிறை சிறையாக சென்று தி.மு.க அமைச்சர்களுக்கு தெம்பு கொடுத்ததாலும், இப்போது தெம்பில்லாமல் இருக்கும் அவர் விரைவில் பூரண குணமாக வேண்டும்.ஆனால் இதை சாக்காக வைத்துக் கொண்டு கனிமொழி தரப்பு சுறு சுறுப்பாகி விட்டதாம்.விரைவில் தமிழக முக்கிய நகரங்களில் இலக்கிய கூட்டங்களில் பங்கேற்பாராம்...தொண்டர்களை நேரடியாக சந்திப்பதன் மூலமும் தமிழகம் முழுக்க அடிக்கடி சுற்றுப்பயணம் செய்தும்,அடிக்கடி போராட்டங்களில் கலந்து கொண்டும்..தி.மு.க வில் வேகமாக உசரப்போகிறார் என்கிறார்கள்...ஸ்பெக்ட்ரம் வழக்கு கனிமொழிக்கு பெரும் கறை. அதனால் அவர் சுற்றுப்பயனம் செல்லாமல் இருப்பதே நல்லது என ஸ்டாலின் தரப்பு கட்டையை போட்டதும், பொங்கியெழுந்த கனிமொழி தரப்பு,பிரதமருடன் கலைஞர் சந்திக்கும்போது முக்கிய தலைவர் போல் உடன் சென்று தன் கெத்தை காட்டினார்...ஸ்டாலின் போவதுதானே பொருத்தம்..? அப்ப என்ன ரீல் அங்க ஓடிக்கிட்டு இருக்கு..? புரிஞ்சிருக்குமே..?


மேலும் வாசிக்க"விஜயகாந்த் கதறல்;ஸ்டாலின் ஓய்வு;கனிமொழி உற்சாகம்"

Post Comment

Wednesday, 28 December 2011

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?


ஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..

லக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாது!படிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.

அதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்காரர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மனுசன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.

முகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்..? ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..

ஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்!

சனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது!! அனைவருக்கும் மிக்க நன்றி!
மேலும் வாசிக்க"முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?"

Post Comment

Sunday, 25 December 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்

2012 புத்தாண்டு பலன்கள் -கும்பம்


கும்பம்..ராசியின் அதிபதி சனி .ஆண் ராசி.ஸ்திர ராசி.மனித உடலில் கணுக்காலை குறிக்கும்.இது குட்டை ராசி.இதன் நிறம் பழுப்பு.பகலில் அதிக வலிமை உள்ள ராசி.இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை.கோவில் கோபுரம் போலவும் ,கும்ப கலசம் போன்றும் தோற்றம் உடையது.

 இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.ஜாதகம் வலு இல்லாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு.சனிக்குண்டான தடங்கல்களும் அதிகம் உண்டு.குமப்த்துக்கு பூரண கும்பம் படம் போடப்பட்டிருக்கும்.இவர்கள் மங்களகரமானவர்கள் என்பதாலோ என்னவோ பல கோவில் விசேஷங்களிலும் இவர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும்.உற்சாகம் வந்தால் எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள்.பயன்கருதா தொண்டுள்ளம் கொண்டவர்கள்.

சனி இதுவரை அஷ்டம சனியாக இரண்டரை வருடம் பல கஷ்டங்களை கொடுத்து வந்தது.இனி துன்பமில்லை.தோல்வி இல்லை.தடங்கலும் இல்லை.மர்த்துவ செலவுகள் நீங்கும்.புதிய உற்சாகத்தை தொழிலில் அடைவீர்கள்.வருமானம் கூடும்.தொழில் சுறுசுறுப்படையும்.

இன்று முதல் குரு வக்ரமும் நிவர்த்தியாவதால் இனி பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.உறவினர் பகை அகலும்.குழந்தைகளால் உண்டான கவலைகள் தீரும்.பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும்.புதிய சொத்து சேர்க்கைகள்,தொழிலில் புதிய நல்ல மாற்றம் உண்டாகும்.

குரு வக்ர நிவர்த்தியானால் ராசிக்கு மூன்றில் தான் பலனை கொடுப்பார் என்றாலும் உங்கள் ராசிக்கு தனக்காரகன் வக்ர நிவர்த்தியாவது நல்லதுதான்.

2012 சனி பகவான் அருளால் சிறப்பான பலன்களை அடைவீர்கள்.

 உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை,தற்போது நடக்கும் திசை இவை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்


மேலும் வாசிக்க"2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்"

Post Comment

Friday, 23 December 2011

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில்..உண்மை நிலவரம்

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில்..உண்மை நிலவரம்;


இருதயம் சம்பந்தமான பிரச்சினை காரணமாக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் ஏற்கனவே ஒரிரு முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.இப்போது அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆக காரணம் ஜெயலலிதா ஸ்டாலினுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிவிட்டார் ..எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பயம்தான் காரணம் என சொல்லப்படுகிறது.நாளை அமாவாசை.அனுமன் ஜெயந்தி வேறு,ஜெயலலிதா ஸ்டாலினை கைது செய்ய குறித்த நாளும் அதுதான் என்றும் சொல்கிறார்கள்.சனிப் பெயர்ச்சி ஸ்டாலினுக்கும் அவர் மகனுக்கும் சாதகமாக இல்லையோ என்ற கருத்தையும் தவிர்க்க முடியவில்லை.

சசிகலாவையே கழட்டி விட துணிந்தவர் ஜெயலலிதா.ஸ்டாலினை கைது செய்ய தயங்கவா போகிறார்...? எதுவும் நடக்கலாம்..!




மேலும் வாசிக்க"மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில்..உண்மை நிலவரம்"

Post Comment

விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு

விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு

ஆனந்த விகடன் பேட்டியில்தான் சிம்பு இப்படி சொல்லியிருக்கிறார்.விஜய் எல்லாம் மாஸ் நடிப்பை விட்டு இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நண்பன் படத்தில் நடிக்கிறார்.நீங்க ஒஸ்தியில இப்படி மாஸ் ஹீரோவா பழையபடி நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே..விண்ணை தாண்டி வருவாயா படத்துல நடிச்ச மாதிரி சாஃப்டா நடிக்கலாமே ..? என கேட்டதற்கு சிம்பு இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.

விஜய் மாஸ் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு நண்பனில் சாஃப்டாக நடிக்கிறார்.நான் சாஃப்டாக நடிப்பதை விட்டுவிட்டு மாஸ் ஹீரோவாகிட்டேன்.அவர் அங்க போயிட்டார்.நான் இங்க வந்துவிட்டேன்..!

அதாவது விஜய் இடத்துக்கு இவர் வந்துட்டாராம்...ம்..ஒஸ்தியில பத்து கோடி ரூபா நஷ்டம் ஆகிட்டு அப்பா புலம்பிகிட்டு இருக்கார்.,அவர் கண்ல பட்டுடாதீங்க..சிம்பு!

மங்காத்தா படத்தில் அஜீத் அறிமுகம் ஆகிற ஜீப் சீனை ஒஸ்தியில் படமாக்கிய எஸ்.டி.ஆர் தீவிர அஜித் ரசிகர் என்பது தெரிந்ததே.முன்பு இவர் ரஜினி ரசிகராக இருந்தார்.இப்போது விஜய் மீது இன்னும் கொஞ்சம் கொளுத்திப்போடலாம் என்று ,2011 ஆண்டின் சிறந்த படம் மங்காத்தா தான்.அதுக்கு அடுத்து காஞ்சனா அப்புறம் வேலாயுதம் என சொல்லியிருக்கிறார்.

மேட்டர் என்னன்னா தனுஷ் தான் தனக்கு போட்டியாளர்னு சொல்றாங்க.அஜீத்,விஜய் லெவெலுக்கு தன்னை மீடியாக்கள் உயர்த்த மாட்டேங்குதே என்ற கடுப்பில்தான் சிம்பு இப்படியெல்லாம் தத்துவம் பொழிகிறாரா என்னவோ.
மேலும் வாசிக்க"விஜய் இடத்தை பிடித்து விட்டேன் -சிம்பு"

Post Comment

Thursday, 22 December 2011

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி



’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..?’’

‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’

இதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.

இதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.

வீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..?

தலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.

நல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா..? டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.

நல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா..? சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..? அதுவும் எத்தனை நாளைக்கு..?

ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.

என்ன சார் சொல்றிங்க..? 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..?

ஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..?

நான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.

ஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்

ஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.

அதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.

இவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..

மேலும் வாசிக்க"திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி"

Post Comment

Wednesday, 21 December 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.

மேலும் வாசிக்க"சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்"

Post Comment

Tuesday, 20 December 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை)


சனிப்பெயர்ச்சி இன்று 21.12.2011 காலை திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திலும்,அனைத்து சிவாலயங்களிலும், சிறப்புற கொண்டாடப்பட்டது.சனிபகவான் தரிசனம் செய்ய,லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குளத்தில் நீராடினர்.இன்னும் ஒரு வாரம் வரை அக்குளத்திலும் கருவறையிலும் சனி கிரகத்தின் கதிர் அலைகள் நிரம்ப காணப்படும் .ஒரு வாரம் வரை வழிபடலாம்..நம் முன்னோர்கள் சனியின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க .மிக நுணுக்கமுடன் அமைக்கப்பட்ட கோயில்தான் திருநள்ளாரு.ஒருவர் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.சனிபகவான் நீதி தவறாதவர்.சனி பகவான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண ஆயுள்,பூரண உடல்நலம்,மனநலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன்..

சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இதன் மூலம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்;

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழரை சனியாக கடந்த ஏழரை வருடங்களாக ஆட்டுவித்த சனி பகவான் இப்போது முற்றிலும் விலகிவிட்டார்.இதுவரை தொழில் தடை,விபத்து,குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு,கடன் தொல்லை,இடமாற்றம் என அனுபவித்து மன உளைச்சலில் இருந்து வந்தீர்கள்..குடும்பத்தினருடன் வாகுவாதம்,நிம்மதியின்மை என இருந்துவந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியை தரும்....

பொதுவாக சிம்மம் ராசிக்கு சனி அதிக பாதிப்புகளை தரக்கூடியவர்.ஆனால் சனி விலகும் போது அதிக நன்மைகளையும் அந்தந்த ஜாதகத்தின் யோக திசாபுத்தி அடிப்படையில் கொடுத்துவிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கின்றன..திசையும் வலிமையாக இருப்பதால் தமிழ்க முதல்வர் ஆனார்.உங்களுக்கு திசா புத்தி பலவீனமாக இருந்தால்..பாதிப்பு முழுமையாக விலகாது.அதே சமயம் பாதிப்புகள்,தடைகள்,தோல்விகள் போன வருடம் போல் இருக்காது...

தொழில் இனி நல்ல வளர்ச்சியை அடையும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.இதுவரை பல டாக்டர்களையும் பார்த்தும் குணமாகாத நோயும் இனி குணமாகும்..அலைச்சல்கள் குறையும்.தொட்ட காரியங்கள் இனி துலங்கும்.உறவினர்களால் ஏற்பட்ட கசப்பனுபவங்கள் மாறும்.அவர்களே உங்களை நாடி வருவர்.மனைவி,கணவன் உறவு சீராகும்..உங்கள் எதிரிகள் அகலுவர்.இதுவரை உங்கள் கண்ணை மறைத்து வந்த ,உங்கள் முன்னேற்றத்துக்குஉங்கள் பலவீனங்களை நீங்கள் அறீவீர்கள்.களைவீர்கள்.

சனிபார்வை 5,9,12 ஆம் இடங்களில் விழுவதால் பிள்ளைகளாலும்,பெற்றோர்களாலும் ஆதாயம் கூடி வரும்..குடும்பத்திற்கு தேவையான பொருட்களோ,மனை,வீடு கட்டும்,வாங்கும் யோகமோ கூடிவரும்..திருமண முயற்சிகள் கைகூடும்.

சனி வக்ரம்;27.3.2012 முதல் 11.9.2012 வரை சனி வக்ரம் பெற்று மீண்டும் கன்னிக்கு பின்னோக்கி வருகிறார் சனி.இக்காலத்தில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

யாருக்கும் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினம்.தொழிலில் கவனம் தேவை.பேச்சால் பல பிரச்சினைகள் உருவாகும் காலம்.கவனம்..பண நஷ்டம் உண்டாகும் காலம் இது.எச்சரிக்கை.இந்த 6 மாதமும் கவனமுடன் செயல்படுங்கள்.

சனி உங்கள் ராசியை விட்டு அகன்று விட்டாலும் இனி வரும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலங்கள்;அதாவது மாறிய சனி உங்கள் ராசியை பார்த்து மீண்டும் முறைக்கும் காலங்கள்;

15.2.2012 முதல் 2.8.2012 வரை
26.3.2013 முதல் 15.8.2013 வரை
10.4.2014 முதல் 28.8.2014 வரை..

இக்காலம் உங்கள் ராசிப்படி சிறப்பான காலம் அல்ல.எனவே கவனம் தேவை.

சனியின் கிரக சஞ்சாரம்; (பொதுவானது) நந்தன வருடம் ஆரம்பம் முதல் வைகாசி 5 வரை துலாத்திலும்,பின்னர் ஆடி 17 வரை வக்ர சஞ்சாரமாக கன்னியிலும் பின்னர் வருடம் முடிய துலாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்...இக்காலகட்டத்தில் கலைகள் அபிவிருத்தியாகும்.தொழில் வியாபாரங்கள் மேன்மை அடையும்.அரசு வழி ஆதரவுகள் அதிகம் மக்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்;உங்க ராசிக்கு முருகன் வழிபாடும்,ஆஞ்சநேயர் வழிபாடும் மிக உன்னத பலன்களை தரும்.ஏழரை சனி முடிஞ்சிட்டதால சனி பகவானை கண்டுக்க கூடாதுன்னு இல்ல.போய் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்..திருநள்ளாறு செம கூட்டமா இருக்கும்.பெயர்ச்சியாகும் அன்னிக்கே போகணும்னு இல்ல.இன்னொரு நாள் கூட போகலாம்..திருக்கொள்ளிக்காடு திருவாரூர் பக்கத்துல இருக்கு.அங்க போயிட்டு வருவது ரொம்ப பெஸ்ட்.இது பொங்கு சனி ஆலயம்.அதாவது சனி இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு வழிபாடு செய்ய அருமையான ஆலயம்.பொங்கு சனி உங்க திறமைகளை வெளிக்கொணரும்.இதை பத்தி எழுதறேன்.

ஜெயலலிதா சிம்மம் ராசிக்கு அவருக்கு கடந்த 5 வருசமா ஆட்சியை இழந்து சனியால் பல சோதனைகளை அனுபவித்தார்.உடல்நலக்குறைவும் அடிக்கடி உண்டானது.வழக்குகளை சந்தித்தார்.இருப்பினும் சனி முடியும்போது அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கை கொடுத்தது.அவருடைய கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் சனி இன்னும் முடியலை என்பதுக்கு ஏற்ப..சனியின் முக்கிய வேலையான கோர்ட் படியேற செய்வதையும் செய்து விட்டது.காவல்நிலையமோ,கோர்ட்டோ ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிம்ம ராசிக்காரர்கள் பலர் அனுபவித்து இருக்கிறார்கள்.அதுபோல ஜெயலலிதாவும் பெங்களூர் கோர்ட் அதுவும் சிறை வளாகம்...பார்த்தீங்களா.சனி தன் பணியை செவ்வனே முடிக்காம போக மாட்டார்.தன்னை சுர்றி இருந்த துரோகிகளை இனம் கண்டு இப்போதுதான் ஜெயலலிதா வெளியேற்றியிருக்கிறார்.ஏன் இத்தனை நாளா தெரியவில்லையா என்று கேட்டால்,சனி போகும்போதுதான் எதிரிகளை அழிக்க ஆயுதம் கொடுப்பார்.எதிரி நம்மிடம் வசமாக சிக்குவதும் அப்போதுதான்.

ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் பாவம்னு பரிதாபப்பட்டு நன்மைகளையும் செய்துவிடுகிறார்.நன்மையே செய்ய வேணாம்.என்னை விட்டா போதும்னு சொல்றீங்களா.அதுவும் சரிதான்.

மேலும் வாசிக்க"சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்"

Post Comment

வடிவேலு செக்ஸ் டார்ச்சர்..சோனா பரபரப்பு

வடிவேலு செக்ஸ் டார்ச்சர்..சோனா பரபரப்பு குற்றச்சாட்டு


கவர்ச்சி நடிகை சோனா ரிப்போர்ட்டர் வார இதழில் தன் சுயசரிதை! எழுதி வருகிறார்.அதில் இந்தவார இதழில் குசேலன் படத்தில் நடித்தபோது தனக்கு நடிகர் வடிவேலு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும்,ஒரு கட்டத்தில் என்னுடன் நடிக்க இவதான் கிடைச்சாளா..இவளுக்கு நடிக்கவே தெரியலை...வேற நடிகையை போட்டாத்தான் நடிப்பேன் என வடிவேலு அடம்பிடித்தாராம்..என்ன சார் நைட்ல சரியில்லையா என தயாரிப்பு நிர்வாகி மெதுவாக கேட்டாராம்...இன்னும் கோபப்பட்ட வடிவேலு கத்தி தீர்த்துவிட்டாராம்...

விசயம் ரஜினி கவனத்துக்கு போனதாம்..ஒழுங்கா..நடிக்கிலைன்னா இடத்தை காலி பண்ண சொல்லுங்க என்றாராம்..யாரை சார் சோனாவையா..என தயாரிப்பு நிர்வாகி கேட்டபோது..இல்ல..வடிவேலுவை..என்றாராம் ரஜினி கூலாக.

சோனா வை வடிவேலு துரத்தி துரத்தி டார்ச்சர் செய்ததாகவும்,தான் ஒழுங்காக நடித்தாலும் டேக் சரியில்லை இன்னொரு ஷாட் எடுக்கலாம் என வடிவேலு சொல்லிவிடுவாராம்....

இதிலெல்லாம் சோனா தப்பினராம்!.கனிமொழி என்ற படம் எடுத்து நஷ்டமானதாகவும்...வெங்கட் பிரபு நட்பு கிடைத்தபின்..தனக்கு பிரேம்ஜி யை ஹீரோ வாக வைத்து ஒரு சினிமா எடுக்கும் முடிவில் இருந்ததாகவும் சொல்கிறார்...ஆனால் அது டிராப் ஆகிவிட்டது...சினிமா த்யாரிப்பாளராக மாறியபின் தான் தீவிர குடி போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டேன் என்கிறார் சோனா...thanks ;ripporter 

ஒண்ணும் தெரியாத கைப்புள்ள என்னென்ன வேலை செஞ்சிருக்கு பார்த்தீங்களா../ இந்த நடிகையும் சாதாரண ஆள் இல்ல போலிருக்கு..சினிமா துறையில் எவ்வளவோ மர்மங்கள் இது போல் புதைந்து கிடக்கலாம்..!!
மேலும் வாசிக்க"வடிவேலு செக்ஸ் டார்ச்சர்..சோனா பரபரப்பு"

Post Comment

Monday, 19 December 2011

சசிகலா நீக்கம் ;கட்சி உடையுமா;வதந்தி கிளப்பும் கலைஞர் டிவி


சசிகலா நீக்கம் ;கட்சி உடையுமா;வதந்தி கிளப்பும் கலைஞர் டிவி


ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் அவர் இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .

சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார். இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிவிப்பில் : சசிகலா. நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர் (மன்னார்குடி),பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

செய்தி வெளியானது முதல் அமைதியாக கொஞ்ச நேரம் இருந்த கலைஞர் டிவி இதன் பிண்ணனி தகவல்கள் சொல்கிறேன் என சொல்லி ஆகாசப் பொய்யை கொஞ்சமும் கவலைப்படாமல் அவிழ்த்து விட்டுக்கொண்டுள்ளது...

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குடும்பத்தாரை முழு பழியையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி ஜெயலலிதா வற்புறுத்தியதாகவும்,அதை ஏற்க மறுத்ததால்தான்..ஜெயலலிதா கோபம் அடைந்து சசிகலா மற்றும் அவர் குடும்பத்தாரை கூண்டோடு நீக்கினார் என்றும் தொடர்ச்சியாக செய்தி பரப்பிக்கொண்டிருக்கிறது..

இதுவாவது பரவாயில்லை...தி.மு.க உடன்பிறப்புகள் நம்பி விடுவார்கள்..ஆனால் சசிகலா நீக்கத்தால் அ.தி.மு.க வே அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளதாகவும், கட்சி இனி துண்டு துண்டாக சிதறப்போகிறது என்றும் கலைஞர் செய்தியில் மூச்சுவிடாமல் அலறுகிறார்கள்...அதாவது குக்கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து கட்சி செயலாளர்களும் சசிகலா நியமித்த ஆட்களாம்.அவர்கள் அனைவரும் இனி சசிகலா பக்கம் போய்விடுவார்களாம்...இனி அ.தி.மு.க வே இருக்காதாம்...என்னடா கதை விடுறீங்க..உங்க கலைஞர் தாத்தாவே இதைக்கண்டு சிரிப்பார்..!!

அ,தி.மு.க வில் அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.இனி சசிகலா பேச்சைக்கேட்டுதான் ஜெயலலிதா எல்லா முடிவுகளும் எடுக்கிறார் என எதிர்கட்சிகளும்,சாதரண மக்களும் சொல்ல முடியாதே!!

இனி நக்கீரன்,ஜூனியர் விகடன் களுக்கு மன்னார்குடி மாஃபியா கட்டுரைகள் கிடைக்காது...!

ஜெயலலிதா எம்.ஜி.ஆர் கால்த்துக்கு பின் ஒன் மேன் ஆர்மியாக கட்சியை வளர்த்து மூன்று முறை முதல்வராகவும் ஆனவர்..பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்.இன்றைய தேதியில் தமிழ்கத்தில் பெரிய கட்சியாக அ.தி.மு.க மட்டுமே உள்ளது.தி.மு.க ஆட்சி புரிந்த ஐந்து ஆண்டுகளும் அவர்கள் ஆட்சியை பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் மைனாரிட்டி ஆட்சி என சொல்லியே அவர்களை வீழ்த்தியவர்..ஏய்யா என்னய்யா இந்தம்மா தினசரி மைனாரிட்டி ஆட்சின்னே சொல்லுது..என்று...கலைஞரே கதறுவாராம்.

ஜெயலலிதா நட்பை மதித்தார்.தான் ஒரு பெண் குடும்பம் இல்லாமல் தனிமையில் இருக்கிறோம்..தன் தோழி தன் அருகில் இருந்தால் நல்லது என அவரை பக்கத்திலேயே வைத்திருந்தார்..இன்று சில கசப்பான அனுபவங்களுக்கு பின் அவர்கள் மூலம் ஆட்சிக்கு கெட்டப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை நீக்கியிருக்கிறார்..இது மக்களுக்கு நன்மையே..கட்சிக்காரர்களும் யாரிடமும் ஏமாறாமல் முதல்வரிடம் தங்கள் குறையை சொல்ல நல்ல வாய்ப்பு..வரவேற்போம்..!!


ஜோதிடம் என்ன சொல்லுது..? சந்திரகிரகணம் வந்தாலே பெண் ஆட்சியாளர்களுக்கு கண்டம்தான்...இரு தோழிகளின் பிரிவு..அதுவும் பெண் முதல்வருக்கு மன உளைச்சல்னா அதுக்கும் சந்திரகிரகணம் பத்தி யோசிக்காம இருக்க முடியல..


சூரிய கிரகணம் வரும்போது ஆண் ஆட்சியாளர்களுக்கு பாதிக்கும்.சந்திர கிரகணம் வரும் வருடம் பெண் ஆட்சியாளர்களுக்கு பாதிப்பு..இன்னும் யாரை பாதிக்கும்..? யோசிச்சு பார்த்தா இந்திய பெண் அட்சியாளர்கள் எல்லோரும் கண்டமான காலத்தை தொட்டுகிட்டுதான் இருக்காங்க..


உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி தேர்தலில் தோற்கலாம்..சோனியா காந்திக்கு உடல் பாதிப்புடன்,ஊழல் குற்றச்சாட்டுடன் இருந்தாலும் இன்னும் சிக்கல் அதிகரிக்கலாம்...மம்தா பானர்ஜி மாநிலத்தில் மருத்துவமனை தீவிபத்தில் 70 பேர் இறந்தாங்களே அதுவும் கெட்ட பெயர்தான்..கூடங்குளம்,முல்லைபெரியாறு என ஜெயலலிதாவும் சங்கடங்களை அனுபவிச்சுகிட்டுதான் இருக்காங்க..குரு வக்ர நிவர்த்தி 25.12.2011 அனதும் கேரளா சரண்டர் ஆகிடும்....னு நினைக்கிறேன்..தங்கம் ,மஞ்சள் விலை மீண்டும் உயரும்
மேலும் வாசிக்க"சசிகலா நீக்கம் ;கட்சி உடையுமா;வதந்தி கிளப்பும் கலைஞர் டிவி"

Post Comment

Sunday, 18 December 2011

முல்லை பெரியாறு,கூடங்குளம் பற்றி ஜோதிடம் கணிப்பு

முல்லை பெரியாறு,கூடங்குளம் பற்றி ஜோதிடம் கணிப்பு


ஜோதிடம் முல்லைப்பெரியாறு,கூடங்குளம் பற்றி தீர்வு சொல்லுமா...சொல்லாது..பிரச்சினை எந்த கிரகத்தின் மாறுதலால் உண்டானது..பிரச்சினை எந்த கிரகத்தில் பெயர்ச்சியால் மாறிப்போகும் என்பதை ஜோசியம் சொல்லும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்க கூடங்குளம் மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அணை பழுதடைந்து உள்ளது.அணையை உடைப்போம்...புதிய அணை கட்டுவோம்..சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என கேரளா சொல்லி வருகிறது.

இவ்விரண்டு பிரச்சினைகளும் கோட்சாரத்தில் குரு வக்ரம் ஆனபிறகு..செவ்வாய் கோட்சாரத்தில் சிம்மம் வீட்டுக்கு சென்றபின் கொழுந்து விட்டு எரிகிறது.கூடங்குளம் மக்கள் தொடர் உண்ணாவிரதம் எனும் அற்ப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மலையாளிகள் தமிழ்ப்பெண்களை அவமானப்படுத்தியும்,தமிழர்களை அடித்தும் வருகிறார்கள்.இது அநாகரீகம்.அக்ரமம்.இந்த அநியாயம் நீதி தேவன் சனி பலம் பெற்றபின் அடங்கிவிடும் சனி வலு பெற்று துலாம் வீட்டுக்கு சென்றபின் நல்லதொரு தீர்ப்பாக கேரளாவை கண்டித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.அணை நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரளா மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

குரு வக்ரமாக இருப்பதால் அநியாயம் தலை தூக்குகிறது.ஊழல் வாதிகள் விடுதலை ஆகிறார்கள்.மோசமான அரசியல்வாதிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

குரு வக்ர நிவர்த்தி ஆனதும் இவையெல்லாம் மாறும்.


மார்கழி 9 ஆம்தேதி குரு வக்ர நிவர்த்தி ஆகிறார்.(25.12.2011)

அதன் பின் என்ன நடக்கும்..? ஊழல் வாதிகளுக்கு தண்டனைதான்.அநியாயம் செய்யும் மலையாளிகளுக்கு நெருக்கடிதான்.முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழ்கத்தின் நியாயம் வெல்லும்.பிரச்சினை முற்றிலும் விலக 10 மாதம் ஆகும் என்றாலும் குரு வக்ர நிவர்த்தி ஆனால் தாக்குதல்,கலவரம் குறையும்.மத்திய அரசு தலையிடும் சூழல் வரும் என நினைக்கிறேன்.கூடங்குளம் போராட்டம் ஒடுக்கப்படும்.மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்..அணு உலை செயல்படும்.தமிழகத்தின் மின்சார தேவை முழுமையாக பூர்த்தியாகும்..சனி,செவ்வாய் பலமாகும்போது அணு உலை அதன் காரகத்துவம்தானே.அது பலமாகாமல் இருக்குமா...?


புதிய புதிய ஊழல்கள் விசாரிக்கபடும்.சுப்ரீம்கோர்ட் கடுமையாக நடந்துகொள்ளும்.நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.இவையெல்லாம் நான் இரு மாதங்களுக்கு முன்பே சனி பெயர்ச்சி ஒரு அதிசயம் பதிவில் சொல்லியிருக்கிறேன்!

குரு வக்ர நிவர்த்தி ஆனால் ராஜபக்சே வுக்கு சிக்கல் அதிகரிக்கும்....நீதி விசாரணை இவர் மேல் வலுப்பெறும்.

சுப்ரீம் கோர்ட்டில் பல ஊழல்வாதிகள் பொய் முகம் கிழியும்....தமிழர்கள கொன்று குவித்த ராஜபக்சே வுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.அல்லது அவருக்கு இயற்கையே தண்டனை கொடுக்கும்.நீதி தேவன் சனி 30 ஆண்டுகளுக்குப்பின் உச்சமாகும்போது,நீதிமன்றங்கள் தான் உலகை மட்டுமல்ல.,இந்தியாவையும் ஆட்சி செய்யும்..இல்லை அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கும்.ஜெயலலிதா எதை செய்தாலும் ஒரு பொதுநல வழக்கு போட்டு குட்டு வாங்கி வைக்க முடிகிறதே...?

தங்கம் விலை இப்போது குறைவது போல இருக்கும்..இனி அடுத்த வாரம் மறுபடி அதிகரிக்கும்...

செவ்வாய் சிம்மம் வீட்டுக்கு சென்றது முதல் சிம்ம ராசியினர்,சிம்மம் லக்னத்தாருக்கு மக்கள் பலமும்,தொழில் பலமும் அதிகரிக்கும்...செல்வாக்கு கூடும்..

டிசம்பர் 25 முதல் தனுசு,மீனம் ராசி லக்னத்தாருக்கு கஷ்டங்கள் குறையும்.பணப்பிரச்சினைகள் குறையும்.நீண்டகால ஆசைகள்,கனவுகல் நிறைவேறும்.

அரசாங்கம் அது மாநிலமாக இருந்தாலும்,மத்தியில் இருந்தாலும் தான் நினைத்த்தை நிறைவேற்றிக்கொள்ளும்.கூடங்குளம் அணு உலை செயல்பட துவங்கும்.மத்திய அரசு அதை செயல்படுத்தும்..

தமிழ்கத்தில் புதிய அரசு திட்டங்கள் மக்களை மகிழ்ச்சிபடுத்தும் படி ஜெயலலிதா கொண்டு வருவார்!


மேலும் வாசிக்க"முல்லை பெரியாறு,கூடங்குளம் பற்றி ஜோதிடம் கணிப்பு"

Post Comment

Wednesday, 14 December 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

                                                   குச்சனூர் சனிபகவான்

சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் 15.11.2011 அன்று முடிந்துவிட்டாலும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வரும் 21.12.2011 அன்று காலை சனீஸ்வரர் ஆலயமான திருநள்ளாறில் விசேசமாக கொண்டாடப்படுகிறது.சனிப்பெயர்ச்சிக்கு முன்பே சொல்லியிருந்தேன்...சனி துலாம் வீட்டில் உச்சம் ஆகிறார்.பல புதுபுது திருப்பங்களை அரசியலிலும் ,பொருளாதாரத்திலும்,தொழில் துறையிலும் ஏற்படுத்துவார்.சனி நீதிக்காரகன்.அவன் வலுப்பெற்றால் உச்சநீதிமன்றத்தின் கை ஓங்கி இருக்கும்.மத்திய மாநில அரசுகளை நம்பாமல்,..மக்களும் அரசியல் தலைவர்களும் முன்பைவிட அதிகமாகவே நீதிமன்றங்களை நம்பியிருப்பர் என்றேன்.அதன்படி இன்று முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு மிக மிக அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது...

இரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் ஆபத்தில் இருக்கும் அணைக்கு பாதுகாப்பு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மிக விவேகத்துடன், அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.ஆரம்பம் முதல் முல்லப்பெரியார் அணைக்காக போராடி வரும் வைகோவே தமிழக அரசை பாராட்டி இருக்கிறார்.

ம்..சனி வலுப்பெறும்போது சனி ஆதிக்கத்தில் கறுப்புத் துண்டை அணிந்திருக்கும் வைகோவுக்கு முக்கியத்துவம் கூடுமோ..நடந்தாலும் ஆச்சர்யமில்லை.சனி சார்ந்த இரும்பு சம்பந்தமான ,வாகனம்,இயந்திரம்,ஆயில் சார்ந்த பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.

அஷ்டம சனி என்ன செய்யும்..? என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.

மீனம் ராசியினர் இதற்கு நேர் மாறானவர்கள்.குருவின் ராசிக்கு சொந்தக்காரர்.குருவை போல பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்..இவர்களால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.ஆனா இவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்களா என்றால் சந்தேகம்தான்...குருவின் ராசி என்பதால் பண வருவாய்க்கு குறைவிருக்காது.பணம் நஷ்டம் வந்தாலும் சமாளித்துவிடுவர்.தொழில் பாதிப்போ மந்தமோ வந்தாலும்...தன் சாதூர்யத்தால் சமாளிப்பர்.புலம்புவார்கள்.ஆனால் இவங்க புலம்பலை யாரும் மதிக்க மாட்டார்கள்..உங்களுக்கு என்ன சார்...எங்கியாவது ஷேர் மார்க்கெட்ல லம்பா போட்டு வெச்சிருப்பீங்க,.ன்னு சொல்லிடுவாங்க...

சிக்கன்,மட்டன் சாப்பிடுறவங்க இந்த ராசியில கம்மி.காரணம் இவங்க..பல பேருக்கு சிவபக்தி அதிகம்..கந்த சஷ்டி கவசம் உச்சரிச்சு முருகன் மேல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பவர்களும் அதிகம்.தெய்வபலம் இருப்பதால் அஷ்டம சனி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரிதான்..

மீனம் ராசிக்காரங்க தொழில் விசயத்துல பணம் விசயத்துல கெட்டி.ஆனாலும் அஷ்டம சனியில ஏமாற போறாங்க..யாரால நண்பர்களால.உறவினர்களால...குழந்தைகளால்...மருத்துவ செலவும் கொஞ்சம் ஏற்படும்.அடுத்தவனுக்கு செலவு பண்ணாம தன் பணத்தை கெட்டியா வெச்சிருக்குறவங்க..டாகடருக்கு கொடுத்தே ஆகணும்.உங்க ராசி இயல்பே குரு வின் குணாதிசயம்தான்..குரு எப்படியிருக்கணும்..?அன்னதானம் செய்தல்,கோயில் கட்ட உதவி செய்தல்,.ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்தல்,ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி இதுதான்.இதையெல்லாம் இதுவரை நீங்க செய்யலைன்னா இப்போ செய்யுங்க...

அஷ்டம சனி என்பது ராசிக்கு எட்டில் சனி வருவது.கிராமத்தில் சொல்வாங்க...எட்டுல சனி புட்டுல அடி..(மர்ம உறுப்பு பாதிக்கும்).எனவே வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.இரவில் வாகனத்தில் செல்லும்போது இன்னும் கவனம்.அதுவும் மது அருந்திட்டு போனா .....மறுபடி இந்த பேராவின் முதல்வரியை படிக்கவும்.

எட்டில் சனி வரும்போது ஏழாம் பார்வையாக சனி பார்ப்பது..வாக்கு ஸ்தானத்தை.அதாவது எப்போதும் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வதுன்னா உங்களுக்கு சர்க்கரை கட்டி.இன்னும் இரண்டு வருசத்துக்கு இந்த சேவையை நீங்க குறைச்சுக்கணும்.நீங்க ஒண்ணு சொல்ல அது ராங்கா எதிராளிக்கு போய் சேர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சிக்கிட்டா மாதிரியாகிடும்...பேச்சில் நிதானம் இழத்தல் அஷ்டம சனியின் முக்கிய பாதிப்பு..பேச்சை குறைச்சிக்குங்க சார்..வீண் விவாதத்தில் வாயை கொடுத்து மாட்டிக்க வேணாம்..மனைவியிடம்..வம்பிழுப்பது பெரிய துன்பத்தில் முடியும்..அனுசரிச்சு போய்விடவும்...

குச்சனூர் சனிபகவானை வழிபட்டுட்டு வாங்க..திருச்செந்தூர் வருசம் ஒரு தடவை போயிட்டு வாங்க...

இவ்ளோதான்...அஷ்டம சனி...மலைப்பா இருக்கா..எப்பவும் போல இருங்க..நான் சொன்னது மட்டும் நினைவு வெச்சுக்குங்க..அஷ்டம சனி வந்திருச்சி இனி அவோதான்னு நீங்க..வேலை செய்யாம படுத்துக்கிட்டா அதுக்கு சனிபகவான் பொறுப்பல்ல...!!
மேலும் வாசிக்க"சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்"

Post Comment

Monday, 12 December 2011

முல்லைப்பெரியாறு அணைக்காக போராடும் விஜய்

முல்லைப்பெரியாறு அணைக்காக போராடும் விஜய்,சூர்யா



சூர்யா விஜய் இருவருக்கும் தமிழகம் மட்டுமல்ல..கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது.இங்கு வசூலை குவிப்பது போலவே அங்கும் வசூலை குவிக்கின்றனர்...சூர்யா அரசியலில் இல்லை.ஆனாலும் தமிழனுக்கு குரல் கொடுக்கும் பொறுப்பு இருக்கு.வருசம் பூரா சம்பாதிச்சு கொடுக்குறோம்..உங்களை ஹீரோவா கொண்டாடுறோம்..ஹீரோ மாதிரி பறந்து சண்டை போடாம குரல் கொடுக்கலாம்..தமிழ்ன் கரத்தை வலுப்படுத்தலாம்..தேனிக்காரன் தவிக்கிறான் பாஸ்..


விஜய் அரசியலில் நுழைய விரும்புகிறார் அவருக்கு முல்லைப்பெரியார் விவகாரத்தில் மக்களுக்காக போராட நல்ல சான்ஸ். முல்லைப்பெரியார் அணையை உடைக்க கூடாது.தமிழ்ப்பெண்களிடம் கேவலமாக மலையாளிகள் நடந்து கொள்ளக்கூடாது,உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை கேரள அரசியல்வாதிகள் கருத்து கந்தசாமி போல உளறிக்கொட்டகூடாது.. என அறிக்கை விட வேண்டும்.அப்பாவும்,மகனும் நடிகர் சங்கம் கூட்டத்தோடு கோவிந்தா போடாக்கூடாது.


 ,தி.மு.க வை போல மனித சங்கிலி,உண்ணாவிரதம்னு எருமை மாட்டு மேல மழை பெய்தது போல போராடாமல்,ஆக்கப்பூர்வமக போராடுங்க விஜய்.அரசியலில் நுழைய விரும்பினால் இன்று கேரள தமிழ்க எல்லையில் லட்சக்கணக்கில் திரண்டு நின்று ஆவேசத்துடன் இருக்கும் மக்களிடம் பேசுங்கள்...இளைஞர்கள் உங்க பக்கம் திரளுவார்கள்.தேர்தல் சமயத்துல மட்டும் வெளீஏ வந்து பீட்டர் விடலாம்னு நினைச்சா முடியாது.உங்க மக்கள் இயக்கம்,ரசிகர் மன்றம் எல்லாம் வெச்சு ஏதாவது ஆக்கப்பூர்வா செய்ங்க..வதந்தியை கிளப்பும் கேரளாவுக்கு கண்டனம் தெரிவியுங்க..நீங்கதான் மலையாளத்திலும்,தமிழிலும் அதிகமா சம்பாதிக்குறீங்க..அரசியலுக்கு வரும் ஆர்வமும் இருக்கு.அதனால உங்களுக்கு பொறுப்பு இருக்கு பாஸ்..தமிழ்ப்பொண்ணுங்களை இழிவு படுத்தினவனுகளை சினிமாவுல மட்டும்தான் உதைப்பீங்களா பாஸ்..?

ரஜினி தமிழ் சினிமாவின் கடவுள் அவருக்கு இன்று 62 ஆம் பிறந்த நாள்..நீடூழி வாழ வாழ்த்துகிறேன்...முடிந்தவரை ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்காமல் ஆரம்பகாலம் முதல் ரசிகர் மன்றம் அமைத்து நற்பணி செய்து வரும்.ஈரோடு பைக்முருகேஷ் போன்றோர்களை யாவது அழைத்து விருந்து வைத்து ஒருநாள் அவர்களுடன் மனம் விட்டு பேசலாமே சார்..?

கருணாநிதிக்கு ராசியான எண் 3.அவர் பிறந்த தேதி எண் வருதுல்ல.அதனால் இன்று 12 ஆம் தேதி போராட்டம்.ஜெயலலிதா பிறந்த தேதி எண் 6 வரும்படி வரும் 15 ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக்கூட்டம்..விஜயகாந்த் எப்போதும் 5 ஆம் எண் வரும் நாட்களில் தான் முக்கிய காரியங்களை செய்வார் அதனால் அவர் 14 ஆம் தேதி போராடுகிறார்.ஆனா தி.மு.க மனித சங்கிலி போராட்டம் 15 ஆம் தேதி வெச்சிருக்கே அது கலைஞருக்கு பகை எண் ஆச்சேன்னு யோசிச்சேன்.அப்புறம் நேத்து அதை மாத்தி 14 ஆம் தேதிக்கு வெச்சிட்டாங்க..

முல்லைப்பெரியார் விவகாரத்துல தமிழ்க எம்.பிக்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கணும்...கேரள காங்கிரசுக்கு ஆதரவா செயல்படும் தேசிய காங்கிரசுக்கு அதிரடியா பாடம் புகட்டணும்...அதுக்கு ஆதரவு கொடுத்து வாழ வைக்கும் தி.மு.க இங்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் போடுது.கவன ஈர்ப்பு போராட்டமாம்.என்ன கொடும சார் இது..? ஏன் கண்டன போராட்டம்னு சொல்லக்கூடாதா..? 

தமிழ்க முதல்வர் வேண்டுகோள் என முல்லைப்பெரியார் அணையின் வலிமை,அதன் வரலாறு,உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பு விவரம் என விவரமாக மேற்கோள் காட்டி.,அணை உடைந்தால் கேரள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை..அந்த நீர் முழுவதும் இடுக்கி அணைக்குதான் செல்லும்...என்பதையும்..தமிழ்க முதல்வர் விளக்கி தமிழக பத்திரிக்கைகளும்,மலையாள பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்..இது ஒரு அறிவுப்பூர்வமான நடவடிக்கை...உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அமைதியாக இருப்போம் என தமிழ்க முதல்வர் சொல்கிறார்.கேரள அரசியல்வாதிகளோ இடைத்தேர்தலை மனதில் கொண்டு மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் வாசிக்க"முல்லைப்பெரியாறு அணைக்காக போராடும் விஜய்"

Post Comment

Friday, 9 December 2011

சந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..?


சந்திரகிரகணம் நாளை 10.12.2011 அன்று மாலை 6.15 அளவில் தொடங்கி இரவு 9;48க்கு முடிகிறது.

அன்று இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதோ...சந்திரனை பார்ப்பதோ கூடாது.தண்ணீர் முதல் அனைத்து உணவு பொருட்களிலும் அருகம்புல் போட்டு வைத்து பயன்படுத்தவும்.கர்ப்பிணிகள் கிரகனம் தொடங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ சாப்பிடுவதுதான் நல்லது.

கிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும்.அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல்பலமின்றியோ அல்லது மனபலம் இன்றியோ இருக்கும்.தாயாருக்கும் இப்படி இருக்கும் என்பதை அனுபவ புர்வமாக அறிந்திருக்கிரேன்.எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை இந்த நேரத்தை தவிர்க்கவும்..!
மேலும் வாசிக்க"சந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..?"

Post Comment

Thursday, 8 December 2011

கனிமொழி அதிரடி அரசியல் ஆரம்பம்-ஆனந்த விகடன் 14.12.2011

கனிமொழி அதிரடி அரசியல் ஆரம்பம்-ஆனந்த விகடன் 14.12.2011

கனிமொழி ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டி ;

எப்படி இருக்கீங்க..?

பழைய பலம் திரும்ப வந்த மாதிரி இருக்கு.எப்பவும் உணராத உற்சாகமும் புத்துணர்ச்சியும் என்னைத் திக்குமுக்காட வைக்குது.விமான நிலையத்துக்கே தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்ததைப் பார்க்கும்போது நெகிழ்ந்து விட்டேன்..

பேராசிரியரும் ஆற்க்காட்டாரும் வீட்டுக்கே வந்து என்னை வாழ்த்தியது நானே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி...என் வலியை விட பெரிய ஆறுதல் இதெல்லாம்..!

சிறைக்கு செல்லும் நிலைக்கு கொண்டு வந்து விட்டதே..என அரசியல் மீது வெறுப்பு ஏற்பட வில்லையா..?

என்னை அரசியலுக்கு கைப்பிடித்து வந்தவர் தலைவர்தான்.அரசியலில் தலைவர் சந்திக்காத சோதனைகளே இல்லை.அந்த சோதனைகளை எல்லாம் போர்க்குணத்தோடு எதிர்த்து போராடி வெற்றி பெற்றார்.தலைவரிடம் இருக்கும் தைரியம்,போர்க்குணம் எனக்கும் உண்டு.நான் எந்த தப்பும் செய்யவில்லை.தவறான பழி என் மீது விழுந்துவிட்டது.அதில் இருந்து மீண்டு நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்..அரசியல் மீது எனக்கு வெறுப்பு கிடையாது.இனிமேல் பாருங்கள் எனது அரசியலை.தலைவர் எதிர்பார்ப்புக்கு நான் தொடர்ந்து தீவிர அரசியலில் இருப்பேன்..என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தொண்டர்களின் நம்பிக்கைக்குஏற்ப செயல்படுவேன்..என்று உறுதி மிக்க குரலில் பேசி முடித்துக் கைக்கூப்புகிறார்..!!

அப்பாடி இன்னொரு அணி கிளம்பிருச்சேய்....
மேலும் வாசிக்க"கனிமொழி அதிரடி அரசியல் ஆரம்பம்-ஆனந்த விகடன் 14.12.2011"

Post Comment

Wednesday, 7 December 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014

சனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;

சனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.

சனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழைப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.

எனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனியாக இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.

பலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.

கொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.

அன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.!!
மேலும் வாசிக்க"சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்"

Post Comment

Tuesday, 6 December 2011

முல்லைப்பெரியாறு;கேரளாவின் அக்கிரமம்...மலையாளி முட்டாளா..?

முல்லைப் பெரியாறு;கேரளாவின் அக்கிரமம்...மலையாளி முட்டாளா..?

கேரள தமிழக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.சபரிமலை பக்தர்கள் கடும் அவதி.என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன..ஆந்திர மாநிலம்,கர்நாடக மாநில ஐயப்ப பக்தர்களும் இதனால் கடும் அவதியில் உள்ளனர்.அய்யா மக்களே ஐய்ப்பனை கும்பிடுங்க..வேணாம்னு சொல்லலை...நாளுக்கு நாள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் சபரிமலையில் தான் நீங்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியுமா.இவ்வளவு கலவரத்திலும்...இன்று சபரிமலை போகமுடியுமா நிலவரம் எப்படி என பலரும் விசாரித்துக் கொண்டிருப்பது கவலை தருகிறது.சென்னையில் அருமையான சபரிமலை கோயில் இருக்கு.அங்க போங்கப்பா.இத்தனை வருசமா அவங்களுக்கு பணத்தை அள்ளிக் கொட்டியும் அவங்க நினைச்சுப் பார்த்தானுகளா.தமிழனை போட்டு உதைக்கிறானுக.

மலையாளிகளுக்கு கொண்டு செல்லும் உணவு பொருள் லாரியை அவனுகளே அடிச்சு நொறுக்குறானுக.அவனுகளுக்காகத்தான் இதை கொண்டு போறோம்.இந்த மலையாளிங்க..முட்டாளா..புத்திசாலிகளானு தெரியலை.ஆனா தமிழன் வெளியில தான் அடிவாங்குனான்.இப்ப இங்கியே அடி வாங்க ஆரம்பிச்சிட்டான்...


கேரளா அரசு மின்சாரம் உறப்த்திக்காக நல்ல அணையை இடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.இதற்காக இரு மாநில நட்புறவை கெடுக்க ஆரம்பித்துவிட்டது.தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவும் உறுதியாக அணை கட்ட விட மாட்டோம் என்று சொல்லிவிட்டார்.கேரளாவின் அணை இடிந்து விடும் என கிளப்பும் புரளியை கண்டித்து இதை நிறுத்த சொல்லி,தமிழ்க முதல்வர் சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார்.

தமிழக சினிமா தியேட்டர்களும் கேரளாவின் இந்த அக்கிரமத்தை கண்டித்து தமிழ்கமுதல்வர் கரத்தை வலுப்படுத்த,ஒருநாள் சினிமா காட்சிகள் ரத்து எனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

கேரள அரசியல் வாதிகள் ஆளுங்கட்சி முதல் எதிர்கட்சிகள் வரை தை அருமையான அரசியல் ஆதாயமா கருத ஆரம்பித்துவிட்டதால்,தமிழ்நாட்டிலும் இந்த நிலை உருவாகி பதட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.நம் ஊமை பிரதமரும், இது பற்றி தன் திருவாய் திறக்காமல் இருக்கிறார்.ராகுல் காந்தி சொன்னால்தான் பேசுவாராம்.சோனியா காந்திக்கு இந்தியாவை பத்தி ஒண்ணுமே தெரியாது.இதில் கம்பம்,தேனிக்காரன் பிரச்சனை எங்கே புரிய போகிறது..?இந்தியா வின் ஆளும் அதிகார வர்க்கம் இத்தாலி அம்மாகிட்ட இருக்குற கொடுமையால் இந்தியா குரங்கிட்ம் சிக்கிய பூமாலையாய் அவதிப்படுகிறது.

இப்போ இந்த நேரம் அங்கு தமிழர்களும் கலவரத்தில் இறங்கி விட்டனர்.கேரளா வாகனங்களும் தாக்கப்படுகின்றன.செய்தி 

கேரளாக்காரன் ஒழுங்கா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏத்துக்கிட்டு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காக்கணும்.அதை விட்டுட்டு கலவரம் பண்ணிகிட்டு,புரளியை கிளப்பி விட்டுகிட்டு இருந்தா மலையாளிகளுக்குத்தான் திண்டாட்டம்.புரிஞ்சு நடந்துக்குங்க..

சோனியா காந்தி,மன்மோகன் சிங்,ராகுல்காந்தி என தமிழர்க்கு எதிரான ஆளுங்கட்சி வர்க்கமும் சரி.தமிழனிடம் ஓட்டு வாங்கி சென்ற தமிழரான ,இந்தியாவின்உள்துறை மந்திரி சிதம்பரம்,இவர் முக்கியமான தமிழ் துரோகி.ஆனா மலையாளி மந்திரிகள் தாய்மண் பாசத்துடன் மொழிப் பற்றுடன் வெறித்தமாக தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசை ஆட்டுவிக்கின்றனர்.என்ன கொடுமை.தமிழ்நாட்டில் இருந்து போன அதிக தி.மு.க எம்.பிக்களோ கனிமொழியை ஜாமீன் எடுக்கவே எம்.பி ஆனவர்கள்.

கேரளா அக்கிரமம் ஒழிய ,கேரளா கிளப்பும் புரளிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்தனும்.புதிய அணை கட்டக் கூடாது!சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிச்சு நடக்க கேரள அரசு ஒத்துழைக்கணும்.இல்லைன்னா கேரளா நாறிடும்.மலையாளிகளுக்கு டவுசர் கிழியும்!!

மேலும் வாசிக்க"முல்லைப்பெரியாறு;கேரளாவின் அக்கிரமம்...மலையாளி முட்டாளா..?"

Post Comment

Sunday, 4 December 2011

விஜய் ஜாதகம் கணிப்பு ராசி பலன்

விஜய் ஜாதகம் கணிப்பு


விஜய் பிறந்த தேதி 22.6.1974 என்பது மட்டும் விக்கிபீடியா உதவியால் தெரியும்.மற்றபடி அவர் பிறந்த நேரம் தெரியவில்லை.இருந்தாலும் அன்று இருக்கும் கிரக நிலைகளை வெச்சி ஜாதகம் போட்டு வரும் முடிவுகளை சொல்றேன்.

பொதுவா 22 ஆம் தேதி பிறந்தவங்க..பிறரை பார்த்தவுடன் அவர்களை பற்றி யூகம் செய்யக்கூடியவங்க.இதனால இவங்க பெரும்பாலும் பதட்டமானவர்களா இருப்பாங்க.நிறைய சம்பாதிக்க கூடியவங்களும்தான்.22 ஆம் தேதி பிறந்த பெரிய பெரிய மில் முதலாளிகள்,ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிறைய இருக்காங்க.22 அதிக டென்சனை தரும்.காரணம் இது ராகுவின் எண் என்பதால்தான்.4,13,31 எந்தாரர்களும் இப்படித்தான்.ஆனா இவங்க கணிப்பு எப்பவும் தப்பாஅது.நிறைய விசயம் தெரிஞ்சி வெச்சிருப்பாங்க..ஆனா வெளியே காட்டிக்க மாட்டாங்க.விஜய் என்ற பெயர் மிக சக்தி வாய்ந்தது.வி எனும் வெற்றி அர்த்தம் வருவது மட்டுமில்லாமல் பெயரின் முழு அர்த்தமும் வெற்றிதான்.இந்த எழுத்தின் தொடக்கம் ரோகிணி நடசத்திரமான சந்திரனை அதிபதியாக கொண்டது.இதனால்தான் பல ஆயிரம் பெண்களுக்கு கனவு கண்ணனாக விஜய் இருக்கிறார்.சந்திரன் கலைக்கு அதிபதி என்பதால் நடனத்தில் வெளுத்துக் கட்டுகிறார்.

பிறந்த தேதிபடி அன்று இவர் நட்சத்திரம் பூசம்.கடக ராசி வருகிறது மதியம் 3 மணி அளவில் என கணக்கிட்டேன்.அன்று முழுக்கவே (கடக ராசிதான்)ஆக கலைகளுக்கு அதிபதியும் ,வசியத்துக்கு அதிபதியுமான சந்திரனின் ராசியில் பிறந்ததால்தான் நட்சத்திரமாக பூரண சந்திரனாக ஒளி வீசுகிறார் விஜய்.கடக ராசி என்பதால் அனைவருக்கும் ராசியானவர்.குழந்தைகள்,பெண்கள்,வயதானவர்கள் என கவர்ந்திழுக்கும் சக்தியை அவர் ஜாதகத்தில் ஆட்சி பெற்ற சந்திரனும்,ஆட்சி பெற்ற சுக்கிரனும்,ஆட்சி பெற்ற புதனும் கொடுக்கிறார்கள்.

சினிமாத் துறையில் ஜொலிக்க, சந்திரன்,சுக்கிரன்,புதன் பலம் பெற்று இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் விஜய் ஜாதகம் அமைந்துள்ளது.பிறந்த நேரம் தெளிவாக தெரியாவிட்டாலும் அன்றைய கிரக நிலை அடிப்படையில் புதன்,சுக்கிரன்,சந்திரன் ஆட்சி பெற்று இருப்பதை மாற்ற இயலாது.பிறந்த தேதியும் தவறு என்றால் மட்டுமே இந்த கணிப்பு தவறாகும்.

3 மணி அளவில் மதியம் கணக்கிட்டால் துலாம் லக்னம்.இரண்டில் ராகு.5ல் குரு.8ல் சுக்கிரன் ஆட்சி.9ல் புதன் ஆட்சி.அவருடன் சூரியன்,சனி,10 ல் சந்திரன்,செவ்வாய்...செவ்வாய் நீசமானாலும் ,நீசன் நின்ற வீட்டுக்கதிபதி சந்திரன் ஆட்சி பெற்று அவருடன் இருப்பதால் நீசபங்க ராஜயோகம்.தொலில் ஸ்தானம் வலிமை அடைந்தும்,லக்னத்தை கும்பத்து குரு பார்த்து ,சம்பத்து (புகழ்) சொத்து,குன்றாத செல்வமும்,தன்னம்பிக்கையையும்,சிறப்பான முன்னேற்றமும் கொடுக்கிறார்..உடன் சுக்ரனும் 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதும் செல்வவளத்தை அள்ளி குவிக்கிறது.

இதுவரை நடந்து வந்த கேது திசை அவருக்கு வரிசையான படங்கள் தோல்வி...ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பு,மாநாடு தடங்கல்கள் ,அரசியல் ரீதியான படத்துக்கு பிரச்சினை என கொடுத்து வந்தது.இனி அவர் ஜாதகத்தில் இப்போது சுக்ர திசை ஆரம்பம்.இது இவருக்கு இன்னும் பல வெற்றிகளை அள்ளி தரப் போகிறது.

அதனை பற்றியும் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்,அரசியல் நிலை பற்றியும் யோகான்,நண்பன்,துப்பாக்கி என அவதாரம் எடுக்கப்போகும் விஜய் எதிர்காலம் பற்றியும் அலசல் அடுத்த பதிவில் காணலாம்...
மேலும் வாசிக்க"விஜய் ஜாதகம் கணிப்பு ராசி பலன்"

Post Comment

குஷ்பூ வின் பிரபலமான கில்மா வீடியோ

குஷ்பூவால் இன்று நாளுக்கு நாள் தி.மு.க தொண்டர்கள் எழுச்சி! பெற்று வருகிறார்கள்.நாளொரு நாளும் குஷ்பூவின் கன்னித் தமிழ் தாய்தமிழாக உருவேறுகிறது...

நிறுத்தி நிதானமாக உதட்டை சுழித்து குஷ்பூ புரட்சியை கிளப்பி வருகிறார்..!

               
      ஸ்டாலின் உற்சாகம்..இப்படி இதுக்கு முன்னே பார்த்துருக்கீங்களா..?


உழைத்துக் களைத்த தி.மு.க தொண்டனுக்கு மாலை நேர விருந்தாக குஷ்பூவின் தரிசனம் இன்று அடிக்கடி கிடைப்பது யாரேலே..நம் தமிழ்த் தலைவராலே..!

குஷ்பூ இன்று தி.மு.க வின் அறிவிக்கப் படாத கொள்கைபரப்பு செயலாளராக,களம் இறக்கப்பட்டுள்ளார்.அவர் கூட்டம் நடக்கும் இடங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்.அவர் சிறப்புறையை கேட்கவா இந்த கூட்டம்..? கலைஞர் குஷ்பூவின் பேச்சு திறமைக்கா ஊர் ஊராக அவரை பிரச்சாரம் செய்ய சொன்னார்..?

இல்லை.தமிழன் குஷ்பூவுக்காக கோயிலே கட்டினவன்...குஷ்பூவின் கட்டழகை கண்டால் அப்படியே தொப்புன்னு விழுந்துடுவான் என்பதால்தான்..ஆனால் அது ஏன் நடக்கவில்லை.இந்த கவர்ச்சிக்கு மயங்கி விழுபவன் இல்லை தமிழன்...

எம்.ஜி.ஆரை சினிமா கவர்ச்சி..என்றார்கள்.ஜெயலலிதா வை பேசாத பேச்சு பேசினார்கள்.ஆனால் இன்று தி.மு.க வோ குஷ்பூவின் சிரிப்பில் கிறங்கி கிடக்கிறது.தன்னாலும் இனி முன்பு போல தமிழை வைத்து வித்தை காட்ட முடியாது.தன் மகனுக்கும் அந்த திறமை போறாது என கலைஞர் தீவிரமாக யோசித்ததன் விளைவோ என்னவோ குஷ்பூ தரிசனம்.

இனி வீழ்ந்து கிடக்கும் தி.மு.க தொண்டனை குஷ்பூதான் தட்டி ! எழுப்ப வேண்டும்!!

குஷ்பூ தொலைகாட்சி கலைச் சேவை;





குஷ்பூ வின் புகழ் பெற்ற கலைச் சேவை வீடியோ;

மேலும் வாசிக்க"குஷ்பூ வின் பிரபலமான கில்மா வீடியோ"

Post Comment

Friday, 2 December 2011

குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா?

ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்..? குழந்தை எப்போது பிறக்கும்..? என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.

இப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.

பழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.

சோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.

அதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா..? என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.

இவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.

ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.
மேலும் வாசிக்க"குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா?"

Post Comment

மு.க.ஸ்டாலின் கைது..? கடும் அதிர்ச்சியில் தி.மு.க

மு.க.ஸ்டாலின் கைது..? கடும் அதிர்ச்சியில் தி.மு.க


நில அபகரிப்பு வழக்கு தி.மு.க முன்னாள் மந்திரிகள் உட்பட ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு தி.மு.க தலைமையை சுற்றி வளைத்திருக்கிறது.கருணாநிதி முதல்வராக பணியாற்றிய கடந்த 5 ஆண்டுகளில் பொது மக்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பு செய்ததாக அப்போதைய அமைச்சர்கள் மீது இன்று வரிசையாக வழக்குகள் பாய்ந்து வருகின்றன.சில முன்னாள் அமைச்சர்கள் சிறையிலும் சில அமைச்சர்கள் ஜாமீனிலும் இருக்கின்றன...முன்னாள் துணை முதல்வரும்,தி.மு.க பொருளாளருமாகிய ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தி.மு.க வினரை சந்தித்து ஆறுதல் கூறுவதையே தற்சமயம் கட்சிப் பணியாக செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் மீதும் ஒரு நில அபகரிப்பு புகார் வந்திருக்கிறது.அவர் வசிக்கும் வீட்டின் அருகே இருந்த அழகிய பங்களா வை தன் மகள் செந்தாமரை க்கு கொடுத்தால் என்ன யோசித்தாராம்.அந்த வீட்டுக்காரரிடம் இந்த வீட்டை எனக்கு கொடுத்துவிடுங்கள் என நண்பர்களை விட்டு நயமாக பேசியிருக்கிறார்.அவர் படியவில்லை.மிரட்டி வீட்டை எழுதி வாங்கிவிட்டார் என சொல்கிறார்கள்.

கொலைமிரட்டல் உட்பட,நில அபகரிப்பு என 5 வழக்குகள் மு.க .ஸ்டாலின்,அவர் மகன் உதயநிதி மீது தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தி.மு.க ஆட்சியிலேயே இந்த புகார் கொடுக்கப்பட்டது.துணை முதல்வ மீது புகார்னா போலீஸ் அப்படியே வழக்கு போட்டுடுமா.விரட்டி விட்டார்கள்.இப்போது ஆட்சி மாறியதும் புகார் பதிவாகியிருக்கிறது.

வழக்கு பதிந்த அன்று காலை திருச்சி கல்யாண வீட்டில் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு ஜெயலலிதா வை ஆத்திரமூட்டியிருக்க வேண்டும்.அதன் விளைவுதான் இது என்கிறார்கள்.

அ.தி.மு.,க வினர் மீதான நில அபகரிப்பு புகார்களை ஏன் விசாரிக்க வில்லை என காட்டமாக ஸ்டாலின் கேட்டார்.ஏன் சார்..நீங்கதான் 5 வருசமா ஆட்சியில இருந்தீங்க.உங்க அமைச்சர்கள் தான் அதிகார பலத்தோடு நிலங்களை எல்லாம் அதட்டி உருட்டி பிடுங்க முடியும்..அதிகாரம் இல்லாத அ.தி.மு.க வினர் அப்படி செஞ்சிருந்தா நீங்க சும்மா இருந்திருப்பீங்களா.

தி.மு.க வினர் மீதும்,ஸ்டாலின் மீதும் போடப்படும் நில அபகரிப்பு வழக்குகளை சட்டப்படி சந்திக்கலாமே எதற்கு பொய் வழக்கு என குதிக்கணும்.பொய் வழக்கா இருந்தா ,அதுவே முறிந்து விடுமே.பொதுமக்களும் இதற்கு வரவேற்பு கொடுப்பதை பார்த்தாலே இது புரியவில்லையா.

வழக்கை நான் சந்திப்பேன்.வாய்தா வாங்க மாட்டேன் என வீராவேசமாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.பார்க்கலாம்.இப்போது வழக்குகள் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு விட்டது.ஸ்டாலின் எந்த நேரமும் கைதாகலாம் என்ற் சூழல் தான் நிலவுகிறது..இதுவரை தி.மு.க தலைவரோ..தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியோ,மூத்த தி.மு.க தலைவர்களோ ஸ்டாலின் மீதான வழக்கு குறித்து அறிக்கை வெளியிடவில்லை.அவர் கைது செய்யப்பட்டால் தி.மு.க வின் உட்கட்சி பூசல் இருக்கிறதா இல்லையா என்பதும் தெரிந்துவிடும்.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்கு உட்பட பதிந்தும் தி.மு.க வினர் கப்சிப்பென இருப்பது பயத்திலா..அதிர்ச்சியிலா..என்பது இன்னும் புலனாக வில்லை.யார் முதலில் மவுனத்தை உடைக்கிறார்கள் என பார்ப்போம்!!
மேலும் வாசிக்க"மு.க.ஸ்டாலின் கைது..? கடும் அதிர்ச்சியில் தி.மு.க"

Post Comment

Thursday, 1 December 2011

சில்லறை வணிகம் அந்நிய முதலீடு -குமுதம் 7.12.2011

சில்லறை வணிகம் அந்நிய முதலீடு -குமுதம் 7.12.2011


நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.இதன் மூலம் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுக்குள் எளிதில் நுழைய முடியும்.இதனால் சாதாரண பெட்டிக் கடைகள் முதல் சிறிய நடுத்தர வியாபாரிகள் வரை பாதிக்கப்படுவார்கள்.

ஒரு கட்டத்தில் வருமானம் இழந்து கடையை இழுத்து மூட வேண்டிய நிலை வரும்.வாழ்க்கை நிர்மூலமகி விடும்.என்கிற அச்சத்தில் சில்லறை வனிகர்கள் இருக்கிறார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கூறுகிறார்;

அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கும் அரசின் எண்ணம்தான் இது.உதாரணமாக தனியார் வெளிநாட்டு வங்கிகளுக்கு அரசு அனுமதி கொடுத்ததைச் சொல்லலாம்.இப்ப நிலைமை என்னாச்சு.?

கோக்,பெப்ஸி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்த பின்னர்,உள்ளூர் குளிர் பானங்களையே காணோமே.ரசாயனங்கள் சேர்க்கபடுவதாக குற்றச்சாட்டு வந்தபின்னரும் அந்த நிறுவனங்களை வெளியேற்ற முடிந்ததா..?

அடுத்து உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நடுவே இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள் .அதனால் விலை குறையும் என்கிறார்கள் சரி நான் கேட்கிறேன்.காலம் காலமாக கிலோ இருபது ரூபாய்க்கு விர்ற பூண்டு சமீபத்தில் 300 ரூபாய் வரை போனது.அது எப்படி..? ஆனால் இப்போது அதன் விலை 60 ரூபாய் .எப்படி குறைந்தது..?இப்போது அந்த இடைத்தரகர்கள் எங்கே போய் விட்டார்கள்..?

பொதுவாக உற்பத்தியாகும் ஒரு பொருள் உரிமையாளர் ,ஏஜெண்ட்,சப்-ஏஜெண்ட்,வியாபாரி என நான்கு நிலைகளை கடந்துதான் மக்களிடம் போய் சேரும்.இதன் மூலம் சில்லறைக் கடைக்காரர்கள் பயன் பெறுவார்கல்.மாறாக வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருளை வாங்கி விற்கும்.இதனால் சில்லறை கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் ’’என காரணங்களை அடுக்குகிறார்.

மதுரையில் கோலோச்சிய மாப்பிள்ளை வினாயகர் சோடாக் கம்பெனியை வீழ்த்த பெப்ஸி கம்பெனி மிக மலிவாக தன் குளிர்பானத்தை விற்றது.மாப்பிள்ளை வினாயகர் சோடாக்கம்பெனி இதனால் கடும் நஷ்டத்தால் வீழ்ந்ததும்,அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி விட்டது.இதுபோல சித்ரா ,டொரினோ குளிர்பானம் கம்பெனி நிலையும் ஏற்பட்டது.போட்டிக்கு ஆள் இல்லை என்றதும் விலையை கடுமையாக ஏற்றிக் கொண்டார்கள்.அதாவது மக்கள் இவர்கள் தயாரிப்புக்கு மயங்கியதும் இவர்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டுவார்கள்.

ஃபைனல் டச்;சில்லறை வணிகம் இன்று 51 சதவீதம் அனுமதி என்பதற்கே நாடு கொந்தளித்து போய் உள்ளது.ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி யின் மூளையாக செயல்பட்ட முரசொலி மாறன் இந்தியாவில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை சில்லறை வணிகத்தில் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தி வந்தார்.இன்றும் கூட தி.மு.க அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக கூறிவிட்டு,மத்திய அரசுக்கு எதிர்ப்பு வந்து ஓட்டெடுப்பு நடத்தினால் மத்திய அரசுக்கு ஆதரவாகவே ஓட்டு போடுவோம் என இரட்டை நிலையை கடைபிடிக்கிறது.இந்த துரோகிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.-,புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நேர் பட பேசு நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் 30.11.2001 சொன்னது.


மேலும் வாசிக்க"சில்லறை வணிகம் அந்நிய முதலீடு -குமுதம் 7.12.2011"

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner